முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » செருக்கொடுத்தல் முதல் - செல்லுஞ்சொல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - செருக்கொடுத்தல் முதல் - செல்லுஞ்சொல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செருக்கொடுத்தல் | எதிர்த்துப் போர்செய்தல் . |
| செருகுகொண்டை | முடிக்குங்கொண்டைவகை . |
| செருகுதல் | இடைநுழைத்தல் ; அடைசுதல் ; சிக்குதல் ; கண் முதலியன செருகுதல் ; செரிக்காமல் உணவு வயிற்றில் சிக்கிக் கொள்ளுதல் . |
| செருகுபூ | இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ . |
| செருத்தணி | திருத்தணிகை . |
| செருத்தல் | மாட்டுமடி . |
| செருத்தி | வெற்றிக்கொடி . |
| செருத்தொழிலோர் | படைவீரர் . |
| செருந்தி | வாட்கோரைப்புல் ; சிலந்திமரம் ; மணித்தக்காளிச்செடி ; குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| செருந்து | பூவிதழ் ; சிலந்திமரம் . |
| செருநர் | படைவீரர் ; பகைவர் . |
| செருப்படி | ஒரு படர்கொடிவகை . |
| செருப்படை | ஒரு படர்கொடிவகை ; சிறந்த போர்வீரர்களைக்கொண்ட சேனை . |
| செருப்பு | மிதியடி ; பூழிநாட்டில் உள்ளவொரு மலை . |
| செருப்புக்கடி | செருப்பு அழுத்துதலால் உண்டாகும் புண் . |
| செருப்புத்தின்னி | தோற்செருப்பைத் தின்னும் நாய் . |
| செருமகள் | போர்க்குரிய பெண்தெய்வமாகிய கொற்றவை . |
| செருமல் | தொண்டையைத் தூய்மை செய்யக் கனைத்தல் . |
| செருமுதல் | நிரம்புதல் ; நெருக்கமாயிருத்தல் ; பதிதல் ; விக்குதல் ; அடைத்தல் ; கனைத்தல் . |
| செருமுனை | போர்க்களம் ; போர்புரியும்படை . |
| செருவஞ்செய்தல் | மாறுபடுதல் . |
| செருவிடைவீழ்தல் | அகழினையும் காவற்காட்டையும் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை . |
| செருவிளை | வெள்ளைக்காக்கணம் . |
| செருவுறுதல் | ஊடுதல் . |
| செல் | போகை ; வாங்கிய கடனுக்குச் செலுத்தியதொகை ; கடன் ; கடன் செலுத்தியதற்கு பத்திர மெழுதுங் குறிப்பு ; கையொப்பம் ; சென்ற காலவளவு ; மேகம் ; வானம் ; குடி ; வேல் ; கறையான் . |
| செல்கதி | புகல் ; உய்வு . |
| செல்காலம் | செல்வாக்குள்ள காலம் ; இறந்த காலம் . |
| செல்கை | காண்க : செல்வாக்கு . |
| செல்சார் | பற்றுக்கோடு . |
| செல்சார்வு | பற்றுக்கோடு . |
| செல்சுடர் | மறையும் சூரியன் . |
| செல்ல | அகல ; சிறிது காலங்கழித்து ; முடிய . |
| செல்லக்கட்டுதல் | திட்டமாய் முடித்தல் ; வசப்படுத்துதல் ; கடன் தீர்த்தல் . |
| செல்லங்கொஞ்சுதல் | குழந்தை ; பெண்டிர் முதலியவருடன் கொஞ்சிப்பேசுதல் . |
| செல்லங்கொடுத்தல் | அன்புமேல¦ட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல் . |
| செல்லச்சிரிப்பு | புன்சிரிப்பு . |
| செல்லடித்தல் | கறையானால் தின்னப்படுதல் ; கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்தில் பதிதல் . |
| செல்லத்தனம் | காண்க : செல்லம் . |
| செல்லநடை | குழந்தை ; முதலியோரின் தளர்நடை ; மந்தநடை . |
| செல்லப்பிள்ளை | அருமைக்குழந்தை ; சுகவாசி . |
| செல்லப்பெண் | அருமைப்பெண் . |
| செல்லப்பேச்சு | மழலைச்சொல் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு . |
| செல்லம் | செல்வம் ; சொந்தக் கருவூலம் ; வெற்றிலைபாக்கு வைக்கும் பெட்டி ; விநோதம் ; இளக்காரம் ; கொஞ்சற்பேச்சு . |
| செல்லரித்தல் | கறையானால் தின்னப்படுதல் . |
| செல்லல் | துன்பம் ; வெறுப்பு ; ஒருமீன்வகை . |
| செல்லவைத்தல் | செல்லாத நாணயத்தைச் செலாவணியாக்குதல் . |
| செல்லன் | அருமைக் குழந்தை ; சுகவாசி ; செல்வமுள்ளவன் . |
| செல்லாக்காசு | செலாவணியாகாத பணம் ; நாணயம் செல்வாக்குகளை இழந்தவன் ; ஒரு மீன்வகை ; மருந்துப்பச்சிலைவகை . |
| செல்லாக்காலம் | செல்வாக்கு நீங்கின காலம் ; தள்ளாத கிழப்பருவம் . |
| செல்லாநெறி | செல்லுதற்கு அரிய வழியாகிய வான் . |
| செல்லாமை | பிரிந்துபோகாமை ; வறுமை ; வலியின்மை ; செய்யவேண்டியவை ; ஆற்றாமை . |
| செல்லாவாழ்க்கை | வறுமைவாழ்வு . |
| செல்லாவிடம் | வறுமைக்காலம் ; பலிக்காத இடம் . |
| செல்லாறு | கைக்கொள்ளும் முறை . |
| செல்லி | அருமைப்பெண் ; ஓர் ஊர்த்தேவதை . |
| செல்லிடம் | பொருளுள்ள காலம் ; பலிக்குமிடம் ; போகுமிடம் . |
| செல்லியம் | கோழி . |
| செல்லு | காண்க : செல் . |
| செல்லுச்சீட்டு | ரசீது . |
| செல்லுஞ்சீட்டு | உண்மையான கையெழுத்து ; செலாவணியான பத்திரம் முதலியன ; ரசீது . |
| செல்லுஞ்சொல் | நாடெங்கும் செல்லும் மதிப்பு ; பிறர்க்கு ஏற்கக்கூறும் சொல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 503 | 504 | 505 | 506 | 507 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செருக்கொடுத்தல் முதல் - செல்லுஞ்சொல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடன், காலம், குழந்தை, காண்க, தின்னப்படுதல், கறையானால், படைவீரர், செல்லம், சுகவாசி, ரசீது, கொஞ்சற்பேச்சு, அருமைப்பெண், பற்றுக்கோடு, செல்வாக்கு, கனைத்தல், செருப்பு, படர்கொடிவகை, பதிதல், செல், முதலியன, சொல், செருகுதல், சிலந்திமரம்

