மருதகாசி பாடல்கள் - பக்கம் - 185
நீயும் நானும் ஒன்று-ஒரு நிலையில் பார்த்தால் இன்று! (நீயும்) அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்! விழியை எனக்கு கொடுத்த இறைவன் வழியை காட்ட மறுத்து விட்டான்! (நீயும்) எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம் என்பதுனக்கும் தெரிய வில்லை! எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம் என்ப தெனக்கும் புரியவில்லை! (நீயும்) உறவுமில்லை பகையுமில்லை உயர்வும் தாழ்வும் உனக்கில்லை! இரவுமில்லை பகலுமில்லை எதுவும் உலகில் எனக்கில்லை! (நீயும்) |
கொடுத்து வைத்தவள்-1963
பாடியவர் : P. சுசிலா
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 185 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - நீயும்