தமிழ் - தமிழ் அகரமுதலி - செல்லுதல் முதல் - செவ்வல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செல்லுதல் | நிகழ்தல் ; வீழ்தல் ; ஆதல் ; பரவுதல் ; பயனுறுதல் ; நிலைத்திருத்தல் ; செலாவணியாதல் ; வேண்டியதாதல் ; பொருந்துதல் ; விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுதல் ; அடைதற்குரியதாதல் ; கழிதல் ; தணிதல் ; கெடுதல் ; இறத்தல் ; கிட்டுதல் ; அடைதல் ; போதல் . |
| செல்லுபடி | செல்லான தொகை . |
| செல்லுலகு | மக்கள் செல்லுதற்குரிய உலகமாகிய மறுமை . |
| செல்வக்களிப்பு | செல்வத்தால் உண்டாகும் மதர்ப்பு . |
| செல்வக்கிடப்பு | செல்வ மிகுதி . |
| செல்வச்சிரஞ்சீவி | வயதில் குறைந்த ஆண்பாலரைக் குறித்துப் பெரியோர் வாழ்த்துத் தோன்ற வழங்கும் சொல் . |
| செல்வப்பொருள் | கல்விப்பொருளின் வேறான செல்வமாகிய பொருள் . |
| செல்வம் | கல்வி ; அழகு ; செழிப்பு ; நுகர்ச்சி ; துறக்கம் ; ஐசுவரியம் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு . |
| செல்வழி | நேர்வழி . |
| செல்வன் | செல்வமுள்ளவன் ; இறைவன் ; புத்தன் ; மகன் . |
| செல்வாக்கு | நாடெங்கும் செல்லும் மதிப்பு ; புகழ் . |
| செல்வி | திருமகள் ; தலைவி ; மகள் ; செல்வமுடையவள் . |
| செல்விக்கை | செல்வம் ; செட்டு . |
| செல்விநாதன் | திருமகள் கணவனாகிய திருமால் . |
| செல்வு | காண்க : செல்வம் . |
| செல்வுழி | செல்லுதற்குரிய கதி . |
| செல்வைத்தல் | கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்தில் பதிதல் . |
| செலக்குரு | நவச்சாரம் . |
| செலக்கூபம் | நண்டு . |
| செலக்கூர்மை | காண்க : செலக்குரு . |
| செலகம் | காண்க : மல்லிகை . |
| செலசாரம் | நீர்வாழ்வன . |
| செலதம் | கோரைக்கிழங்கு . |
| செலம் | நீர் ; இலாமிச்சைப்புல் . |
| செலவடை | செலவு . |
| செலவயர்தல் | செல்ல விரும்புதல் . |
| செலவழித்தல் | செலவிடுதல் ; கொடுத்துவிடுதல் ; பொருளையழித்தல் . |
| செலவழிதல் | பொருள் முதலியன செலவாய்ப்போதல் ; சாதல் . |
| செலவழிவு | செலவழிகை ; இலாபநட்டம் . |
| செலவழுங்குதல் | தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலைத் தவிர்தல் . |
| செலவாதல் | காண்க : செலவழித்தல் . |
| செலவாளி | தாராளமாய்ச் செலவிடுபவன் ; அளவுக்குமிஞ்சிச் செலவழிப்போன் ; குடும்பச் செலவு மிக்கவன் . |
| செலவிடுதல் | காண்க : செலவழித்தல் ; அனுப்புதல் . |
| செலவு | பணவழிவு ; போக்கு ; ஓட்டம் ; நடை ; குதிரைநடை ; பயணம் ; படையெடுப்பு ; ஐந்தொழில்களுள் கொள்ளும் நிலம் அறிந்து கொள்ளுகை ; நீட்சியளவு ; ஆலாபனம் ; வழி ; ஒழுக்கம் ; தேவை ; மொய் ; ஆணை ; சிறந்த காலம் ; பிரிவு ; சாவு ; காலங்கழிவு ; எலிவளை முதலியன ; வீட்டிக்கு வேண்டிய உணவுப்பண்டம் . |
| செலவுகாரன் | காண்க : செலவாளி . |
| செலவுகொடுத்தல் | நட்டமிறுத்தல் ; ஆணையளித்தல் . |
| செலவுகொல்லுதல் | வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்புவித்தல் ; செலவிடுதற்கு விவரம் சொல்லுதல் . |
| செலவுபெயர்தல் | போதலைத் தவிர்தல் . |
| செலவுவாங்குதல் | கறிப்பண்டம் வாங்குதல் ; விடைபெறுதல் . |
| செலாமணி | புழக்கம் ; செல்லக்கூடியது ; செல்வாக்கு . |
| செலாவணி | புழக்கம் ; செல்லக்கூடியது ; செல்வாக்கு . |
| செலியம் | இலாமிச்சைப்புல் . |
| செலு | மீன்செதிள் ; நறுவிலிமரம் ; மெலிந்த . |
| செலுத்துதல் | செல்லச் செய்தல் ; ஓட்டுதல் ; இறுத்தல் ; நடத்துதல் ; எய்தல் ; ஆணை நடத்துதல் . |
| செலுந்தி | மெலிந்தது . |
| செலுந்தில் | மெலிந்தது . |
| செலுப்பு | சிறுதுண்டு ; பாக்குச்சீவல் ; நீர்க்கோப்பு . |
| செலுவன் | மெலிந்தவன் . |
| செவ்வகத்தி | ஓர் அகத்திமரவகை . |
| செவ்வட்டை | ஒருவகை அட்டைப் பூச்சி ; சருக்கரைவள்ளிநோய் . |
| செவ்வண் | செங்குத்து . |
| செவ்வணம் | செவ்வையாக . |
| செவ்வணி | தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம் . |
| செவ்வந்தி | ஒரு பூச்செடிவகை . |
| செவ்வரக்கு | சாதிலிங்கம் . |
| செவ்வரத்தம் | செம்பரத்தைச்செடி . |
| செவ்வரத்தை | செம்பரத்தைச்செடி . |
| செவ்வரி | கண்ணிலுள்ள சிவந்த கோடு ; நாரைவகை . |
| செவ்வல் | செம்மண்நிலம் ; செந்நிறம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 504 | 505 | 506 | 507 | 508 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்லுதல் முதல் - செவ்வல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செல்வாக்கு, செலவழித்தல், செல்வம், செலவு, புழக்கம், கொள்ளும், செலவாளி, செல்லக்கூடியது, நடத்துதல், செம்பரத்தைச்செடி, மெலிந்தது, தவிர்தல், முதலியன, செலக்குரு, செல்லுதற்குரிய, திருமகள், இலாமிச்சைப்புல், சொல், செலவிடுதல், தொகை, பொருள்

