முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தொகையகராதி முதல் - தொட்டுக்கொள்ளுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தொகையகராதி முதல் - தொட்டுக்கொள்ளுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தொகையகராதி | சதுரகராதியில் தொகையுடைய பொருளைக் காட்டும் அகராதி ; எண் தொகையால் சுட்டும் பொருள் விளக்க அகராதி . |
தொகையடியார் | ஒத்த தன்மையால் ஒரு நெறிப்பட்ட தொண்டர் குழு ; ஒன்பது பிரிவனராயுள்ள கூட்டு அடியார் . |
தொகையாக்குதல் | காண்க : தொகைப்படுத்துதல் . |
தொகையுவமம் | பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை . |
தொகையேற்றுதல் | சிறுகச்சிறுக கொடுத்துக் கடன் ஏற்றுதல் ; எண் கூட்டுதல் ; கணக்குப் பதிதல் . |
தொகைவிரி | விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை . |
தொங்கட்டான் | உடையைத் தளர்வாக்க் கட்டுகை ; தொங்கலாயுள்ள காதணிவகை . |
தொஙங்கணி | தொங்கலாயுள்ள அணிவகை . |
தொங்கல் | தொங்குதல் ; தொங்கற்பொருள் ; ஒட்டுப்பற்றியிருத்தல் ; அலங்காரத் தூக்கம் ; அணிகலத் தொங்கல் ; அணிகலக் கடைப்பூட்டு ; காதணிவகை ; முன்றானை ; பெண்கள் மேலாக்கு ; பருத்த பூமாலை ; ஆண்மயிர் ; பீலிக்குஞ்சம் ; மயில்தோகை ; வெண்குடை ; மகளிர் ஐம்பாலுள் ஒருவகை ; குடை ; சாமரம் முதலிய விருது . |
தொங்கல்போடுதல் | மேலாக்கிடுதல் . |
தொங்கல்விழுதல் | குறைவாதல் . |
தொங்கன் | கள்வன் . |
தொங்காரப்பாய்ச்சல் | குதிரை முதலியவற்றின் ஒட்டம் . |
தொங்காரம் | ஏளனம் . |
தொங்கி | கள்ளி . |
தொங்கிசம் | கேடு ; துன்பம் . |
தொங்கிப்பாய்தல் | குதித்தோடுதல் ; அகங்கரித்தல் . |
தொங்கிப்போதல் | வைத்தது காணாமற்போதல் ; பொருள் மோசம் போதல் ; வழியிற்களைத்துத் தங்குதல் ; சாதல் ; ஒடிப்போதல் . |
தொங்குகாது | வடிந்த காது ; மாட்டுக் குற்றவகை . |
தொங்குகிழவன் | தொண்டுகிழவன் . |
தொங்குங்கல் | ஆட்டுஉரல் . |
தொங்குதல் | நூலுதல் ; அண்டிக்கிடத்தல் ; நிலைத்துநிற்றல் ; இருத்தல் ; திடமாதல் ; குதித்தல் ; சாதல் ; முடிவுபெறாது தாமதித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; கிடைத்தல் . |
தொங்குபறிவு | ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் ; விலக வழிபார்த்தல் . |
தொங்குபாலம் | நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம் . |
தொங்குபுழுதி | வயலில் இறுகாது நிற்கும் புழுதி . |
தொசம் | கொடி . |
தொட்ட | பெரிய . |
தொட்டகுறை | முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை ; தொடங்கிவிட்ட முற்றாப்பணி ; பயன்துய்க்காமை . |
தொட்டடி | செய்யுளின் முதலடி . |
தொட்டப்பன் | தலைதொட்ட ஞானத்தந்தை . |
தொட்டம் | சிறுநிலம் . |
தொட்டல் | தீண்டல் ; உண்டல் ; கட்டுதல் ; தோண்டல் . |
தொட்டவிரல்தறித்தான் | பெருங்குறிஞ்சாக் கொடி . |
தொட்டாட்டுமணியம் | குற்றேவல் . |
தொட்டாட்டுவேலை | குற்றேவல் . |
தொட்டாய்ச்சி | ஞானத்தாய் . |
தொட்டால்வாடி | தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை . |
தொட்டாற்சிணுங்கி | தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை . |
தொட்டாற்சுருங்கி | தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை . |
தொட்டி | நீர்த்தொட்டி ; மரம் , விறகு முதலியன விற்குமிடம் ; வேலியடைப்பு ; அம்பாரி ; கள் ; சிற்றூர் ; அழி ; குப்பைத்தொட்டி ; காண்க : தொட்டிக்கட்டு ; சிறுகாஞ்சொறி ; சிற்றாமுட்டி ; அபராதம் . |
தொட்டிக்கட்டு | வீட்டின் நடுவில் திறந்தவெளியுடன்கூடிய சதுரக்கட்டு . |
தொட்டிக்கால் | கவட்டுக்கால் . |
தொட்டிச்சி | தொட்டியச் சாதிப் பெண் . |
தொட்டிமை | ஒற்றுமை ; அழகு . |
தொட்டியம் | ஒரு நாடு ; ஒரு மொழி ; சூனிய வித்தை . |
தொட்டில் | குழந்தைகளை வைத்து ஆட்டுஞ்சிறு கட்டில் ; தூளி ; நீர்த்தொட்டி . |
தொட்டிலிடுதல் | பிறந்த குழந்தையை முதன் முறையாய்த் தொட்டிலில் இடும் சடங்கு . |
தொட்டிவயிறு | பெருவயிறு . |
தொட்டிவீடு | தொட்டிக்கட்டுள்ள வீடு . |
தொட்டு | தொடங்கி ; குறித்து . |
தொட்டுக்காட்டுதல் | ஒன்றைச் செய்துகாட்டுதல் . |
தொட்டுக்கொண்டுபோதல் | ஒன்றைச் சுமப்பது போல் தொட்டுச்செல்லுகை ; பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல் ; பிணச்சடங்கில் துணிமூலை பிடித்தல் . |
தொட்டுக்கொள்ளுதல் | எட்டிப்பிடித்தல் ; உணவுத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிய அளவு உட்கொள்ளுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 620 | 621 | 622 | 623 | 624 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொகையகராதி முதல் - தொட்டுக்கொள்ளுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சுருங்கும், தொட்டால், செடிவகை, சுண்டிவகை, குற்றேவல், தொடங்கிவிட்ட, ஒன்றைச், தொட்டிக்கட்டு, நீர்த்தொட்டி, கொடி, இருத்தல், நிற்கும், காண்க, பொருள், தொங்கலாயுள்ள, காதணிவகை, சாதல், தொங்குதல், தொங்கல், அகராதி