மருதகாசி பாடல்கள் - பக்கம் - 184
சந்தேகம் தீராத வியாதி-அது வந்தாலே தடுமாறும் அறிவென்னும்-ஜோதி! (சந்) சிந்தித்துப் பார்க்க விடாது-யாரையும் நிந்தித்துப் பழிபேச அது தயங்காது! (சந்) தான் பெற்ற பிள்ளையைத் தாயாரின் உள்ளமே தவறாக எண்ண வழி செய்யுமே! காணாத ஏதேதோ கற்பனைகள் காட்டுமே! வீணாக முன் கோப மூட்டுமே! தேன் சொட்டும் வாக்கையே விஷமாக மாற்றுமே! தீயாகப் பிறர் நெஞ்சை வாட்டுமே! தெளிவான மனதிலும் குழப்பம் உண்டாக்குமே! திசை மாறித் திண்டாட வைக்குமே! (சந்) |
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 182 | 183 | 184 | 185 | 186 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 184 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -