முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குறட்டாழிசை முதல் - குறிஞ்சியாழ் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குறட்டாழிசை முதல் - குறிஞ்சியாழ் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குறம் | குறச்சாதி ; குறத்தி சொல்லுங் குறி ; குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று ; குறத்திப்பாட்டு . |
| குறவஞ்சி | குறிசொல்லுங் குறத்திமகள் ; குறத்திப்பாட்டு . |
| குறவணவன் | ஒரு புழு , எருக்குவியலில் தோன்றும் வெண்புழு . |
| குறவழக்கு | தீராவழக்கு ; பிடிவாதமாய் மேற்கொள்ளும் தீய வழக்கு . |
| குறவன் | குறிஞ்சிநில மகன் ; பாலை நிலத்தவன் ; ஒருசாதியான் ; பாசாங்கு பண்ணுகிறவன் ; பாதரசம் . |
| குறவாணர் | மலைக்குறவர் . |
| குறவி | குறத்தி ; குறச்சாதிப் பெண் . |
| குறவை | ஒரு மீன்வகை . |
| குறழ்தல் | குனிதல் . |
| குறள் | குறுமை ; ஈரடி உயரமுள்ள குள்ளன் ; பூதம் ; சிறுமை ; இருசீரடி ; குறள்வெண்பா ; திருக்குறள் . |
| குறள்வெண்பா | முதலடி நாற்சீரும் இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா . |
| குறளடி | இருசீரான் வரும் அடி . |
| குறளன் | குள்ளன் ; வாமனனாக அவதாரம் செய்த திருமால் . |
| குறளி | குறியவள் ; குறளிப்பிசாசு ; குறளிவித்தை ; கற்பழிந்தவள் . |
| குறளிக்கூத்து | குறும்புச் செயல்கள் . |
| குறளிவித்தை | குறளியின் உதவியால் செய்யும் மாயவித்தை . |
| குறளை | கோள் சொல்லுதல் ; வறுமை ; நிந்தனை ; குள்ளம் . |
| குறாவுதல் | ஒடுங்குதல் ; வாடுதல் ; மெலிதல் ; புண் ஆறி வடுவாதல் . |
| குறாள் | கன்னி ; பெண்ணாடு . |
| குறி | அடையாளம் ; இலக்கு ; குறியிடம் ; நினைத்த இடம் ; நோக்கம் ; குறிப்பு ; மதக்கொள்கை ; முன்ன்றிந்து கூறும் நிமித்தம் ; சபை ; முறை ; காலம் ; ஒழுக்கம் ; ஆண்பெண் குறி ; அடி ; இலக்கணம் . |
| குறிக்கொள்வோன் | செயல்முடிக்குந் துணிவுள்ளோன் . |
| குறிக்கொள்ளுதல் | கைக்கொள்ளுதல் ; மனத்துட்கொள்ளுதல் ; கவனமாகப் பாதுகாத்தல் ; மேன்மைப்படுதல் ; ஒன்றையே குறியாக்க் கடைப்பிடித்தல் . |
| குறிக்கோள் | மனஒருமை ; நினைவில் வைத்தல் ; அறியுந்திறம் ; உயர்ந்த நோக்கம் ; நல்லுணர்வு ; யாழ் மீட்டுகையில் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல் முதலிய தொழில்கள் . |
| குறிகாணுதல் | அறிகுறி தோன்றுதல் ; அடையாளந் தோன்றல் ; குறிப்பிடுதல் ; மகப்பேற்றுக் குறிதோன்றுதல் . |
| குறிகூடுதல் | நோக்கம் நிறைவேறுதல் . |
| குறிகெட்டவன் | நெறியற்றவன் . |
| குறிகேட்டல் | குறிசொல்லுமாறு நிமித்திகனை வினாவுதல் . |
| குறிச்சி | குறிஞ்சிநிலத்தூர் ; ஊர் . |
| குறிச்சூத்திரம் | ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற நூற்பா . |
| குறிசொல்லுதல் | குறியிடம் பார்த்துச் சாத்திரஞ் சொல்லல் , பின் நிகழப்போவனவற்றை முன்னறிந்து கூறுதல் . |
| குறிஞ்சா | ஒரு கொடிவகை . |
| குறிஞ்சி | மலையும் மலைசார்ந்த இடமும் ; குறிஞ்சிப்பண் , ஒரு பண்வகை ; புணர்தலாகிய உரிப்பொருள் ; குறிஞ்சிப்பாட்டு ; மருதோன்றி ; செம்முள்ளி ; குறிஞ்சிமரம் ; ஈந்துமரம் ; குறிஞ்சிப்பூ . |
| குறிஞ்சிக்கிழவன் | முருகக்கடவுள் . |
| குறிஞ்சிக்கிறைவன் | முருகக்கடவுள் . |
| குறிஞ்சித்தெய்வம் | முருகக்கடவுள் . |
| குறிஞ்சிப்பண் | நால்வகைப் பெரும்பண்களுள் ஒன்று . |
| குறிஞ்சிப்பாறை | தொண்டகப் பாறை . |
| குறிஞ்சிமன் | காண்க : குறிஞ்சிக்கிழவன் . |
| குறிஞ்சியாழ் | குறிஞ்சிநிலத்து யாழ் , குறிஞ்சிப்பண் . |
| குறட்டாழிசை | குறள்வெண்பாவிற்குரிய பாவினம் . |
| குறட்டுச்சுவர் | மண்தாங்கிச் சுவர் . |
| குறட்டுவாதம் | ஒருவகை வலிப்புநோய் . |
| குறட்டை | உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி ; சவரிக்கொடி ; எலிவகை . |
| குறட்பா | குறள்வெண்பா . |
| குறடா | குதிரைச்சவுக்கு . |
| குறடு | கம்மியர் குறடு ; சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு ; பாதக்குறடு ; மரத்துண்டு ; பலகை ; இறைச்சி கொத்தும் பட்டை மரம் ; தேர் முதலியவற்றின் அச்சுக்கோக்குமிடம் ; சந்தனக்கல் ; ஒட்டுத்திண்ணை ; திண்ணை ; பறைவகை ; நண்டு . |
| குறண்டி | செவ்வழிப் பண்வகை ; முட்செடி ; தூண்டில் முள் . |
| குறண்டுதல் | வளைதல் ; வலிப்புக் கொள்ளுதல் ; சுருளுதல் . |
| குறத்தனம் | பாசாங்கு , கள்ளத்தனம் . |
| குறத்தி | குறிஞ்சிநிலப் பெண் ; குறச்சாதிப் பெண் ; குறிகூறுபவள் ; நிலப்பனை . |
| குறத்திப்பாட்டு | தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 358 | 359 | 360 | 361 | 362 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறட்டாழிசை முதல் - குறிஞ்சியாழ் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறத்தி, நோக்கம், பெண், குறிஞ்சிப்பண், குறள்வெண்பா, முருகக்கடவுள், வரும், குறத்திப்பாட்டு, குறடு, குறி, யாழ், குறிஞ்சிக்கிழவன், பண்வகை, குள்ளன், பாசாங்கு, ஒன்று, குறச்சாதிப், ஈரடி, குறளிவித்தை, குறியிடம்

