தமிழ் - தமிழ் அகரமுதலி - தோற்கைத்தாளம் முதல் - தௌவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தோற்கைத்தாளம் | முன்கையில் அணியும் தோற்கவசம் . |
| தோற்சித்தை | எண்ணெய் வைக்க உதவும் தோலாலான பாத்திரவகை . |
| தோற்செருப்பு | செருப்புவகை . |
| தோற்செவி | புறச்செவி ; புறச்செவியுடைய உயிரினங்கள் . |
| தோற்பரம் | கேடகம் ; நெடுஞ்செருப்பு . |
| தோற்பாடி | வேசி ; இழிஞன் . |
| தோற்பாய் | தோலால் அமைந்த தவிசு . |
| தோற்பாவை | தோலால் செய்யப்பட்ட பொம்மை ; காண்க : தோற்பாவைக்கூத்து . |
| தோற்பாவைக்கூத்து | தோற்பாவையைக் கொண்டு ஆட்டும் கூத்து . |
| தோற்பு | தோல்வி . |
| தோற்புரை | தோலின்துளை ; மேற்றோல் ; சவ்வுள்ள உடலிடம் . |
| தோற்பை | தோலால் செயயப்பட்ட பை ; உடம்பு ; துளையுள்ள தோல்குல்லா . |
| தோற்றம் | காட்சி ; விளக்கம் ; சாதி ; படைப்பு ; சாயை ; புகழ் ; பார்வை ; உயர்ச்சி ; உற்பத்தி ; பிறப்பு ; உருவம் ; தன்மை ; வலிமை ; சொல்மாலை ; உறுப்பு ; உத்தேசம் ; நாடகப் பிரதேசம் ; எண்ணம் ; மாயை ; இருவகைத் திணை ; காண்க : உயிர்த்தோற்றம் . |
| தோற்றரவு | காட்சி ; உற்பத்தி ; வெளிப்படல் ; உயர்பிறப்பு ; ஆவேசம் . |
| தோற்றல் | தோன்றுகை ; வலிமை ; புகழ் ; தோல்வி ; வீண் எண்ணம் . |
| தோற்றவொடுக்கம் | பிறப்பிறப்பு . |
| தோற்றனம் | சுணைக்கேடு . |
| தோற்றாங்கொள்ளி | அஞ்சிப் புறங்கொடுத்தோடுபவன் . |
| தோற்று | தோன்றுகை . |
| தோற்றுதல் | காண்க : தோன்றுதல் ; தோன்றச் செய்தல் ; பிறப்பித்தல் . |
| தோற்றுருத்தி | உலைத்துருத்தி ; உடம்பு . |
| தோற்றுவாய் | தொடக்கம் ; தொடங்குமிடம் ; பாயிரம் ; பின்வருவதை முன்னர்க் கூறும் குறிப்பு . |
| தோற்றுவித்தல் | தோன்றச் செய்தல் ; உண்டாக்கல் ; பிறப்பித்தல் . |
| தோற்றுன்னர் | சக்கிலியர் ; செம்மார் . |
| தோறு | ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் . |
| தோறும் | ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் . |
| தோன்றக்கொடுத்தல் | போதுமானபடி கொடுத்தல் . |
| தோன்றல் | தோற்றம் ; தலைமை ; உயர்ச்சி ; விளக்கம் ; தலைவன் ; முல்லைநிலத்தலைவன் ; தமையன் ; அரசன் ; மகன் ; மொழிப்புணர்ச்சியில் வரும் தோன்றல் விகாரம் . |
| தோன்றல்விகாரம் | மொழிப்புணர்ச்சியில் எழுத்து , சாரியை முதலியன தோன்றுகை . |
| தோன்றாத்துணை | பிறரறியாமல் உதவுவோனாகிய கடவுள் . |
| தோன்றாவெழுவாய் | ஒரு தொடரில் வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய் . |
| தோன்றி | இரத்தம் ; காந்தள் ; ஒரு மலை . |
| தோன்றிகர் | வணிகர் ; செல்வர் . |
| தோன்றுதல் | கண்காண வெளிப்படல் ; அறியப்படுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; விளங்குதல் ; நிலைகொள்ளுதல் ; வருதல் ; சாரியை முதலியன சொற்களிடையே வருதல் ; உண்டாதல் . |
| தௌ | ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+ஔ) . |
| தௌகித்திரன் | மகளுக்கு மகன் . |
| தௌகித்திரி | மகளுக்கு மகள் . |
| தௌசாரம் | குளிர் ; பனி . |
| தௌத்தியம் | தூது ; துதி ; ஒருத்தியைக் கூட்டிவிடுகை . |
| தௌதசிலம் | பளிங்கு . |
| தௌதம் | வெள்ளி ; துவைத்த ஆடை ; குளியல் . |
| தௌதிகம் | முத்து . |
| தௌர்ப்பல்லியம் | வலுவின்மை . |
| தௌர்ப்பாக்கியம் | நற்பேறின்மை . |
| தௌரிதகம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌரிதம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌரீதகம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌலம் | துலாக்கோல் . |
| தௌலிகன் | வன்னக்காரன் , ஓவியன் . |
| தௌலேயம் | ஆமை . |
| தௌவல் | கேடு . |
| தௌவாரிகன் | வாயில் காப்போன் . |
| தௌவுத்தல் | கெடுதல் ; தத்துதல் . |
| தௌவை | காண்க : தவ்வை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 629 | 630 | 631 | 632 | 633 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தோற்கைத்தாளம் முதல் - தௌவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வரும், தோன்றுகை, தோலால், விரைவு, குதிரைநடை, பொருளில், என்னும், இடைச்சொல், பொழுதும், ஒவ்வொரு, மகன், வருதல், மகளுக்கு, முதலியன, சாரியை, ஒவ்வொன்றும், மொழிப்புணர்ச்சியில், தோன்றல், செய்தல், காட்சி, விளக்கம், தோற்றம், உடம்பு, தோற்பாவைக்கூத்து, தோல்வி, புகழ், உயர்ச்சி, தோன்றுதல், தோன்றச், வெளிப்படல், எண்ணம், உற்பத்தி, வலிமை, பிறப்பித்தல்

