மருதகாசி பாடல்கள் - பக்கம் - 157
கெஜல்
அறிவிருந்தும் ஆராய்ந்து பாராமலே! அன்பிருந்தும் அதன் குரலைக் கேளாமலே! அணைகடந்த காட்டாற்று வெள்ளம் போலே! - மனதிலே! ஆவேசம் கொண்டதாலே! |
பாட்டு
கோபம் உண்டானதே! ஒன்றாய்கலந்தே குலாவிய குடும்பம் ரெண்டானதே!-முன் -(கோபம்) |
கெஜல்
தன்னலம் கண்களை மறைத்ததாலே தன் தவறைத் தான் உணரா நிலையினாலே! தனக்கு ஒருநீதி பிறர்க்கு ஒருநீதி என்று தர்மநெறி முறைதவறி நினைத்ததாலே! |
பாட்டு
அமுதையும் நஞ்சாக வெறுத்திடுதே! அன்பெனும் வலையை அறுத்திடுதே! அமைதி இல்லாமல் அலைந்திடுதே! இவையாவும் முருகா உன் லீலையா? -(கோபம்) |
வாழவைத்த தெய்வம்-1959
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 157 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கோபம்