முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுரவன்பாக்கு முதல் - சுருங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுரவன்பாக்கு முதல் - சுருங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுரவன்பாக்கு | உயர்ந்த பாக்குவகை . |
| சுரழ் | இலவம்பிசின் . |
| சுரளிகை | பாலைமரம் . |
| சுரன் | அறிஞன் ; சூரியன் ; காடு ; சிறுமீன்வகை . |
| சுரா | கள் . |
| சுராகரம் | கள்ளுக்கு இருப்பிடமான தென்னை . |
| சுராட்டு | ஏகாதிபத்தியமுடைய இந்திரன் ; நான்கு அடியுற்ற செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது ; 50 இலட்சத்துக்குமேல் ஒரு கோடிக்குக்கீழ் இறைவருவாயுடைய அரசன் . |
| சுராதிராசன் | காண்க : சுரகுரு . |
| சுராரி | அசுரர் . |
| சுராலயம் | தேவர் வாழிடமாகிய மேரு . |
| சுராலை | சாம்பிராணி . |
| சுராளம் | பெருமித நடை . |
| சுரி | சுழற்சி ; சுழி ; எருதின் நெற்றிவெள்ளைச் சுழி ; அணி உறுப்புவகை ; நரி ; சேறு ; துளை ; ஏட்டுத் துளை ; ஏட்டில் துளையிடும் கருவி . |
| சுரிகை | கத்தி ; உடைவாள் ; கவசம் . |
| சுரித்தல் | சுழிதல் ; சுருளுதல் ; திரைதல் ; வகை வாய்க் கிடத்தல் ; சேற்றிற் புதைத்தல் ; வற்றுதல் ; சுருங்குதல் ; மனஞ்சுழலுதல் ; சேறாதல் ; உள்ளொடுக்குதல் ; சுளித்தல் ; துளைவிடுதல் . |
| சுரிதகம் | கலிப்பா உறுப்பு ஆறனுள் இறுதி உறுப்பு ; கூத்தில் சொல்நிகழும் வகையில் வரும் எட்டடிப் பாட்டு ; ஒரு தலையணிவகை . |
| சுரிதம் | கலக்கப்பட்டது ; வெட்டப்பட்டது . |
| சுரிதல் | சுழிதல் ; சுருளுதல் ; மடிப்புவிழுதல் ; கடைகுழலுதல் . |
| சுரிப்புறம் | சங்கு ; நத்தை ; ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம் . |
| சுரிபோடுதல் | தமரிடுதல் . |
| சுரிமண் | புதைமணல் ; சேறு . |
| சுரிமுகம் | சுரிந்த முகமுடைய சங்கு ; நத்தை . |
| சுரியல் | வளைவு ; சுருண்ட மயிர் ; மயிர் ; பெண் மயிர் . |
| சுரியாணி | முறுக்காணி . |
| சுரியூசி | பனையேட்டில் துளையிடுங் கருவி . |
| சுரீரெனல் | காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; தேள் கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வலிக்குறிப்பு . |
| சுருக்க | சுருக்கமாக ; விரைவாக . |
| சுருக்கம் | ஆடை முதலியவற்றின் சுருக்கு ; சிறுமை ; வறுமை ; இவறல் . |
| சுருக்களஞ்சி | குழைச்சு ; கண்ணி ; கட்டு . |
| சுருக்காங்கி | குழைச்சு ; கண்ணி ; கட்டு . |
| சுருக்கி | தொட்டாற்சுருங்கி ; சிறுகீரை ; ஆமை . |
| சுருக்கிடுதல் | சுருக்குப்போடுதல் ; சுருக்கில் மாட்டுதல் ; காண்க : சுருக்குக்கொடுத்தல் . |
| சுருக்கிப்பிடித்தல் | செலவு முதலியன குறைத்தல் ; வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல் . |
| சுருக்கு | சுருங்குகை ; ஆடை முதலியவற்றின் மடிப்பு ; குழைச்சு ; கண்ணி ; கட்டு ; குறைவு ; சுருக்கம் ; கடும்பற்றுள்ளம் ; விரைவு ; அக்கறை ; சுரணை ; காண்க : ஒட்டணி ; அடி ; வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு ; பூமாலைவகை ; வில்வம் . |
| சுருக்குக்கஞ்சிகை | வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை . |
| சுருக்குக்கொடுத்தல் | காண்க : சுருக்கேற்றுதல் ; அடிகொடுத்தல் ; கண்டிப்புக் காட்டுதல் . |
| சுருக்குதல் | குறைத்தல் ; உள்ளிழுத்தல் ; ஆடை முதலியன சுருக்குதல் ; குடை முதலியன ஒடுக்குதல் ; வலை ; பை முதலியன சுருக்குதல் ; முலாம் பூசுதல் ; ஒலை முதலியன அணிதல் . |
| சுருக்குப்பை | வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை . |
| சுருக்குப்போட்டுக்கொள்ளுதல் | கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல் . |
| சுருக்குவலை | ஒரு வலைவகை . |
| சுருக்குவழி | குறுக்குப்பாதை ; கணக்குத் தீர்வதற்கான எளிய முறை . |
| சுருக்குவார் | விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவிவகை . |
| சுருக்குவிழுதல் | கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை ; உடலில் மடிப்பு விழுகை ; மோசத்துக்குள்ளாதல் . |
| சுருக்குவைத்தல் | கண்ணிவைத்தல் ; செருக்கை ஒடுக்க வழிதேடுதல் . |
| சுருக்கேற்றுதல் | உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல் . |
| சுருக்கை | பூமாலைவகை ; வில்வம் . |
| சுருங்கச்சொல்லணி | ஓர் அணிவகை . |
| சுருங்கச்சொல்லல் | நூல் அழகினுள் ஒன்றான சுருக்கமாகக் கூறுதல் . |
| சுருங்கப்பிடித்தல் | குறைத்தல் . |
| சுருங்கல் | சுருங்கினது ; கோட்டையின் கள்ளவழி ; பூமாலைவகை ; நுழைவாயில் ; மடிப்பு . |
| சுருங்கில் | சிறுவீடு . |
| சுருங்கு | சலதாரை . |
| சுருங்குதல் | சிறுகுதல் ; ஒடுங்குதல் ; சுருக்கமாதல் ; உள்ளடங்குதல் ; ஒழுக்கம் தவறுதல் ; ஆடை முதலியன சுருக்கம் கொள்ளுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 483 | 484 | 485 | 486 | 487 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுரவன்பாக்கு முதல் - சுருங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, காண்க, கட்டு, குழைச்சு, கண்ணி, குறைத்தல், சுருக்குதல், பூமாலைவகை, மடிப்பு, மயிர், சுருக்கம், சேறு, துளை, கருவி, வில்வம், சுருக்கேற்றுதல், விழுகை, சுழி, சுழிதல், சுருக்குக்கொடுத்தல், முதலியவற்றின், சங்கு, உண்டாகும், சுருக்கு, உறுப்பு, சுருளுதல், சுருங்குதல், நத்தை

