தமிழ் - தமிழ் அகரமுதலி - சுருங்கை முதல் - சுரோணி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சுருங்கை | நீர் செல்லுதற்கு நிலத்துள் கற்களால் அமைக்கப்படும் கரந்துபடுத்த வழி ; கோட்டையின் கள்ளவழி ; நுழைவாயில் ; மாளிகையின் சாளரம் . |
சுருசுருத்தல் | ஒலித்தல் ; ஊக்கமாதல் . |
சுருசுரெனல் | ஒலித்தற்குறிப்பு ; வேகத்தோடு தீப்பற்றுதற்குறிப்பு ; உடம்பு சுடுதற்குறிப்பு . |
சுருட்கொண்டை | மயிர்முடிவகை . |
சுருட்கொள்ளுதல் | சுருண்டுவிழுதல் . |
சுருட்டி | ஆலவட்டம் ; ஒரு பண்வகை ; எடுபிடிவகை ; பட்டுச்சீலைச் சுருட்டு ; காண்க : மயிர்சிகைப்பூண்டு . |
சுருட்டிக்கொள்ளுதல் | சூழ்ச்சியாய்க் கைப்பற்றுதல் ; ஆடை , பாய் முதலியவற்றைச் சுருட்டி வைத்துக்கொள்ளல் . |
சுருட்டிப்பிடித்தல் | நோய் முதலியன உடலை மெலிவித்தல் ; நோவுண்டாம்படி பசியால் குடல் சுருட்டப்படுதல் ; ஆடை முதலியவற்றைச் சுருட்டிப் பிடித்தல் . |
சுருட்டிமடக்குதல் | வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல் ; சூழ்ச்சியாய்ப் பறித்தல் . |
சுருட்டியடித்தல் | சுழற்றித் தள்ளுதல் ; வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல் . |
சுருட்டு | சுருட்டுகை ; சுருள் ; புகையிலைச்சுருள் ; தந்திரம் ; உயர்ந்த பட்டுவகை . |
சுருட்டுக்குடித்தல் | சுருட்டுப் புகையை உட்கொள்ளுதல் . |
சுருட்டுதல் | சுருளச்செய்தல் ; கவர்தல் . |
சுருட்டுப்பட்டு | உயர்ந்த பட்டுவகை . |
சுருட்டை | சுருண்ட மயிர் ; சுருட்டை மயிருள்ள பிள்ளை ; ஒரு பாம்புவகை ; மிளகாய்ச் செடியில் காணும் இலைநோய்வகை . |
சுருண்டுபோதல் | வாடியொடுங்குதல் ; இறத்தல் . |
சுருணி | யானைத்தோட்டி . |
சுருணை | சுருட்டி வைத்த துணிமுதலிய பொருள் ; கணக்கெழுதப்பட்ட ஒலைச்சுருள் ; சாணிச் சுருணை ; தீப்பற்றுதற்குரிய பந்தம் ; பூண் ; பந்து ; வைக்கோற் சுருள் ; கட்டட வளைவுவகை . |
சுருதஞானம் | கேள்வியால் உண்டாகும் அறிவு . |
சுருதம் | காதாற் கேட்டது : எழுதாக்கிளவியாகிய வேதம் ; வரலாறு . |
சுருதி | காது ; சுதி ; ஒலி ; எழுதா மறை ; இசைச் சுரத்திற்கு ஆதாரமான ஒலி ; இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச்சுரம் ; புகழ் ; அசரீரி வாக்கு ; பொய்ச் செய்தி ; வேதசுரம் . |
சுருதிகூட்டுதல் | வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல் . |
சுருதிகொடுத்தல் | இசைக்கு ஒத்த துணை ஒலி எழுப்புதல் . |
சுருதிசேர்த்தல் | காண்க : சுருதிகூட்டுதல் . |
சுருதியான் | வேதத்திற்குரிய பிரமன் ; வேதத்தால் அறியப்படும் கடவுள் . |
சுரும்பர் | வண்டு . |
சுரும்பாவன் | வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் . |
சுரும்பாயன் | வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் . |
சுரும்பித்தல் | ஒலித்தல் . |
சுரும்பு | வண்டு ; ஆண்வண்டு ; மலை . |
சுருவம் | வடிவம் ; தன்மை ; வேள்விக்குரிய நெய்த்துடுப்பு ; அகப்பைவகை . |
சுருவை | வேள்விக்குரிய நெய்த்துடுப்பு . |
சுருள் | வெற்றிலைச் சுருள் ; சுருளுகை ; சுருண்ட பொருள் ; கட்டு ; ஐவகைக் கூந்தல் முடிகளுள் ஒன்று ; மகளிர் காதணிவகை ; ஒலைச்சுருளின் மடிப்பு ; திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு ; நாளம் . |
சுருள்வைத்தல் | மனமக்களுக்குத் தாம்பூலத்துடன் பரிசிற்பொருள் அளித்தல் . |
சுருளமுது | தாம்பூலம் . |
சுருளல் | சுருளுதல் ; மயிர் முதலியவற்றின் சுருள் . |
சுருளவாட்டுதல் | மருந்து முதலியவற்றுக்காகப் பச்சிலை முதலியவற்றை வாட்டுதல் ; வருந்த வேலை வாங்குதல் . |
சுருளி | தொழுகண்ணிச்செடி ; இலங்கை மரவகை . |
சுருளுதல் | சுருளாதல் ; சுருங்குதல் ; சோர்தல் ; துன்பத்திற்குள்ளாதல் . |
சுருளை | சுருள் ; குருத்து ; காதணிவகை . |
சுரூபம் | நல்லுருவம் ; வடிவம் ; தன்மை . |
சுரூபவதி | அழகி . |
சுரூபி | அழகுள்ளவன்(ள்) |
சுரேசன் | இந்திரன் ; முருகன் . |
சுரேசுவரி | உமை ; தேவகங்கை ; முசுமுசுக்கை . |
சுரேந்திரன் | இந்திரன் |
சுரை | சுரைக்கொடி ; பசு முதலியவற்றின் மடி ; கறவைப் பசு ; கள் ; தேன் ; குழிந்த இடம் ; உட்டுளை ; மூங்கிற்குழாய் ; திரிக்குழாய் ; திருகாணியைச் செலுத்துஞ்சிறுகுழாய் ; மூட்டுவாய் ; அம்புத்தலை ; பூண் ; கூரான தோண்டு பாரைவகை . |
சுரைக்கந்தகம் | ஒரு கந்தகவகை . |
சுரைக்குடம் | சுரைக்காயால் அமைந்த குடம் . |
சுரைக்குடுக்கை | சுரைக்காய்க் குப்பி , உலர்ந்த சுரைக்காய் . |
சுரைப்பழம் | சுரையின் பழம் ; பயனற்றவன் . |
சுரோணி | நிதம்பம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 484 | 485 | 486 | 487 | 488 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுருங்கை முதல் - சுரோணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சுருள், சுருட்டி, வடிவம், தன்மை, மன்மதன், வில்நாணை, வண்டு, வண்டாகிய, உடைய, வேள்விக்குரிய, முதலியவற்றின், இந்திரன், சுருளுதல், தாம்பூலத்துடன், நெய்த்துடுப்பு, காதணிவகை, சுருதிகூட்டுதல், பொருள், முதலியவற்றில், பிறரைக், வாதம், முதலியவற்றைச், சுருட்டு, காண்க, கீழ்ப்படுத்துதல், உயர்ந்த, சுருணை, ஒலித்தல், மயிர், சுருண்ட, பட்டுவகை, சுருட்டை, பூண்