தமிழ் - தமிழ் அகரமுதலி - சோழியமணம் முதல் - சௌசேயன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சோழியமணம் | இருபதினாயிரம் பாக்குக் கொண்ட அளவு . |
| சோழியன் | சோழநாட்டான் ; பார்ப்பனர் , வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர் ; ஒரு மண்வெட்டிவகை . |
| சோழியாவணம் | காண்க : சோழியமணம் . |
| சோளகம் | குடுமி வைக்கும் சடங்கு . |
| சோளம் | ஒரு தானியவகை ; சங்கஞ்செடி ; காண்க : சோழம் . |
| சோளன் | காண்க : சோழன் ; மக்காச்சோளம் ; ஒரு தானியவகை . |
| சோளி | காண்க : சோழியப்பை . |
| சோளிகை | காண்க : சோழியப்பை . |
| சோற்றமலை | காண்க : சோற்றுக்கட்டி . |
| சோற்றலகு | சிப்பல் ; மரத்தில் வயிரமில்லாத பாகம் . |
| சோற்றி | மரத்தினுட்சோறு ; வயிரமின்மை ; பழத்தின் சதைப்பாகம் ; பச்சிலைவகை ; சோறு . |
| சோற்றிலை | காண்க : சோற்றுக்கற்றாழை . |
| சோற்றுக்கட்டி | அன்னவுருண்டை . |
| சோற்றுக்கடன் | உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் ; கடமையாக மாத்திரம் இடும் சோறு . |
| சோற்றுக்கற்றாழை | வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை . |
| சோற்றுக்குவால் | அன்னக்குவியல் . |
| சோற்றுக்கை | சோற்றை எடுத்துதவும் வலக்கை . |
| சோற்றுத்தடி | காண்க : சோற்றுக்கட்டி . |
| சோற்றுத்துருத்தி | சோற்றால் நிரப்பிய துருத்தி ; உடம்பு . |
| சோற்றுப்பற்று | சோற்றுப்பருக்கை . |
| சோற்றுப்பனை | வயிரம் அற்ற பனை . |
| சோற்றுப்பானை | சோறாக்கும் மட்பாண்டம் ; பெருந்தீனிக்காரன் . |
| சோற்றுப்பை | இரைப்பை . |
| சோற்றுமயக்கம் | பேருணவு உண்டமையால் வரும் உறக்கம் . |
| சோற்றுமாடு | பயனற்றவன் ; சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன் . |
| சோறாக்குதல் | உணவு சமைத்தல் . |
| சோறு | அன்னம் ; மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து ; கற்றாழை முதலியவற்றின் சோறு ; பனை முதலியவற்றின் உள்ளீடு ; முத்தி ; பரணிநாள் . |
| சோறுகொல்லி | பெருந்தீனிக்காரன் ; அன்னபேதி . |
| சோறுவடித்தல் | காண்க : சோறாக்குதல் ; சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல் . |
| சோறுவாய்த்தல் | செஞ்சோற்றுக் கடன் கழித்தல் . |
| சோறூட்டல் | குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு . |
| சோன்மதன் | பித்தன் . |
| சோனகம் | ஒரு நாடு ; ஒரு மொழி . |
| சோனகன் | யவன நாட்டான் . |
| சோனம் | மேகம் ; காண்க : சோனகம் . |
| சோனாமாரி | விடாமழை . |
| சோனாவாரி | விடாமழை . |
| சோனாமேகம் | பெருமழை பொழியும் முகில் . |
| சோனி | வளர்ச்சியற்றது ; மெலிந்தவன்(ள்) . |
| சோனை | கார்மேகம் ; விடாமழை ; விடாமழைப் பாட்டம் ; மழைச்சாரல் ; திருவோணநாள் ; கைப்பிடிச் சுவர் . |
| சோனைகட்டுதல் | மழைபெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் கூடியிருக்கை . |
| சோனைப்புல் | ஒருவகைப் புல்வகை . |
| சோனைமாரி | காண்க : சோனாமாரி , சோனாவாரி . |
| சோனைமேகம் | காண்க : சோனாமேகம் . |
| சௌ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு . |
| சௌக்கம் | பண்டங்களின் மலிவு . |
| சௌக்கியம் | ஆரோக்கியம் ; காண்க : சௌகரியம் ; மலங்கழிக்கை . |
| சௌகதன் | சூனியவாதி ; புத்தன் . |
| சௌகந்தம் | நறுமணம் . |
| சௌகந்தி | ஒரு மாணிக்கவகை ; கந்தக பாடாணம் . |
| சௌகந்திகம் | வெள்ளாம்பல் ; காண்க : சௌகந்தி ; நீலோற்பலம் ; செங்குவளை . |
| சௌகந்திகை | நறுமணமுடையது ; ஒருவகைத் தாமரை . |
| சௌகம் | நான்கு . |
| சௌகரியம் | ஏந்து ; வசதி ; மலிவு . |
| சௌசம் | தூய்மை ; கால்கழுவுதல் . |
| சௌசன்னியம் | அன்பு , இனிய குணம் , ஒற்றுமை . |
| சௌசிகன் | தையற்காரன் . |
| சௌசேயன் | வண்ணான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 520 | 521 | 522 | 523 | 524 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழியமணம் முதல் - சௌசேயன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சோறு, சோற்றுக்கட்டி, விடாமழை, சோனாவாரி, சோனாமாரி, மேகம், சோனாமேகம், சௌகந்தி, சௌகரியம், மலிவு, சோனகம், சோறாக்குதல், தானியவகை, சடங்கு, வழங்கும், சோழியப்பை, சோற்றுக்கற்றாழை, சோழியமணம், பெருந்தீனிக்காரன், முதலியவற்றின்

