தமிழ் - தமிழ் அகரமுதலி - சோதம் முதல் - சோமம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சோதம் | தூய நீர் . |
| சோதரன் | உடன்பிறந்தான் . |
| சோதரி | சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் . |
| சோதரை | சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் . |
| சோதனி | துடைப்பம் ; செத்தை . |
| சோதனை | ஆராய்ச்சி ; ஆராய்வு , பரீட்சை ; தெய்வசோதனை ; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை ; குறிப்பு ; முகத்தலளவு ; தீமைசெய்யத் தூண்டுகை ; பேதிமருந்து . |
| சோதி | கடவுள் ; சூரியன் ; ஒளி ; அருகன் ; சிவன் ; திருமால் ; கதிர் ; தீ ; நட்சத்திரம் ; விளக்கு ; கருப்பூரதீபம் ; சாதிலிங்கம் ; ஞானம் ; பூநாகம் ; சுவாதிநாள் ; சுவர் முதலியவற்றில் காணும் வெடிப்பு . |
| சோதிக்குண்மணி | முத்து ; வெள்ளொளியால் சூழ்ந்த மணி . |
| சோதிடநூல் | வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் . |
| சோதிடம் | வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் . |
| சோதிடர் | சோதிடம் கூறுவோர் ; சந்திரன் , சூரியன் , கோள் , மீன் முதலிய வானமண்டலங்கள் . |
| சோதிடவர் | சோதிடம் வல்லவர் . |
| சோதிடன் | சோதிடம் கூறுவோன் . |
| சோதித்தல் | ஆராய்தல் ; விசாரணைசெய்தல் ; தூய்மைசெய்தல் ; சோதனைபண்ணுதல் ; விளக்கமுறுதல் ; தீமைசெய்யத் தூண்டுதல் . |
| சோதிநாயகன் | ஒளிவடிவான கடவுள் . |
| சோதிநாள் | சுவாதிநாள் . |
| சோதிப்பிழம்பு | கதிர்த்திரட்சி . |
| சோதிமயம் | ஒளிவடிவு ; காண்க : வாலுளுவை . |
| சோதியம் | காண்க : வாலுளுவை . |
| சோதியன் | ஒளிவடிவான கடவுள் . |
| சோதியான் | ஒளிப்பிழம்பான சூரியன் . |
| சோதிராத்திரி | நள்ளிரவு . |
| சோதிவிருட்சம் | இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை . |
| சோதினி | செத்தை ; துடைப்பம் . |
| சோந்தை | பற்று ; இடையூறு . |
| சோப்பம் | இரக்கம் . |
| சோப்பளாங்கி | பயனற்றவன் ; வலுவற்றவன் . |
| சோப்பி | ஈயோட்டி . |
| சோப்பு | அடி ; சவர்க்காரம் . |
| சோப்புதல் | சோர்வுறச் செய்தல் ; அடித்தல் . |
| சோபகிருது | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தேழாம் ஆண்டு . |
| சோபநித்திரை | புணர்ச்சி முடிந்தபின் நிகழும் அயர்ந்த உறக்கம் . |
| சோபம் | அழகு ; ஒளி ; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை ; சோர்வு ; கள் ; துன்பம் ; சோம்பல் ; இரக்கம் ; பத்துக்கோடி ; கோடாகோடி ; மூர்ச்சை . |
| சோபலம் | சோம்பல் ; பெருஞ்சீரகம் . |
| சோபலாங்கி | காண்க : சோப்பளாங்கி . |
| சோபனஞ்சொல்லுதல் | முதற்பூப்பு முதலிய நற்செய்தி கூறுதல் ; வாழ்த்துக் கூறுதல் ; மங்களப்பாட்டுப் பாடல் . |
| சோபனப்பாட்டு | மங்களப்பாட்டு . |
| சோபனம் | அழகு ; நன்மை ; வாழ்த்து ; வாழ்த்துப்பாட்டு ; நற்செய்தி ; நன்னிமித்தம் ; நன்முகூர்த்தம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; நற்செயல் . |
| சோபாதானம் | முதற்காரணமுள்ளது . |
| சோபாலிகை | அடம்பு ; விரிதூறு . |
| சோபானம் | படிக்கட்டு ; தாழ்வாரம் . |
| சோபானமுறை | படிமுறை . |
| சோபானவகை | பாரம்பரியம் . |
| சோபித்தல் | ஒளிசெய்தல் ; அழகாதல் ; மேம்படுதல் ; சோர்வுறுதல் . |
| சோபிதம் | அழகு ; ஒளி . |
| சோபை | அழகு ; ஒளி ; ஒரு நோய்வகை . |
| சோம்பல் | மடிமை ; மயக்கத்தைத் தரும் அம்மைநோய் ; மயக்கம் . |
| சோம்பலம் | சேங்கொட்டை . |
| சோம்பன் | சோம்பேறி . |
| சோம்பாகி | சமையற்காரன் . |
| சோம்பாயி | சமையற்காரன் . |
| சோம்பி | காண்க : சோம்பன் . |
| சோம்பு | சோம்பல் ; மந்தம் ; பெருஞ்சீரகம் . |
| சோம்புதல் | சோம்பலடைதல் ; அறிவு மந்தமாதல் ; ஊக்கமிழத்தல் ; வாடுதல் ; கெடுதல் ; பின்வாங்குதல் . |
| சோம்பேறி | சோம்பலாயிருப்பவன் ; தங்கத்தை இளக்கும் திராவகம் . |
| சோமக்கிரணம் | காண்க : சந்திரகிரகணம் . |
| சோமகுண்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு புண்ணிய தீர்த்தம் . |
| சோமசுந்தரன் | மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் . |
| சோமசூத்திரம் | சிவன்கோயிலில் திருமுழுக்காட்டிய நீர் விழும் கோமுகம் . |
| சோமசேகரன் | நிலவை முடியில் உடைய சிவன் . |
| சோமதாரி | இந்துப்பு . |
| சோமதிசை | குபேரனது திசையான வடதிசை . |
| சோமநாதி | ஒருவகைப் பெருங்காயம் . |
| சோமபந்து | ஆம்பல் ; சூரியன் ; புதன் . |
| சோமபானம் | வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு . |
| சோமம் | யாகரசக்கொடி ; காண்க : கொடிக்கள்ளி ; ஒரு வேள்வி ; கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 518 | 519 | 520 | 521 | 522 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோதம் முதல் - சோமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சூரியன், அழகு, நிமித்தம், சோதிடம், சோம்பல், கடவுள், உலோகங்களின், சோதித்தல், இரக்கம், சோப்பளாங்கி, வாலுளுவை, சமையற்காரன், ஒளிவடிவான, நோய்வகை, நற்செய்தி, சோம்பன், பெருஞ்சீரகம், முதலிய, சோம்பேறி, கூறுதல், பலன்களை, துடைப்பம், செத்தை, புடமிடுகை, உலோகங்களைப், தரத்தை, ஆய்தல், தீமைசெய்யத், சிவன், நீர், அறிவிக்கும், கோள்களின், வானவியல், சுவாதிநாள், நூல்

