தமிழ் - தமிழ் அகரமுதலி - தைவருதல் முதல் - தொகைமோசம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தைவருதல் | வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் . |
தைவாதல் | வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் . |
தைவிகம் | பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது ; தெய்வத்தன்மை உடையது . |
தைவிளை | நாய்க்கடுகுசெடி . |
தைவேளை | நாய்க்கடுகுசெடி . |
தைனியம் | எளிமை ; கீழ்மை ; பொருளாசை . |
தொ | ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஒ) |
தொக்கட்டி | மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு ; பழம் வைக்கும் சிறு கூடை ; காவற்குடிசை . |
தொக்கடம் | மிதித்து உழக்குகை ; பழம் வைக்கும் சிறுகூடை . |
தொக்கடம்போடுதல் | உடம்பு பிடித்தல் ; கசக்கிச் சாறுபிழிதல் . |
தொக்கடவு | குறுக்குவழி . |
தொக்கடி | காண்க : தொக்கட்டி . |
தொக்கடை | வறுமை . |
தொக்கணம் | காண்க : தொக்கடம் . |
தொக்கம் | செரியாமல் வயிற்றில் சிக்கிக்கொள்ளும் பொருள் ; வழக்கு . |
தொக்கார் | கூட்டத்தார் ; தோழர் . |
தொக்கி | சமுத்திராபச்சைச் செடி . |
தொக்கு | தொடுவுணர்ச்சியை அறிகருவி ; உடம்பின்தோல் ; கனியின்தோல் ; மரப்பட்டை ; ஆடை ; பற்று ; துவையல் ; சிறுமை ; எளிது ; இளப்பமானவன் ; நேர்மை . |
தொக்குத்தொக்கெனல் | ஈரடுக்கொலிக்குறிப்பு ; தள்ளாடற்குறிப்பு . |
தொக்குநிற்றல் | வெளிப்படாது நிற்றல் . |
தொகக்காரன் | மதிப்பிடுவோன் . |
தொகம் | மதிப்பு . |
தொகம்பார்த்தல் | மதிப்பிடுதல் . |
தொகாநிலை | முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள் . |
தொகாநிலைத்தொடர் | முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள் . |
தொகுத்தல் | எண் கூட்டல் ; திரட்டிக் கூட்டுதல் ; அடுக்குதல் ; மதிப்பிடுதல் ; தொக்குநிற்கச் செய்தல் ; சொல்லின் முதல் இடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல் ; சுருக்குதல் ; சம்பாதித்தல் . |
தொகுத்துக்கூறல் | முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஒரிடத்தே சுருக்கிக் கூறுவது . |
தொகுத்துச்சுட்டல் | முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது . |
தொகுத்துரை | பொழிப்புரை . |
தொகுதல் | கூட்டுதல் ; நெருங்குதல் ; ஒன்றாதல் ; அடுக்கிவருதல் ; ஒடுங்குதல் ; மறைதல் ; மொத்தமாதல் ; ஒத்தல் ; உள்ளடங்குதல் ; சுருங்குதல் ; குட்டையாதல் ; வீணாதல் . |
தொகுதி | கூட்டம் ; சேர்க்கை ; மந்தை ; பகுதி ; வரிசை ; சாதி ; உருபு முதலியவற்றின் மறைவு ; மொத்த எண் ; சபை ; சிறு செப்பு . |
தொகுதிப்பெயர் | குழுவைக் குறிக்கும் பெயர் ; குழூஉக்குறிப்பெயர் ; மொத்த எண் . |
தொகுப்பு | தொகை ; கூட்டம் ; எல்லை . |
தொகை | கூட்டம் ; சேர்க்கை ; கொத்து ; மொத்தம் ; பணம் ; எண் ; கணக்கு ; தொக்குநிற்றல் ; திரட்டுநூல் ; விலங்கு முதலியவற்றின்திரள் ; கூட்டல் ; தொகுத்துக் கூறுகை ; வேற்றுமைத்தொகை முதலிய தொடர் சொற்கள் . |
தொகைக்காரன் | செல்வன் . |
தொகைச்சூத்திரம் | ஒரு பொருளின் பகுப்பை எண்ணிக்காட்டும் சூத்திரம் . |
தொகைநிலை | வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை ; பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை ; சுமுகமாய் நிற்கை ; சுருங்கிநிற்கை ; காண்க : தொகைநிலைத்தொடர் ; போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை ; காண்க : தொகைநிலைச்செய்யுள் . |
தொகைநிலைச்செய்யுள் | பொருள் , பாட்டு , அளவு முதலியனபற்றி ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள் நூல் . |
தொகைநிலைத்தொடர் | வேற்றுமையுருபு முதலியன இடையே மறைந்து நிற்கவரும் சொற்றொடர் . |
தொகைநூல் | பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்ட நூல் . |
தொகைப்படுத்துதல் | மொத்தத் தொகையாக வளரச்செய்தல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; பிரித்துக்காட்டுதல் . |
தொகைப்பொருள் | பிண்டப்பொருள் ; தொகை நிலைத் தொடரின் பொருள் . |
தொகைபூட்டுதல் | கணக்குச் சரிக்கட்டுதல் ; கணக்கு மொத்தம் கட்டுதல் . |
தொகைமோசம் | கணக்குத் தவறுகை ; பண இழப்பு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 619 | 620 | 621 | 622 | 623 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தைவருதல் முதல் - தொகைமோசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தொகை, வைக்கும், பொருள், கூட்டம், நீக்குதல், முதலிய, முப்பத்திரண்டு, உத்திகளுள், நூற்பொருளை, கூறுவது, சுருக்கிக், மொத்த, தொகைநிலைத்தொடர், தொகைநிலைச்செய்யுள், நூல், கூறும், கணக்கு, கூட்டுதல், மொத்தம், சேர்க்கை, எச்சத்தொடர், அனுசுருதியேற்றல், நாய்க்கடுகுசெடி, தொக்கட்டி, மாசு, சீர்ப்படுத்துதல், தடவிவருதல், தொட்டுச், பழம், சிறு, வருடுதல், தொடர்சொற்கள், முற்றுத்தொடர், மதிப்பிடுதல், தொக்கடம், தொக்குநிற்றல், கூட்டல்