தமிழ் - தமிழ் அகரமுதலி - தோண்டி முதல் - தோரணக்கால் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தோண்டி | தண்ணரிறைக்குஞ் சிறு பாத்திரம் ; காண்க : கரந்தை ; வறட்சுண்டிச்செடி . |
| தோண்டுச்சால் | நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால் . |
| தோண்டுதல் | அகழ்தல் ; குடைதல் ; முகத்தல் ; விவரம் விசாரித்தல் ; பண்டம் இறக்குதல் . |
| தோண்மாற்றுதல் | மணமகனும் மணமகளும் மாலைமாற்றுதல் ; சுமையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றிக்கொள்ளுதல் ; ஒருவர் தோட்சுமையை மற்றவர் தோளுக்கு மாற்றுதல் . |
| தோண்முதல் | புயவலி . |
| தோண்மேல் | பிடரி . |
| தோண்மை | காண்க : தோண்முதல் . |
| தோணாமுகம் | அகழ்சூழ்ந்த பெரிய நகரம் . |
| தோணி | ஓடம் ; மிதவை ; மரக்கலம் ; நீர் ; நீரத்தொட்டி ; சேறு ; மதிலுறுப்பு ; அம்பு ; இரேவதி நட்சத்திரம் ; சிறுவழுதுணங்காய் . |
| தோணிக்காரன் | படகோட்டி . |
| தோணித்துறை | துறைமுகம் . |
| தோணிதள்ளுதல் | ஒடத்தை நீரில் விடுதல் . |
| தோணிதாங்குதல் | படகைக் கழையால் தள்ளுதல் . |
| தோணிப்பாலம் | தோணிபோல் அமைக்கப்படும் கற்பாலம் . |
| தோணிபுரம் | சீகாழி . |
| தோணியம் | அம்பு . |
| தோணுதல் | தோன்றுதல் . |
| தோணோக்கம் | மகளிர் விளையாட்டுவகை . |
| தோத்திரப்பா | துதிப்பாட்டு . |
| தோத்திரப்பாட்டு | துதிப்பாட்டு . |
| தோத்திரம் | புகழ்ச்சி ; வணக்கமொழி ; காண்க : தோத்திரப்பாட்டு . |
| தோத்திரித்தல் | புகழ்தல் . |
| தோதகத்தி | நீண்ட மரவகை ; வஞ்சகி ; கற்பொழுக்கமற்றவள் . |
| தோதகம் | வருத்தம் ; வஞ்சகம் ; சாலவித்தை ; கற்பு ஒழுக்கமின்மை . |
| தோதகமாடுதல் | தொந்தரவுபண்ணுதல் ; ஒழுக்கமற்றிருத்தல் . |
| தோதகன் | வஞ்சகன் ; ஒழுக்கமற்றவன் ; கடுகடுப்புள்ளவன் . |
| தோதம் | பசுவின் கன்று ; வருத்தம் . |
| தோதனம் | அங்குசம் ; ஈட்டி . |
| தோது | ஏந்து , வசதி ; பொருத்தம் ; ஒப்பு ; வீதம் ; உபாயம் ; தொடர்பு ; போட்டி . |
| தோப்பாடி | துட்டன் , தீயன் . |
| தோப்பாண்டி | திருநந்தவனப் பணி செய்யும் பரதேசி . |
| தோப்பி | நெல்லாற் சமைத்த கள் ; கள் . |
| தோப்பு | சோலை . |
| தோப்புக்கண்டம் | இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் ; பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல் . |
| தோப்புகரணம்போடுதல் | இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் ; பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல் . |
| தோப்பை | திண்மையின்றிப் பருத்தது ; தொங்குசதை . |
| தோம் | குற்றம் ; தீமை ; துன்பம் . |
| தோம்பு | சிவப்பு ; நிலவிவரக் கணக்கு . |
| தோமம் | கூட்டம் ; சாமவேதத்தின் தொகுதி வகை . |
| தோமரம் | எறியாயுதம் ; கைவேல் ; தண்டாயுதம் ; ஒரு வாச்சியவகை . |
| தோய்ச்சல் | உறைகை ; இரும்பைத் துவைச்சலிடுகை . |
| தோய்த்தல் | நனைத்தல் ; துவைச்சலிடுதல் ; சாயமேற்றுதல் ; ஆடைதுவைத்தல் ; உறையச் செய்தல் . |
| தோய்தல் | முழுகுதல் ; நனைதல் ; நிலத்துப்படிதல் ; செறிதல் ; அணைதல் ; உறைதல் ; கலத்தல் ; பொருத்துதல் ; முகத்தல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; அகப்படுதல் ; நட்டல் ; துவைச்சலிடுதல் . |
| தோய்ந்தார் | நண்பர் . |
| தோய்ப்பன் | சுகியன் என்னும் பணிகாரம் . |
| தோய்ப்பாடி | தீயன் . |
| தோய்ப்பு | காண்க : தோய்ச்சல் . |
| தோய்பனி | மிகுபனி . |
| தோயசம் | தாமரை . |
| தோய்சூசகம் | தவளை . |
| தோயதம் | மேகம் ; வெண்ணெய் ; நெய் . |
| தோயதரம் | நீரைக்கொண்டதான மேகம் . |
| தோயதி | கடல் . |
| தோயதிப்பிரயம் | காண்க : இலவங்கம் . |
| தோயப்பம் | சுகியன் ; தோசை . |
| தோயபாணம் | காண்க : பொடுதலை . |
| தோயம் | நீர் ; கடல் . |
| தோயல் | தோய்தல் ; கலத்தல் ; குளித்தல் ; தயிர் . |
| தோயல்வாய்த்தல் | சமயம்வாய்க்கை . |
| தோர்த்தல் | தோல்வியுறல் ; ஒப்பில் தாழ்தல் ; இணங்குதல் ; இழத்தல் . |
| தோர்வை | தோல்வி . |
| தோரணக்கந்து | கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் . |
| தோரணக்கல் | நீர் ஆழம் அறியுங் கல் . |
| தோரணக்கால் | காண்க : தோரணகம்பம் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் ; திருவாசிக்கால் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 627 | 628 | 629 | 630 | 631 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தோண்டி முதல் - தோரணக்கால் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீர், துவைச்சலிடுதல், தோய்தல், தோய்ச்சல், நடத்தல், சொன்னபடியெல்லாம், கலத்தல், மேகம், கட்டும், கால், தொங்கல், அலங்காரத், பிறர், கடல், சுகியன், முடக்கியிருந்து, துதிப்பாட்டு, தோத்திரப்பாட்டு, அம்பு, தோண்முதல், முகத்தல், தோளுக்கு, வருத்தம், தீயன், பிடித்து, இருகால், செவியைப், மாறிச், இருகை, எழுதல்

