தமிழ் - தமிழ் அகரமுதலி - கீழ்போகம் முதல் - கீனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கீழாநெல்லி | நெல்லிச் செடிவகை ; சிறிய மரவகை . |
| கீழாறு | நிலத்தினுள்ளோடும் ஆறு . |
| கீழிசை | பாடுதற்குரிய குற்றங்களுள் ஒன்று . |
| கீழிடுதல் | தாழ்த்தல் . |
| கீழிதழ் | கீழுதடு . |
| கீழிருத்தல் | உட்பட்டிருத்தல் . |
| கீழுக்குப் போதல் | தாழ்நிலைக்கு வருதல் . |
| கீழுலகு | பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் . |
| கீழேழுலகம் | பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் . |
| கீழைத்திசை | கீழ்த்திசை . |
| கீழைநாள் | விடியற்காலம் . |
| கீழோங்கி | செம்படவரில் கீழ்வகுப்பார் . |
| கீழோசை | கீழிசை . |
| கீழோர் | தாழ்ந்தோர் , உழவர் ; சண்டாளர் . |
| கீள் | கூறு ; இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரைஞாண் . |
| கீள்தல் | கிழித்தல் ; உடைதல் . |
| கீள்ளுதல் | கிழித்தல் ; உடைதல் . |
| கீளி | கடல்மீன்வகை . |
| கீளுடை | கோவணம் , இலங்கோடு . |
| கீற்கதவு | கீல் தைக்கப்பட்ட கதவு . |
| கீற்கொண்டை | மயிர் முடித்தலின்வகை . |
| கீற்பாய் | தார் பூசின துணி . |
| கீற்பிடிப்பு | வாதப்பிடிப்பு நோய் . |
| கீற்றன் | குறுக்குக் கோடுள்ள புடைவை . |
| கீற்று | வரி ; துண்டு ; கூரைவேயும் தென்னங்கீற்று ; கிடுகு ; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று . |
| கீற்றுக்கால் | வெடிப்புள்ள பாதம் . |
| கீற்றுமதி | மூன்றாம் பிறைச்சந்திரன் . |
| கீறல் | பிளவு ; வரிவரைகை ; எழுதுகை ; கீற்றுக்கையெழுத்து ; கையெழுத்திடத் தெரியாதவன் . |
| கீறிக் காயவைத்தல் | உப்புக்கண்டம் உலர்த்துதல் . |
| கீறிப்பார்த்தல் | ஆய்ந்தறிதல் . |
| கீறியாற்றுதல் | உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல் . |
| கீறு | வரி ; பிளப்பு ; துண்டம் ; எழுத்து ; தென்னமட்டை அல்லது பனங்கிழங்கின் பாதி . |
| கீறுதல் | வரி கீறுதல் ; எழுதுதல் ; கிறுக்குதல் ; கிழித்தல் ; பறண்டுதல் ; அறுத்தல் ; வகிர்தல் ; குறிப்பித்தல் ; கடத்தல் . |
| கீன்றல் | கீறுதல் . |
| கீனம் | இழிவு ; குறைவு . |
| கீழ்போகம் | கிழங்குகளின் விளைவு . |
| கீழ்மக்கள் | இழிந்தோர் . |
| கீழ்மகன் | இழிந்தோன் ; சனி . |
| கீழ்மடை | கடைமடை ; மடைநீர் பாய்தற்குத் தொலைவான நிலம் . |
| கீழ்மரம் | அச்சுமரம் . |
| கீழ்மாடம் | நிலவறை . |
| கீழ்முந்திரி | கீழ்வாய் இலக்கங்களுள் ஒன்று , 1/102400 . |
| கீழ்மேலாதல் | தலைகீழாதல் . |
| கீழ்மை | இழிவு , தாழ்மை . |
| கீழ்வாய் | மோவாய் ; சிற்றெண் ; பெண்குறி . |
| கீழ்வாய்நெல்லி | கீழாநெல்லி . |
| கீழ்வாயிலக்கம் | ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு , பின்ன எண்ணின் கீழ்த்தொகை . |
| கீழ்விழுதல் | செயல் முடிவதற்காகத் தாழ்தல் . |
| கீழ்வு | கீழிடம் . |
| கீழ்வெட்டு | தடுத்துப் பேசுகை ; கிண்டல் பேச்சு ; சதிசெய்து கெடுக்கை . |
| கீழ்வெட்டு வெட்டுதல் | சதிசெய்தல் ; தடுத்துப் பேசுதல் ; வெட்டிய கிணற்றின் அடியில் மேலும் வெட்டுதல் . |
| கீழண்டை | கிழக்குப் பக்கம் , கிழக்குப்புறம் . |
| கீழது | கீழுள்ளது . |
| கீழறுத்தல் | நிலத்தில் சுரங்கம் செய்தல் ; சதி செய்தல் . |
| கீழறுதல் | படைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல் . |
| கீழறுப்பான் | சூழ்ச்சியாற் பிறரைக் கெடுப்பவன் . |
| கீழறை | கீழறுக்கை ; நிலவறை ; பொந்து . |
| கீழாதல் | தாழ்வடைதல் ; தளர்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 332 | 333 | 334 | 335 | 336 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீழ்போகம் முதல் - கீனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, கீறுதல், கிழித்தல், இழிவு, உடைதல், நிலவறை, கீழ்வெட்டு, செய்தல், வெட்டுதல், தடுத்துப், பாதலம், கீழ்வாய், மகாதலம், ஏழுலகங்கள், கீழுள்ள, பூமியின், கீழிசை, அதலம், விதலம், இரசாதலம், தராதலம், சுதலம், கீழாநெல்லி

