மருதகாசி பாடல்கள் - பக்கம் - 148
பெண்கள்: ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே-நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே-நாம் அழியாத புகழ் தன்னை தேடுவோமே-கற்பை அணியாக நாம் என்றும் சூடுவோமே என்றும் (ஆனந்தமாய்) கண்ணகியின் மரபில் வந்த கன்னியர்கள் என்பதை நாம் எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே! -பெண் குலத்தின் பெருமை தன்னை எடுத்துச் சொல்வோமே! கற்பெனும் தீயால்-பெரும் அற்புதம் செய்தாள்-அந்த பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே! என்றும் (ஆனந்தமாய்) ஆஹா... அனுசூயை எனும் ஒரு பெண்ணாள் அணையாத கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்! சிவனோடு ப்ரம்மாவை திருமாலை முன்னாள் சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே-என்றும் (ஆனந்தமாய்) நாதனுயிர் காத்திடவே ஆதவனை மறைத்துவிட்ட மாதரசை மனதில் கொள்வோமே-நளாயினி மகிமைதனை எடுத்துச் சொல்வோமே! கற்பெனும் தீயால்-பெரும் அற்புதம் செய்தாள்-அந்தப் பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே! என்றும் (ஆனந்தமாய்) |
வண்ணக்கிளி-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: P. சுசீலா & ஈஸ்வரி குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 146 | 147 | 148 | 149 | 150 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 148 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - என்றும், ஆனந்தமாய், சொல்வோமே, நாம்