தமிழ் - தமிழ் அகரமுதலி - திட்டையிடுதல் முதல் - திணி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
திட்டையிடுதல் | ஈறுகட்டல் ; புண்ணில் தசை வளர்தல் . |
திட்டையுரல் | அடி ஆழமற்ற உரல் . |
திட்பம் | உறுதி ; வலிமை ; மனவுறுதி ; சொற்பொருள்களின் உறுதி ; காலநுட்பம் . |
திடகாத்திரம் | கட்டுள்ள உடல் . |
திடசித்தம் | உறுதியான மனம் . |
திடத்துவம் | உறுதிப்பாடு , பலம் . |
திடப்படுத்துதல் | உறுதிப்படுத்துதல் ; வலுப்படுத்துதல் . |
திடப்படுதல் | உறுதிப்படுத்துதல் ; ஊக்கமடைதல் . |
திடபத்தி | உறுதியான பக்தி . |
திடபரம் | மனவலி , உறுதி . |
திடம் | உறுதி ; வலிமை ; கலங்காநிலை ; மனஉறுதி ; மெய்கமை ; நிலைதவறாமை . |
திடன் | உறுதி ; வலிமை ; கலங்காநிலை ; மனஉறுதி ; மெய்கமை ; நிலைதவறாமை . |
திடமனம் | உறுதியான மனம் . |
திடமை | காண்க : வெள்ளெருக்கு . |
திடர் | மேட்டுநிலம் ; மலை ; குப்பைமேடு ; புடைப்பு ; தீவு ; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர் . |
திடரிடுதல் | மேடாதல் . |
திடல் | வெளியிடம் ; மேட்டுப்பகுதி . |
திடவரம் | உறுதி ; மன உறுதி . |
திடவிரதம் | உறுதியான முடிவு . |
திடற்புன்செய் | நன்செய் மத்தியில் பயிராகும் புன்செய் மேட்டுநிலம் . |
திடறு | மேட்டுநிலம் . |
திடாரி | ஊக்கமுடையவன் . |
திடாரிக்கம் | மனத்திடம் . |
திடீரெனல் | பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவு ; எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு . |
திடுக்கம் | அச்சம் . |
திடுக்காட்டம் | அச்சம் . |
திடுக்கிடுதல் | அச்சமுறுதல் ; நடுக்கமுறுதல் . |
திடுக்கு | அச்சம் . |
திடுக்குத்திடுக்கெனல் | அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற்குறிப்பு ; அச்சத்தால் நெஞ்சடித்தற்குறிப்பு . |
திடுக்கெனல் | காண்க : திடீரெனல் . |
திடுகூறு | விரைவு . |
திடுதிடெனல் | விரைவுக்குறிப்பு ; காண்க : திடுக்குத்திடுக்கெனல் . |
திடுதிப்பெனல் | விரைவு , எதிர்பாராநிலை இவற்றை உணர்த்தற்குறிப்பு . |
திடும் | ஒரு பறைவகை . |
திடுமல் | பெண்ணின் அடங்காத்தனம் . |
திடுமலி | அடங்காதவன் . |
திடுமன் | திண்மை ; அடங்காத தன்மை . |
திடுமெனல் | காண்க : திடீரெனல் . |
திண்கல் | சுக்கான்கல் . |
திண்டகம் | கிலுகிலுப்பைச்செடி . |
திண்டாட்டம் | அலைக்கழிவு ; மனக்கலக்கம் . |
திண்டாட்டு | அலைக்கழிவு ; மனக்கலக்கம் . |
திண்டாடுதல் | அலைக்கழிதல் ; கலக்கப்படுதல் ; நெருக்கப்படுதல் ; மனம் கலங்கித் தடுமாறுதல் . |
திண்டி | பருமன் ; யானை ; காண்க : அரசு , பசளைக்கொடி ; தடித்தவள் ; தம்பட்டம் ; உணவு . |
திண்டிப்போத்து | உண்டு கொழுத்துத் திரிபவன் ; உண்டு கொழுத்த கடா . |
திண்டிமகவி | திண்டிமம் முழக்கிக்கொண்டு வாதம் செய்யும் புலவன் . |
திண்டிமம் | காண்க : திடும் . |
திண்டிறல் | மிகுந்த வலிமை . |
திண்டு | அரைவட்ட வடிவான பஞ்சணை ; முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர் . |
திண்டுமுண்டு | எதிரிடைப்பேச்சு . |
திண்ணக்கம் | நெஞ்சுரம் . |
திண்ணகம் | செம்மறியாட்டுக்கடா ; துரு வாட்டுக்கடா ; தட்டார் மெருகிடும் கருவியுள் ஒன்று . |
திண்ணம் | உறுதி ; வலிமை ; இறுக்கம் ; பொய்ம்மை . |
திண்ணன் | வலியுடையோன் ; கண்ணப்ப நாயனாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் . |
திண்ணனவு | நெஞ்சுரம் ; உறுதி . |
திண்ணிமை | மனவுறுதி . |
திண்ணியன் | வலியன் ; மன உறுதியுள்ளவன் . |
திண்ணெனல் | உறுதியாயிருத்தற் குறிப்பு ; வாத்திய நரம்பின் ஒலி . |
திண்ணெனவு | நெஞ்சுரம் ; உறுதி . |
திண்ணை | வேதிகை ; மேடு . |
திண்ணைக்குறடு | பெரிய திண்ணையை ஒட்டிக் கீழே கட்டப்பட்ட சிறுதிண்ணை ; திண்ணையை ஒட்டியுள்ள படி . |
திண்ணைப்பள்ளிக்கூடம் | தெருப்பள்ளிக்கூடம் ; ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளில் நடத்தப்படும் கல்விக்கூடம் . |
திண்பொறுத்தல் | பாரந்தாங்குதல் . |
திண்மை | வலிமை ; உறுதி ; கலங்காநிலைமை ; பருமன் ; உண்மை . |
திணர் | செறிவு . |
திணர்த்தல் | நெருக்கமாதல் ; கனமாகப் படிந்திருத்தல் . |
திணர்தல் | சோர்தல் . |
திணறுதல் | மூச்சுத் தடுமாறுதல் . |
திணி | திட்பம் ; செறிவு ; பூமி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 568 | 569 | 570 | 571 | 572 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திட்டையிடுதல் முதல் - திணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உறுதி, காண்க, வலிமை, அச்சம், உறுதியான, மேட்டுநிலம், நெஞ்சுரம், திடீரெனல், விரைவு, மனம், தடுமாறுதல், மனக்கலக்கம், அலைக்கழிவு, பருமன், உண்டு, செறிவு, திண்ணையை, மனவுறுதி, திண்டிமம், திண்மை, திடும், கலங்காநிலை, மனஉறுதி, நிலைதவறாமை, உறுதிப்படுத்துதல், திட்பம், திடுக்குத்திடுக்கெனல், குறிப்பு, இவற்றை, மெய்கமை