தமிழ் - தமிழ் அகரமுதலி - ஞெமுக்கம் முதல் - தக்கார் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஞெமுக்கம் | அழுந்துகை ; அமுக்கம் . |
| ஞெமுக்குதல் | நெருக்கி வருத்துதல் . |
| ஞெமுங்குதல் | அழுந்துதல் ; செறிதல் . |
| ஞெமை | ஒரு மரவகை . |
| ஞெரல் | ஒலி ; விரைவு . |
| ஞெரி | முரிந்த துண்டு . |
| ஞெரிதல் | முரிதல் . |
| ஞெரேரெனல் | அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு . |
| ஞெரேலெனல் | அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு . |
| ஞெலி | தீக்கடைகோல் . |
| ஞெலிகோல் | தீக்கடைகோல் . |
| ஞெலிதல் | குடைதல் ; தீக்கடைதல் . |
| ஞெலுவல் | காண்க : செத்தல் . |
| ஞெலுவன் | தோழன் . |
| ஞெள்ளல் | உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் ; பூசல் ; விரைவு ; சோர்வு ; பள்ளம் ; மிகுதி ; மேன்மை ; குற்றம் ; வீதி . |
| ஞெள்தல் | உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் . |
| ஞெள்ளுதல் | உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் . |
| ஞெள்ளெனல் | ஒலிக்குறிப்பு . |
| ஞெள்ளை | நாய் . |
| ஞெளிதல் | காண்க : நெளிதல் . |
| ஞெளிர் | யாழ்முதலியவற்றின் உள்ளோசை ; ஒலி . |
| ஞெளிர்தல் | எடுத்தலோசையுடன் ஒலித்தல் . |
| ஞெறித்தல் | புறவிதழ் ஒடித்தல் ; நெரித்தல் . |
| ஞேயம் | அன்பு ; காண்க : சினேகம் ; அறியப்படும் பொருள் ; அறிதற்குரிய கடவுள் . |
| ஞேயர் | நண்பர் ; அறிவுடையோர் . |
| ஞேயா | பெருமருந்துக்கொடி . |
| ஞைஞையெனல் | இகழ்ச்சிக்குறிப்பு ; கெஞ்சுதற்குறிப்பு ; அழுதற்குறிப்பு . |
| ஞொள்குதல் | மெலிதல் ; குறைவுபடுதல் ; சோம்புதல் ; அஞ்சுதல் ; அலைதல் ; குலைதல் . |
| ஞொள்ளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| த | ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து . |
| தக்கடி | வஞ்சனை ; துரோகம் ; கடுமை ; குதர்க்கம் ; பொய் ; துலாக்கோல் ; பத்துச் சேர் கொண்ட நிறையளவு . |
| தக்கடிவித்தை | செப்படிவித்தை ; ஏமாற்று . |
| தக்கடை | இரட்டைத் தட்டுள்ள நிறைகோல் . |
| தக்கடைக்கல் | நிறைகல் . |
| தக்கணம் | தெற்கு ; வலப்பக்கம் ; தக்கணநாடு ; தாளப்பிரமாணத்தின் உட்பிரிவு ; உடனே . |
| தக்கணன் | காண்க : தக்கணாமூர்த்தித்தேவர் . |
| தக்கணாக்கினி | வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று , தென்முக அங்கி . |
| தக்கணாதி | குறிஞ்சி யாழ்த்திறங்களுள் ஒன்று . |
| தக்கணாமூர்த்தித்தேவர் | தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தி . |
| தக்கணாயனம் | ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம் . |
| தக்கணை | காண்க : தக்கிணை . |
| தக்கத்தடித்தல் | மிகப் பருத்தல் . |
| தக்கது | தகுதி ; தகுதியானது . |
| தக்கப்பண்ணுதல் | நிலைக்கச்செய்தல் ; வயப்படுத்துதல் ; ஒருவனது தகுதியைக் காட்டுதல் . |
| தக்கம் | நிலைபேறு ; பற்று ; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி ; பாண்டத்தின் அடியில் தங்கிய உணவு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வாதம் ; முதல் . |
| தக்கர் | சாடி . |
| தக்கரம் | களவு ; வஞ்சகம் . |
| தக்கராகம் | பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்று . |
| தக்கல் | அடைப்பு . |
| தக்கவர் | தகுதியுடையோர் . |
| தக்கன் | பிரசாபதிகளுள் ஒருவன் ; எண்வகை நாகத்துள் ஒன்று ; கள்வன் . |
| தக்காங்கு | தக்கபடி ; நடுவுநிலையாக . |
| தக்காணம் | தெற்கு ; வலப்பக்கம் ; இந்தியாவின் தென்பகுதி . |
| தக்கார் | மேன்மக்கள் ; நடுவுநிலைமையுடையோர் ; பெருமையிற் சிறந்தோர் ; உறவினர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 524 | 525 | 526 | 527 | 528 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞெமுக்கம் முதல் - தக்கார் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, காண்க, ஒலித்தல், ஒலிக்குறிப்பு, குறிப்பு, பள்ளமாதல், தெற்கு, உடன்படுதல், தக்கணாமூர்த்தித்தேவர், அச்சக்குறிப்பு, வலப்பக்கம், தன்மைக், விரைவு, தீக்கடைகோல், விரைவுக்

