மருதகாசி பாடல்கள் - பக்கம் - 138

(தொகையறா)
அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்! அழகிருக்கும் பணமீருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்! |
பாட்டு
இது தெரியும்! அது தெரியாது! ஏழடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக எத்தனையோ தப்புத்தண்டா பண்ணுவாங்க! ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால் ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க! ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பிலே கிழிசல் ஒரு கோடி இருக்கும்!-தொழி லாளி துவைச்சு உடுத்தும் உடையிலே தையல் பல ஒடி இருக்கும்! கனதனவானின் நெஞ்சில் எந்நாளும் கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்! கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில் உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்! (இது) |
அல்லி பெற்ற பிள்ளை-1959
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 136 | 137 | 138 | 139 | 140 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 138 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -