முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அலங்காரசாத்திரம் முதல் - அலவன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அலங்காரசாத்திரம் முதல் - அலவன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அலருதல் | மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் . |
| அலர்மகள் | திருமகள் . |
| அலர்மேல்மங்கை | திருமகள் . |
| அலரவன் | பிரமன் . |
| அலரி | பூ ; ஒரு பூச்செடி ; நீர்வாவி ; கண்வரி ; அழகு ; சூரியன் ; தீ ; தேனீ ; கோதுமை ; கோமாரி ; ஆற்றுப்பாலை . |
| அலரோன் | காண்க : அலரவன் . |
| அலவர் | உழுதொழிலாளர் ; உழவர் . |
| அலவல் | இழை விலக்கமாய் நெய்யப்பட்டது ; அலமரல் ; கந்தைச்சீலை ; விபச்சாரம் . |
| அலவலை | ஆராயாது செய்வது ; விடாது பேசுவோன் ; மனச் சஞ்சலம் . |
| அலவன் | நண்டு ; ஆண்நண்டு ; பூனை ; கற்கடகராசி ; நிலா . |
| அலங்காரப்பேச்சு | சிங்காரப்பேச்சு ; புனைவுரை . |
| அலங்காரபஞ்சகம் | வெண்பா , கலித்துறை , அகவல் , விருத்தம் , சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாக வரப் பாடப்படும் நூல் . |
| அலங்காரம் | சிங்காரம் ; அழகு ; அணிகலன் ; செய்யுள் அணி ; சங்கீத உறுப்புவகை ; பெருமாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு , குழம்பு முதலிய உணவு ; வெடிகாரம் . |
| அலங்காரி | அழகு செய்யப்பெற்றவள் . |
| அலங்கிருதம் | சிங்காரம் . |
| அலங்கிருதி | சிங்காரம் . |
| அலங்குதல் | அசைதல் ; மனம் தத்தளித்தல் ; இரங்குதல் ; ஒளிசெய்தல் . |
| அலங்கை | துளசி . |
| அலங்கோலம் | சீர்கேடு . |
| அலசடி | துன்பம் . |
| அலசம் | ஒரு மரம் ; சோம்பு ; மந்தம் ; கால்விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண் . |
| அலசல் | இழை விலகியிருக்கை ; இழை நெருக்கமில்லாத ஆடை ; சிதறுண்ட பொருள் ; பயனற்ற வேலை ; சோம்பல் . |
| அலசி | நத்தைவகை . |
| அலசுதல் | அலைதல் ; சோர்தல் ; வெட்கும்படி பலபடப் பேசுதல் ; வருந்துதல் ; நீரில் கழுவுதல் . |
| அலஞ்சரம் | மட்குடுவை . |
| அலட்சியம் | கவனமின்மை ; மதிப்பின்மை . |
| அலட்டு | வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை ; தொந்தரை ; பிதற்றுகை . |
| அலட்டுச்சன்னி | பிதற்றுங் குணமுடைய சன்னிநோய் . |
| அலட்டுதல் | பிதற்றுதல் ; அங்கலாய்த்தல் ; தொந்தரை செய்தல் . |
| அலத்தகம் | செம்பஞ்சுக்குழம்பு ; செம்பருத்தி . |
| அலத்தம் | செம்பருத்தி ; சூரியகாந்தி . |
| அலத்தல் | அலைதல் ; ஆசைப்படுதல் ; துன்பப்படுதல் . |
| அலத்தி | மின்மினி ; நுளம்பு . |
| அலதரன் | கலப்பையைக் கொண்டவன் ; உழவன் ; பலராமன் . |
| அலதிகுலதி | அலங்கோலம் . |
| அலந்தம் | மெய்யீறு . |
| அலந்தல் | மயிலடிக் குருந்து ; செங்கத்தாரிப்பூண்டு . |
| அலந்தலை | துன்பம் ; கலக்கம் . |
| அலந்தை | துன்பம் ; நீர்நிலை . |
| அலந்தோன் | துன்பமுற்றோன் . |
| அலப்படை | கலப்பை ஆயுதம் . |
| அலப்பல் | உளறுதல் ; பிதற்றல் ; கலப்புக்கட்டோசை . |
| அலப்பன் | வீண்பேச்சுக்காரன் . |
| அலப்பாட்டுதல் | மனம் சுழலுதல் . |
| அலப்பு | மனக்கலக்கம் . |
| அலப்புதல் | வீண்பேச்சுப்பேசுதல் ; உளறுதல் ; அலைத்தல் . |
| அலபதுமம் | நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று . |
| அலம் | துன்பம் ; தேள் ; விருச்சிகராசி ; அமைவு ; போதும் ; திருப்தி ; கலப்பை ; நீர் . |
| அலம்பல் | ஆரவாரம் ; எதிர்பாரா விளம்பரம் ; இடையூறு ; கொள்ளைநோய் ; அலக்குத்தடி ; வளார் . |
| அலம்பு | பத்து நாடிகளுள் ஒன்று . |
| அலம்புடை | பத்து நாடிகளுள் ஒன்று . |
| அலம்புதல் | ஒலித்தல் ; ததும்புதல் ; தவறுதல் ; அலைதல் ; கழுவுதல் ; அலைத்தல் ; கலத்தல் . |
| அலம்வருதல் | அமைவுண்டாதல் ; மனம் சுழலுதல் . |
| அலமரல் | சுழற்சி ; மனச்சுழற்சி ; வருத்தம் ; அச்சம் . |
| அலமருதல் | சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் . |
| அளமருதல் | சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் . |
| அலமலத்தல் | அங்கலாய்த்தல் ; கலங்குதல் . |
| அலமலத்துதல் | கலக்கமுறச் செய்தல் . |
| அலமாப்பு | துன்பம் . |
| அலமாரி | பேராசையுள்ளவன் ; சுவர் அடுக்குமாடம் ; நிலைப்பேழை . |
| அலமுகம் | கலப்பை நுனி ; கொழுமுனை . |
| அலமுகவிரும்பு | கலப்பைக்கொழு . |
| அலர் | பழிச்சொல் ; மலர்ந்த பூ ; மகிழ்ச்சி ; நீர் ; மஞ்சள் ; மிளகுகொடி . |
| அலர்த்துதல் | மலரச்செய்தல் . |
| அலர்தல் | மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் . |
| அலங்காரசாத்திரம் | அணியிலக்கண நூல் . |
| அலங்காரப்படுத்தல் | ஒப்பனை செய்தல் . |
| அலங்காரப்பிரியன் | திருமால் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலங்காரசாத்திரம் முதல் - அலவன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சுழலுதல், துன்பம், மனம், வருந்துதல், அசைதல், செய்தல், ஒன்று, கலப்பை, சிங்காரம், அலைதல், அழகு, அலைத்தல், பெருத்தல், உளறுதல், பரத்தல், விளங்குதல், நீர், அஞ்சுதல், நாடிகளுள், பத்து, செம்பருத்தி, சுரத்தல், அலரவன், அலங்கோலம், அலமரல், மலர்தல், திருமகள், அங்கலாய்த்தல், தொந்தரை, கழுவுதல், நூல்

