மருதகாசி பாடல்கள் - பக்கம் - 156
எங்குமே சுத்துவோம் இஷ்டம் போலே! எங்களில் கட்சியால் சண்டை இல்லே! ஏய்ப்பவரில்லே-ஏழையுமில்லே ஏனென்றால் பணமில்லே! (எங்) தங்கவோ ஓரிடம் சொந்தமும் இல்லே ! சட்டமும் திட்டமும் எங்க கூட்டத்துக்கில்லே! ஜாதியுமில்லே! பேதமுமில்லே! ஏனென்றால் படிப்பில்லே! (எங்) கூப்பனோ ரேஷனோ வாங்குவதில்லே! காப்பியும் டி.பனும் நாங்க கண்டதுமில்லே! காய்ச்சலுமில்லே! டாக்டருமில்லே! ஏனென்றால் அது இல்லே! எங்களுக்கு அது இல்லே! (எங்) ஏட்டிலே எங்க பேர் காட்டவுமில்லே! ஒட்டுகள் போடவும் இன்னும் உரிமையு மில்லே! கேட்டதுமில்லே! தந்ததுமில்லே! ஏனென்றால் பலனில்லே! (எங்) |
ஜமீன்தார்-1952
இசை: G. ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 156 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஏனென்றால், இல்லே