மருதகாசி பாடல்கள் - பக்கம் - 150
பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு காலமில்லே! போலியெல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம்-இந்த போக்கு மாற செலுத்த வேணும் கண்ணோட்டம்! கள்ளர்களும் கயவர்களும் கண்ணியவான் போர்வையிலே கொள்ளையிட்டுப் பணத்தை சேத்து குவிப்பதா? நல்ல மனம் உள்ளவங்க சில்லறைகள் பார்வையிலே நாணய மில்லாதவராய் தவிப்பதா? (பொ) வெள்ளைசள்ளையிருந்தாத்தான் மதிப்பதா?-அது இல்லையின்னா காலில் போட்டு மிதிப்பதா?-இனி இந்தநிலை மாறிடவே இன்ப நிலை நேர்ந்திடவே ஒன்றுபட்டு உறுதியோடு உழைக்கனும்! உள்ளபடி வயிறெரியும் . (பொ) உதடுமட்டும் பழம் சொரியும் தில்லு முல்லு திருகு தாளக் கூட்டமே. பல்லை காட்டிக்கிட்டு பாடிகார்டா சுத்திக் கிட்டு குல்லாப் போட்டு செய்யுது ஆர்ப்பாட்டமே (பொ) மொள்ளே மாறிக் கும்பல் குணம் மாறனும்-அதன் மூளையிலே சொறணை கொஞ்சம் ஏறணும்-அது நல்லபடி நடந்திடனும்! நம்ம நிலை உயர்ந்திடனும் நல்லவங்க அதுக்கு நாளும் உழைக்கனும்! (பொல்லாத) |
நான் சொல்லும் ரகசியம்-1959
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 148 | 149 | 150 | 151 | 152 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 150 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -