தமிழ் - தமிழ் அகரமுதலி - பசுங்கிளி முதல் - பஞ்சகாலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பசுங்கிளி | பச்சைக்கிளி . |
| பசுங்குடி | மேன்மையான குடி ; உழவன் . |
| பசுங்குழவி | இளங்குழந்தை . |
| பசுங்கூட்டு | மணக்கலவை . |
| பசுங்கொடி | அறுகம்புல் . |
| பசுஞானம் | ஆன்மசொரூப ஞானம் ; சிற்றறிவு ; ஆன்மநிலை . |
| பசுத்துவம் | சீவத்தன்மை . |
| பசுத்தொழு | மாட்டுக்கொட்டில் . |
| பசுதருமம் | காண்க : பசுபுண்ணியம் ; புணர்ச்சி ; இம்மை இன்பத்துக்காகச் செய்யும் செயல் . |
| பசுதை | விலங்குத்தனம் . |
| பசுந்தமிழ் | செந்தமிழ் . |
| பசுந்தரை | புல்தரை . |
| பசுநரம்பு | பெரும்பாலும் கெட்ட இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் , சிரை . |
| பசுநாகு | கடாரிக்கன்று . |
| பசுநிலை | பசுக்கொட்டில் . |
| பசுபட்டி | பசுமந்தை . |
| பசுப்புரை | காண்க : பசுநிலை . |
| பசுபதி | ஆன்மாக்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் . |
| பசுபுண்ணியம் | உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல் . |
| பசுபோதம் | ஆன்மவறிவு . |
| பசும்பட்டு | நேர்த்தியான பட்டு . |
| பசும்பதம் | சமைத்தற்குரிய அரிசி முதலியன . |
| பசும்பயறு | பாசிப்பயறு . |
| பசும்பிடி | பச்சிலைமரம் . |
| பசும்பிறப்பு | சமணசமயங் கூறும் அறுவகைப் பிறப்புகளுள் மூன்றாவது . |
| பசும்புண் | புதுப்புண் . |
| பசும்புல் | பச்சைப்புல் ; விளைபயிர் . |
| பசும்பை | வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை . |
| பசும்பொன் | மாற்றுயர்ந்த பொன் ; காண்க : கிளிச்சிறை . |
| பசுமஞ்சள் | மஞ்சள்வகை . |
| பசுமந்தை | ஆநிரை , பசுக்கூட்டம் . |
| பசுமம் | திருநீறு . |
| பசுமை | பச்சைநிறம் ; குளிர்ச்சி ; இளமை ; அழகு ; புதுமை ; சாரம் ; நன்மை ; செல்வி ; உண்மை ; பொன்னிறம் ; செல்வம் ; சால்வை வகை . |
| பசுவதி | சாது . |
| பசுவன் | பசுக்கன்றின் வயிற்றில் உள்ள பாலை உறையச்செய்யும் பை ; கோரோசனை ; கோலாட்ட விழாவில் காளைபோல் மண்ணால் செய்துவைத்துப் பெண்கள் வணங்கும் உருவம் . |
| பசுவாசாரம் | சத்திபூசை . |
| பசுவெயில் | மாலைவெயில் . |
| பசேரெனல் | பச்சைநிறமாயிருத்தல் . |
| பசை | ஒட்டும் பசை ; பிசின் ; சாரம் ; ஈரம் ; பக்தி ; அன்பு ; பற்று ; இரக்கம் ; பயன் ; செல்வம் ; கொழுப்பு ; முழவின் மார்ச்சனைப் பண்டம் ; உசவு . |
| பசைத்தல் | மை முதலியன நன்றாய்ப் பதிதல் . |
| பசைதல் | அன்புகொள்ளல் ; நட்புக்கொள்ளுதல் ; செறிதல் ; இளகுதல் ; மை முதலியன நன்றாய்ப் பதிதல் ; பிசைதல் ; தாராளமாதல் ; ஒட்டவைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; பதமாக்குதல் . |
| பசைந்தார் | நண்பர் . |
| பசையாப்பு | உலகப் பற்றாகிய பந்தம் . |
| பசைவு | அன்பு . |
| பஞ்ச | ஐந்து . |
| பஞ்சக்கிலேசம் | ஐவகைத் துன்பமான அவிச்சை , தன்முனைப்பு , அவா , ஆசை , வெகுளி . |
| பஞ்சகஞ்சுகம் | காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் என்னும் ஐந்து ஆன்மதத்துவச் சட்டைகள் . |
| பஞ்சகதி | குதிரையின் ஐவகை நடையான மயில்நடை , மல்லநடை , குரக்குநடை , ஏறுநடை , புலிநடை என்பன . |
| பஞ்சகந்தம் | ஐவகை முகவாசனைப் பண்டம் ; உருவம் , வேதனை , குறிப்பு , பாவனை , விஞ்ஞானம் என ஐவகைக் கந்தங்கள் ; இலவங்கம் , ஏலம் , கருப்பூரம் , சாதிக்காய் , தக்கோலம் என்னும் ஐவகை மணச்சரக்கு . |
| பஞ்சகம் | ஐந்தன் கூட்டம் . |
| பஞ்சகருவி | தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசை உண்டாக்கும் கருவிகள் . |
| பஞ்சகலியாணி | நான்கு கால்களிலும் முகத்திலும் வெண்மை நிறமுள்ள சிவப்புக் குதிரை . |
| பஞ்சகவ்வியம் | பசுவினின்றுண்டாகும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்பவற்றின் கலப்பு . |
| பஞ்சகன்னியர் | ஒழுக்கத்தில் சிறந்த அகலிகை , சீதை , தாரை , திரௌபதி , மண்டோதரி என்னும் ஐந்து மகளிர் . |
| பஞ்சகாலம் | காலை , சங்கவ காலம் , நண்பகல் , அபரான்ன காலம் , மாலை என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள் ; அகவிலை குறைந்த காலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 700 | 701 | 702 | 703 | 704 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பசுங்கிளி முதல் - பஞ்சகாலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஐந்து, என்னும், காலம், ஐவகை, முதலியன, காண்க, நன்றாய்ப், காலை, பண்டம், பதிதல், உருவம், செய்யும், பசுபுண்ணியம், பசுநிலை, பசுமந்தை, செல்வம், சாரம், அன்பு

