தமிழ் - தமிழ் அகரமுதலி - திணிகம் முதல் - திப்பலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திணிகம் | போர் . |
| திணித்தல் | செறிய உட்புகுத்துதல் ; நெருக்கி வருத்துதல் ; இடைச்சேர்த்தல் ; பதித்தல் . |
| திணிதல் | செறிதல் ; இறுகுதல் . |
| திணிநிலை | படைகள் நெருங்கிநிற்கும் நிலை . |
| திணிப்பு | வலிமை ; சுமத்துகை . |
| திணிம்பு | செறிவு ; நெருக்கம் . |
| திணியன் | பயனற்றுப் பருத்தவன் ; பயனற்றுப் பருத்தது . |
| திணிவு | நெருக்கம் ; வன்மை . |
| திணுக்கம் | செறிவு ; கட்டி . |
| திணுங்குதல் | செறிதல் ; உறைதல் . |
| திணை | நிலம் ; குலம் ; இடம் ; வீடு ; ஒழுக்கம் ; உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பு ; தமிழ்நூல்களில் வரும் அகத்திணை புறத்திணை ஒழுக்கம் . |
| திணைக்களம் | பல்வேறு அலுவலகப் பிரிவுகள் . |
| திணைகள் | சனங்கள் . |
| திணைநிலைவரி | ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப் பாடும் ஒரு பா வகை . |
| திணைநிலைப்பெயர் | சாதிக் குறிக்கும் பெயர் ; திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ; ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர் . |
| திணைப்பாட்டு | எடுத்த திணைக்கு உரிய தொழிலைப் பொதுப்படக் கூறும் பாடல் . |
| திணைப்பெயர் | குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் . |
| திணைமயக்கம் | ஒரு நிலத்துக்குரிய காலம் கருப்பொருள்கள் வேற்றுநிலத்துப் பொருள்களுடன் கலந்து காணப்படல் ; அகம் புறம் என்னும் திணைகள் ஒன்றுடனொன்று மயங்கி வருதல் . |
| திணைவழு | உயர்திணை அஃறிணை இரண்டும் தம்முள் மயங்கி வருவது . |
| தித்தகம் | காண்க : மலைவேம்பு . |
| தித்தம் | கசப்பு ; காண்க : நிலவேம்பு ; மலைவேம்பு ; தீ ; கட்டுக்கதை ; ஒளி . |
| தித்தா | காண்க : வட்டத்திருப்பி ; பீதரோகிணி . |
| தித்தாவெனல் | பரதத்தில் வழங்கும் தாளக்குறிப்பு . |
| தித்தி | இனிப்பு ; சிறுதீனி ; இன்பம் ; தேமல் ; தாளச்சதி ; குரங்கு ; துருத்தி ; ஒரு வாத்திய வகை ; வேள்விக்குழி ; குரவமரம் ; பேரீந்து ; தோற்பை . |
| தித்திக்காரன் | துருத்திவாத்தியம் ஊதுபவன் . |
| தித்திகம் | காண்க : பேய்ப்புடல் ; அரத்தை . |
| தித்திசாகம் | மாவிலிங்கமரம் . |
| தித்தித்தல் | இனித்தல் . |
| தித்திப்பு | இனிப்பு ; இனிப்புப் பண்டம் . |
| தித்திமுளை | இரட்டைத் தித்திப்புப் பனங்கட்டி . |
| தித்தியம் | வேள்விக்குழி . |
| தித்திரம் | அரத்தைச்செடி . |
| தித்திரி | கவுதாரி ; மீன்கொத்திகை . |
| தித்திரு | நாணற்புணல் . |
| தித்திருச்சி | நாணற்புணல் . |
| தித்துதல் | திருத்துதல் ; எழுத்துக் கற்க வரிவடிவின்மேல் பலமுறை எழுதிப் பழகுதல் . |
| தித்துப்பாடு | திருத்தம் . |
| திதம் | நிலை ; அக்கினி ; கட்டுக்கதை . |
| திதலை | தேமல் ; மகவீன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம் . |
| திதளம் | காண்க : மாமரம் . |
| திதனி | தேமல் . |
| திதி | நிலைமை ; நிலைபேறு ; சந்திரன் நாள் ; பிரதமை முதலிய திதிகள் ; சிராத்தம் ; செல்வம் ; சிறப்பு ; வாழ்வு ; வளர்ச்சி ; காப்பு ; கனம் ; இருப்பு ; அசுரர் மருத்துகளின் தாயான காசிபன் மனைவி . |
| திதிகர்த்தா | காப்பு கடவுளாகிய திருமால் . |
| திதிகொடுத்தல் | ஆண்டுதோறும் ஒருவர் இறந்த நாளில் சிராத்தம் செய்தல் . |
| திதிகொள்ளுதல் | ஒரே மாதத்தில் ஒரே திதி இருமுறை வரும்போது அவற்றுள் ஒன்றைச் சிராத்தம் முதலியவற்றுக்குக் கொள்ளுதல் . |
| திதிசர் | திதியின் புதல்வர்களான அசுரர் . |
| திதிசுதர் | திதியின் புதல்வர்களான அசுரர் . |
| திதிட்சயம் | காருவா , அமாவாசை . |
| திதிட்சை | பொறுமை . |
| திதித்தல் | காத்தல் ; கட்டுதல் . |
| திதித்திரயம் | ஒரு நாளில் மூன்று திதிகள் நேர்வது . |
| திதிநாடி | கிரகண நாழிகைக் காலம் . |
| திதிபரன் | திருமால் . |
| திதிமைந்தர் | திதியின் மக்களான அசுரர் . |
| திதியம் | அழிவின்மை . |
| திதீக்கதை | பொறுக்குந்தன்மை . |
| திதீக்கை | பொறுமை . |
| திதீட்சை | பொறுமை . |
| திதைதல் | பரவுதல் . |
| திந்திடம் | புளியமரம் . |
| திந்திடீகம் | புளியமரம் . |
| திந்திரிச்சி | நாணல் . |
| திந்திருணி | புளியமரம் . |
| திந்நாகம் | திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் . |
| திப்பம் | காண்க : திப்பிலி . |
| திப்பலி | காண்க : திப்பிலி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 569 | 570 | 571 | 572 | 573 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணிகம் முதல் - திப்பலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வழங்கும், பெயர், அசுரர், பொறுமை, சிராத்தம், திதியின், தேமல், புளியமரம், நாணற்புணல், வேள்விக்குழி, திதிகள், திதி, காப்பு, புதல்வர்களான, நாளில், திருமால், இனிப்பு, திப்பிலி, மலைவேம்பு, உயர்திணை, அஃறிணை, என்னும், ஒழுக்கம், பயனற்றுப், செறிவு, நெருக்கம், திணைகள், வாழும், செறிதல், நிலை, மயங்கி, காலம், மக்கட்கு, முதலிய, கட்டுக்கதை

