முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குளிர்காய்தல் முதல் - குறட்டரியம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குளிர்காய்தல் முதல் - குறட்டரியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குற்றங்காணுதல் | தவறு கண்டுபிடித்தல் . |
| குற்றச்சாட்டு | குற்றப்பத்திரிகை . |
| குற்றஞ்சாட்டுதல் | ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல் . |
| குற்றஞ்சுமத்தல் | ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல் . |
| குற்றப்படுதல் | குற்றத்திற்குள்ளாதல் . |
| குற்றப்பத்திரம் | நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் . |
| குற்றப்பத்திரிகை | நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் . |
| குற்றப்பாடு | குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை . |
| குற்றம் | பிழை ; பழி ; துன்பம் ; உடற்குறை ; தீங்கு ; அபராதம் ; தீட்டு . |
| குற்றம்பாராட்டுதல் | பிறர் குற்றத்தை மிகுதிப்படுத்துதல் . |
| குற்றவாளி | குற்றம் செய்தவன் ; குற்றஞ் சாட்டப்பட்டவன் . |
| குற்றவீடு | காமம் , வெகுளி முதலிய குற்றங்கள் நீங்குகை . |
| குற்றி | மரக்கட்டை ; வாய் குறுகிய சிறுபாண்டம் . |
| குற்றிகரம் | காண்க : குற்றியலிகரம் . |
| குற்றிசை | குறுகிய சந்தம் ; தலைவன் தலைவியைப் புறக்கணித்து அறநெறி பிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத்துறை . |
| குற்றியலிகரம் | சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம் . |
| குற்றியலுகரம் | மாத்திரை குறுகிய உகரம் , சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் வல்லின மெய்களைச் சார்ந்து அரைமாத்திரையாய்க் குறுகிவரும் உகரம் . |
| குற்றுடைவாள் | சுரிகை . |
| குற்றுதல் | இடித்தல் ; தாக்குதல் ; நெரித்தல் ; ஊடுருவக் குத்துதல் . |
| குற்றுயிர் | இறக்கும் நிலையிலுள்ள உயிர் , குறையுயிர் ; குற்றெழுத்து . |
| குற்றுழிஞை | பகைவரது கோட்டை மதில்மேல் நின்று வீரனொருவன் தன் பெருமை காட்டுவது கூறும் புறத்துறை . |
| குற்றெழுத்து | ஒரு மாத்திரையளவு ஒலிக்கப்படும் எழுத்து ; அவை : அ , இ , உ , எ , ஒ என்பன . |
| குற்றேவல் | சிறுதொழில் ; பணிவிடை . |
| குறக்கூத்து | குறவராடுங் கூத்து . |
| குறங்கறுத்தல் | கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல் ; தொடையைப் பிளத்தல் . |
| குறங்கு | தொடை ; கிளைவாய்க்கால் ; கொக்கி . |
| குறங்குசெறி | தொடையணி . |
| குறஞ்சனம் | வெண்காரம் . |
| குறஞ்சி | செம்முள்ளிச்செடி ; ஈந்து ; மருதோன்றி . |
| குறட்டரியம் | குறைகூறுதல் ; குறையை மெல்ல வெளியிடுகை . |
| குளிர்காய்தல் | குளிர் வருத்தாதபடி வெப்பம் பிடித்தல் . |
| குளிர்காலம் | பனிக்காலம் . |
| குளிர்ச்சி | சீதளம் , குளிர்மை ; இனிமையானது ; சில்லிடுகை . |
| குளிர்சுரம் | காண்க : குளிர்காய்ச்சல் . |
| குளிர்த்தி | காண்க : குளிர்ச்சி . |
| குளிர்தல் | குளிர்ச்சியடைதல் , சில்லிடுதல் ; கண்ணுக்கு இனிமையாதல் ; ஆறுதலடைதல் ; அருளால் முகம் கனிதல் ; பனிக்காற்று உறைத்தல் ; அம்மை முதலியவற்றால் இறத்தல் ; விதைத்தல் . |
| குளிர்ந்த குரல் | இனிய ஒசை . |
| குளிர்ந்தகொள்ளி | நயவஞ்சகன் . |
| குளிர்ந்தபேச்சு | இனிய மொழி . |
| குளிர்ந்தவேளை | சாயங்காலம் . |
| குளிர்ந்துகிடத்தல் | சூடாறியிருத்தல் ; கைகால் சில்லிடுதல் ; இறந்துகிடத்தல் . |
| குளிர்மை | குளிரச்சி , சீதளம் ; அன்பு . |
| குளிர்விடுதல் | அச்சம் நீங்குதல் . |
| குளிரநோக்குதல் | அருளோடு பார்த்தல் . |
| குளிரம் | நண்டு . |
| குளிரி | பீலிக்குஞ்சம் ; நீர்ச்சேம்பு ; குளிர்ச்சி . |
| குளிறு | ஒலி . |
| குளிறுதல் | ஒலித்தல் , சத்தமிடுதல் . |
| குளுகுளுத்தல் | செழித்து வளருதல் ; சோகை பற்றுதல் ; அழுகிப்போதல் . |
| குளுகுளுப்பை | காமாலை நோய் . |
| குளுத்தி | குளிர்மை . |
| குளுந்தை | கத்தூரிவகை . |
| குளுப்பை | நோயால் முகம் ஊதுகை . |
| குளுப்பைதட்டுதல் | நோயால் முகம் ஊதித்தோன்றுதல் . |
| குளுமை | குளிர்ச்சி . |
| குளுவன் | குறவனுடைய பாங்கன் ; பாம்பாட்டி . |
| குளுவை | ஊரற்பறவை . |
| குளைச்சக்கரம் | ஓடு . |
| குளைச்சு | நாலில் ஒன்று ; கால் . |
| குற்குலு | குங்கிலியம் . |
| குற்சித்தல் | அருவருத்தல் . |
| குற்சிதம் | அருவருப்பு . |
| குற்சை | இளிவரல் ; அருவருப்பு ; இகழ்ச்சி . |
| குற்பகம் | நாணற்புல் . |
| குற்பம் | பரடு ; கணைக்கால் . |
| குற்றங்காட்டுதல் | குற்றத்தை எடுத்துச்சொல்லுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 357 | 358 | 359 | 360 | 361 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குளிர்காய்தல் முதல் - குறட்டரியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறுகிய, குற்றத்தை, குளிர்ச்சி, ஒருவன்மீது, குளிர்மை, குற்றம், காண்க, முகம், சீதளம், குற்றெழுத்து, சில்லிடுதல், அருவருப்பு, நோயால், இனிய, உகரம், குற்றியலிகரம், விவரங்காட்டிப், குற்றத்தின், நீதிமன்றத்தில், ஏற்றுதல், படிக்கப்படும், பத்திரம், புறத்துறை, கூறும், குற்றப்பத்திரிகை, சார்பெழுத்துள்

