முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அல்லிமூக்கு முதல் - அலங்கனாரி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அல்லிமூக்கு முதல் - அலங்கனாரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அல்வழிப் புணர்ச்சி | வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை ; அவை 14 : வினைத்தொகை , பண்புத்தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , அன்மொழித்தொகை , எழுவாய்த்தொடர் , விளித்தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , இடைச் சொற்றொடர் , உரிச் சொற்றொடர் , அடுக்குத்தொடர் . |
| அல்வான் | வண்ணத்துணி . |
| அலக்கண் | துன்பம் . |
| அலக்கலக்காய் | தனித்தனியாய் . |
| அலக்கழித்தல் | அலைத்து வருத்துதல் ; கெடுத்தல் ; அழகு காட்டுதல் . |
| அலக்கழிதல் | வருந்துதல் . |
| அலக்கு | வரிச்சு ; துறட்டுக்கோல் ; தனிமை ; எலும்பு ; கிளை ; கோட்டை . |
| அலக்குத்தடி | வேலி அடைக்கும் மரக்கிளை ; துறட்டுக்கோல் . |
| அலக்குதல் | அசைத்தல் ; துணி முதலியன வெளுத்தல் . |
| அலக்குப்போர் | சேவகர் ஈட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை . |
| அலக்கைச்சுரம் | கீழ்க்காய்நெல்லி . |
| அலக்கொடுத்தல் | ஊறு செய்தல் . |
| அலக்கொடுப்பு | ஊறு . |
| அலகம் | காண்க : ஆனைத்திப்பிலி ; வேப்பலகு . |
| அலகம்பு | அம்புவகை . |
| அலகரி | பெரிய அலை . |
| அலகிடல் | அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் . |
| அலகிடுதல் | அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் . |
| அலகின்மாறு | துடைப்பம் ; விளக்குமாறு . |
| அலகு | எண் ; அளவு ; அளவுகருவி ; பலகறை ; மகிழம் விதை ; நென்மணி ; பயிர்க்கதிர் ; ஆயுதம் ; ஆயுதத்தினலகு ; கூர்மை ; பறவைமூக்கு ; தாடை ; உயிர்களின் கொடிறு ; கைம்மரம் ; நூற்பாவின் அலகு ; துடைப்பம் ; பொன்னாங்காணி ; அறுகு ; நுளம்பு ; இலட்சம் பாக்கு ; ஆண்பனை ; அகலம் ; குற்றம் . |
| அலகுகட்டுதல் | மந்திரத்தால் வாயைக்கட்டுதல் ; வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல் ; கணக்குத் தீர்த்தல் . |
| அலகுகட்டை | வண்டிச்சக்கர வட்டை . |
| அலகுகழித்தல் | கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல் . |
| அலகுகிட்டுதல் | சன்னியால் பல்லுக் கிட்டுதல் . |
| அலகுசோலி | காண்க : அறுகு . |
| அலகுஞ்சம் | மின்மினி ; நுளம்பு . |
| அலகுநிறுத்தல் | திரௌபதியின் விழாவிற்குமுன் வாள் நாட்டும் சடங்கு . |
| அலகுபருப்பு | பட்டாணிக்கடலை . |
| அலகுபனை | ஒருவகை மடற்பனை . |
| அலகுபூட்டு | வேண்டுதலுக்கென்று இடப்படும் வாய்ப்பூட்டு . |
| அலகுபோடுதல் | வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல் . |
| அலகை | பேய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; காட்டுக் கற்றாழை ; அளவு . |
| அலகைக்கொடியாள் | பேய் உருவம் பொறித்த கொடியையுடைய காளி . |
| அலகைத்தேர் | பேய்த்தேர் . |
| அலகைமுலையுண்டோன் | பேயின் முலைப்பாலுடன் அவளுயிரை மாய்த்த கண்ணபிரான் . |
| அலங்கடை | அல்லாதவிடத்து . |
| அலங்கம் | அரண் ; கொத்தளம் ; ஆற்றிடைக்குறை . |
| அலங்கமலங்க | பொறிகலங்க . |
| அலங்கரணம் | ஒப்பனை . |
| அலங்கரித்தல் | அழகுபடுத்துதல் . |
| அலங்காரித்தல் | அழகுபடுத்துதல் . |
| அலங்கல் | பூமாலை ; மயிர்ச்சூட்டு மாலை ; தளிர் ; அசையுங்கதிர் ; துளசி ; ஒழுங்கு ; ஒளி ; அசைதல் ; மனங்கலங்கல் . |
| அலங்கனாரி | முத்துச்சிப்பி |
| அல்லிமூக்கு | சில்லிமூக்கு ; இரத்தம் ஒழுகும் மூக்கு . |
| அல்லியம் | மாயோன் ஆடலுள் ஒன்று ; இடையர் ஊர் ; கலப்பை ; அழகின்மை . |
| அல்லியரிசி | அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறு விதை . |
| அல்லியன் | தன் குழுவைப் பிரிந்த யானை . |
| அல்லியாமரம் | படகு வலிக்கும் தண்டு . |
| அல்லியான் | பிரமன் . |
| அல்லிருள் | இரவில் இருளின் செறிவு ; இரவின் செறிந்த இருள் . |
| அல்லுச்சில்லுப்படுதல் | சிறிது சிறிதாகக் கெடுதல் . |
| அல்லுதல் | முடைதல் ; பின்னிக்கொள்ளுதல் . |
| அல்லும்பகலும் | இரவும் பகலும் , எப்பொழுதும் . |
| அல்லுழி | அல்லாத இடத்து . |
| அல்லூரம் | வில்வமரம் . |
| அல்லை | அல்லிக்கொடி ; தாய் . |
| அல்லைதொல்லை | மிக்க துன்பம் . |
| அல்லோலகல்லோலம் | பேராரவாரம் . |
| அல்லோன் | சந்திரன் ; ஒழிந்தோன் . |
| அல்வழக்கு | தகாத ஒழுக்கம் . |
| அல்வழி | நெறி அல்லாத நெறி ; தகாத வழி ; அல்வழிப் புணர்ச்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அல்லிமூக்கு முதல் - அலங்கனாரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தொடர், விதை, அல்லாத, அறுகு, அளவு, அலகு, துடைப்பம், நுளம்பு, பேய், நெறி, தகாத, அழகுபடுத்துதல், பெருக்குதல், மந்திரத்தால், காட்டல், துன்பம், துறட்டுக்கோல், சொற்றொடர், வினைமுற்றுத், புணர்ச்சி, காண்க, அளவிடுதல், அல்வழிப், பிரித்துக், சீர், செய்யுளில், துடைப்பத்தால்

