தமிழ் - தமிழ் அகரமுதலி - தக்காரி முதல் - தகலுபாசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தக்காரி | வாதமடக்கி . |
| தக்காளி | காண்க : மணித்தக்காளி ; சீமைத் தக்காளி . |
| தக்காளிப்பிள்ளை | பிள்ளைப்பூச்சி . |
| தக்காற்போல | தக்கபடி . |
| தக்கிணம் | தெற்கு . |
| தக்கிணாக்கினி | காண்க : தக்கணாக்கினி . |
| தக்கிணாமூர்த்தி | காண்க : தக்கணாமூர்த்தித் தேவர் . |
| தக்கிணாயனம் | காண்க : தக்கணாயனம் . |
| தக்கிணை | குரு முதலியோர்க்குக் கொடுக்கும் பொருள் . |
| தக்கிப்போதல் | நிலைபெறுதல் . |
| தக்கியா | பக்கிரிகளின் இருப்பிடம் . |
| தக்கிரம் | மோர் . |
| தக்கிருத்தல் | தனக்குத் தக வொழுகுதல் . |
| தக்கு | இசையின் தாழ்ந்த ஓசை ; தந்திரம் . |
| தக்குத்தக்கெனல் | ஓர் அடுக்கொலிக்குறிப்பு . |
| தக்குத்தடவல் | தடவி நடக்கை ; தடுமாறிப்படிக்கை . |
| தக்குதல் | நிலைபெறுதல் ; பயன்படுதல் ; ஏற்றதாதல் ; அரக்குதல் ; எல்லைகட்டுதல் ; நயப்படல் . |
| தக்குவித்தல் | ஆட்சிக்குட்படுத்தல் . |
| தக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| தக்கேசி | மருதநிலப் பண்வகை . |
| தக்கை | காதிலிடும் குதம்பை ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒரு பறைவகை ; பறை ; தெப்பம் ; நெட்டிவகை ; அடைப்பான் ; அடைப்பு ; தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் சக்கைத்துண்டு ; பாலமாக இடும் பனையின் அடிமரம் ; சோளம் , ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை ; கட்டி ; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு . |
| தக்கோர் | தகுதிவாய்ந்தவர் ; அறிஞர் . |
| தக்கோர்மை | தக்கவர் தன்மையான நியாயம் . |
| தக்கோலம் | காண்க : வால்மிளகு ; தாம்பூலம் ; சிறுநாவற்பூ ; திப்பிலி ; திருவூறல் என்னும் தேவாரம் பெற்ற ஓர் ஊர் . |
| தக்கோலி | அகில்வகை . |
| தக்தம் | சுடப்பட்டது . |
| தகசு | தவழ்கரடி என்னும் விலங்கு ; தகடு . |
| தகட்டுமுளை | கொக்கிவகை . |
| தகட்டுவைரம் | பட்டை தீட்டப்பெறாத வைரம் . |
| தகடி | பீதாம்பரம் ; ஏமாற்றுகை ; நீர் . |
| தகடு | மென்மையுந் தட்டையுமான வடிவு ; உலோகத் தட்டு ; வண்ணத் தகடு ; கம்மார் வெற்றிலை , கறுப்பு வெற்றிலை ; பூவின் புறவிதழ் ; மண்படை ; அடர்ச்சி ; வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு . |
| தகடுதைத்தல் | மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டமடித்தல் . |
| தகண் | தடை ; தழும்பு ; பழக்கம் ; கிழங்கு விழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு . |
| தகணிதம் | துந்துபி ; உலோகமணல் . |
| தகணேறுதல் | தழும்புபடுதல் ; பழக்கமாதல் ; முற்றுதுல் . |
| தகணை | உலோகக்கட்டி . |
| தகத்து | அரியணை ; சிறந்த இடம் ; பெருமை ; மணத்துக்குரிய அலங்காரத் தேர் . |
| தகதகவெனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| தகதகெனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| தகப்படுதல் | மேன்மைதங்குதல் . |
| தகப்பன் | தந்தை . |
| தகப்பன்சாமி | தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள் ; அடங்காப் பையன் . |
| தகம் | எரிவு ; சூடு . |
| தகமை | காண்க : தகைமை . |
| தகர் | பொடி ; தகர்ந்த துண்டு ; ஆட்டுப்பொது ; செம்மறியாட்டுக்கடா ; வெள்ளாடு ; யாளியின் ஆண் ; ஆண்யானை ; ஆண்சுறா ; மேட்டுநிலம் ; பூமி ; பலாசுமரம் . |
| தகர் | (வி) தகாஎன் ஏவல் ; அழி ; குட்டுஎன் ஏவல் . |
| தகர்த்தல் | நொறுக்குதல் ; புடைத்தல் ; உடைத்தல் ; சிதறடித்தல் ; குட்டுதல் ; அழித்தல் ; நெரித்தல் ; பரு முதலிய கட்டிகளைத் திறத்தல் ; மெச்சும்படி ஆற்றல் காட்டுதல் . |
| தகர்தல் | நொறுங்குதல் ; உடைதல் ; நெரிதல் ; சிதறுதல் ; அழிதல் ; காய்ந்துபோதல் . |
| தகர்ப்பு | உடைப்பு ; குட்டு . |
| தகர்ப்பொறி | கோட்டைமதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடிவான எந்திரவகை . |
| தகர்வு | உடைவு ; அழிவு . |
| தகரஞாழல் | மயிர்ச்சாந்துவகை . |
| தகரடி | சிதறவடிக்கை ; பெருமிதப் பேச்சு . |
| தகரம் | மயிற்சாந்து ; மணம்வீசும் மரவகை ; மணம் ; வெள்ளீயம் ; உலோகத்தகடு ; இதயத்தின் உள்ளிடம் . |
| தகரவித்தை | இறைவனை இதயவொளியில் வைத்துத் தியானம்செய்யும் முறையை உணர்த்தும் வித்தை . |
| தகரார் | தடை , மறுப்பு ; விவாதம் . |
| தகராறு | தடை , மறுப்பு ; விவாதம் . |
| தகல் | தகுதி ; காண்க : பவளப்பூண்டு ; ஒரு கீரை வகை . |
| தகல்பாச்சி | மோசக்காரன் ; பெரும்புரட்டான் . |
| தகல்பாசி | மோசக்காரன் ; பெரும்புரட்டான் . |
| தகலக்கட்டுதல் | ஏமாற்றுதல் . |
| தகலுபாசி | காண்க : தகல்பாச்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 525 | 526 | 527 | 528 | 529 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காரி முதல் - தகலுபாசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒலிக்குறிப்பு, தகடு, விவாதம், மறுப்பு, தகல்பாச்சி, மோசக்காரன், பெரும்புரட்டான், ஏவல், ஒளிவீசுதற்குறிப்பு, நிலைபெறுதல், என்னும், வெற்றிலை, தக்காளி, தகர்

