மருதகாசி பாடல்கள் - பக்கம் - 135

ஆண்: காலணா மிஞ்சாதையா! காலணா மிஞ்சாதையா! பெண்: ஆலையில் பாடு படும் ஏழைகள் வாழ்வினிலே (காலணா) ஆண்: ஜாலியாய் வாழ்ந்திடலாம் ஜாலியாய் வாழ்ந்திடலாம் நினைத்தால் உலகையெல்லாம் பணத்தால் வாங்கிடலாம்! பெண்: பாட்டாளியே வறுமைக் – கூட்டாளியே-எண்ணிப் பாரய்யா உன்நிலையை இந்நாளிலே! ஆண்: நோட்டாக வந்த கூட்டாளியே-மனக் கோட்டையெல்லாம் உன்னால் ஈடேறும்! பெண்: ஒண்ட நிழல் சொந்தமில்லே! ஒய்வுமட்டும் சிறிதுமில்லே! ஆண்: கண்டபடி களிப்புறவே காலந்தான் போதவில்லே! கோரஸ்: ஆலையில் பாடுபடும் ஏழைகள் வாழ்வினிலே! (காலணா) ஆண்: பணநாதனே உந்தன் அருட் பார்வையால் -இந்தப் பார்மீது உழைக்காமல் பொருளீட்டுவோம்! பெண்: பசியாறவே ஏழ்மைப் பகைதிரவே - பகல் இரவென்றும் பாராமல் பணியாற்றுவோம்! பெண்: காலம் மாறிடுமா! கவலை தீர்ந்திடுமா? ஆலையில் பாடுபடும் ஏழைகள் வாழ்வினிலே (காலனா) |
அவன் அமரன்-1958
இசை: இப்ராஹிம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 135 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், காலணா, வாழ்வினிலே, ஆலையில், ஏழைகள்