மருதகாசி பாடல்கள் - பக்கம் - 159
ஜரிகைப் பட்டு சலசலக்க சாந்துப் பொட்டு பளபளக்க புருஷன் மனசு கிறுகிறுக்க புதுக் குடித்தனம் நடத்தப் போற கல்யாணப் பொண்னே! கல்யாணப் பொண்னே! கவனம் வையடி! வரவுக் கேத்த செலவு பண்ணும் வழி மொறையை தெரிஞ்சுக்கோ! மாமன் மாமி நாத்தி மனம் கோணாமலே நடந்துக்க புருஷன் குணம் போறப் போக்கு நடத்தைகளைப் புரிஞ்சுக்க! புத்தியோடு நடந்து நல்ல பேரும் புகழும் தேடிக்க! (கல்) அரச்சு மஞ்சளை கொழச்சு முகத்தின் அழகு வளரப் பூசிக்க! சிரிச்ச முகம் சீதேவியா இனிக்க இனிக்கப் பேசிக்க! அசட்டையாக இல்லாமலே அலுவல்களைப் பார்த்துக்க! அடக்க ஒடுக்கம் அன்பையும் உன் அருந் துணையா சேத்துக்க! (கல் ) கண்ணகி போல் பேரெடுக்கு கற்பு நெறியை காத்துக்க! ஆனா கணவன் வேறு மாதவியை தேடிக்காமெ பாத்துக்க! பொண்ணு புள்ள ரெண்டு ஒண்ணை சிக்கனமா பெத்துக்க! புட்டிப் பாலு தய வில்லாமெ கச்சிதமா வளர்த்துக்க! (கல்) |
சமயசஞ்சீவி.-1957
இசை: G, ராமநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 157 | 158 | 159 | 160 | 161 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 159 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -