மருதகாசி பாடல்கள் - பக்கம் - 136
மண்ணிலே பொன் கிடைக்கும்! மரத்திலே கனி கிடைக்கும்! எண்ணத்திலே தாழ்ந்துவிட்ட மனிதர்களால்-இந்த உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்! சின்னஞ்சிறு சிப்பிகூட முத்து தரும்!--கொட்டும் தேனீக்கள் சுவை மிகுந்த தேனைத்திரும்! செங்கரும்பு உருவிழந்தும் சாறு தரும்!-தான் செத்த பின்னும் யானை கூட தந்தம் தரும்! எண்ணத்திலே தாழ்ந்து விட்ட மனிதர்களால்-இந்த உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்! . மனிதராகப் பிறந்ததினால் மனிதரில்லை-பெரும் மாளிகையில் வசிப்பதனால் உயர்வுமில்லை! குணத்தால் சிறந்தவரே உயர்ந்தவராம்-அந்தக் கொள்கையுள்ள நல்லவரே மனிதர்களாம்! |
நல்லவன் மாழ்வாந்1961
இசை: T. R. பாப்பா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 136 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கிடைக்கும், தரும்