முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கிருத்திவாசன் முதல் - கிழமேல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கிருத்திவாசன் முதல் - கிழமேல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கிற்றல் | ஆற்றல் கொள்ளுதல் . |
| கில்லம் | கழுத்து ; தொண்டைக்குழி . |
| கிலம் | சிதைந்தது ; சிறுமை ; புன்மை . |
| கிலமாதல் | பழுதுபடுதல் . |
| கிலாய்த்தல் | சினங்கொள்ளல் ; அங்கலாய்த்தல் . |
| கிலி | அச்சம் ; பயம் . |
| கிலிகோலம் | சீர்கேடு ; அலங்கோலம் . |
| கிலிசம்பறை | சீர்கேடு ; அலங்கோலம் . |
| கிலிசயம்பறை | சீர்கேடு ; அலங்கோலம் . |
| கிலிபிடித்தல் | மனத்தில் அதிக அச்சங்கொள்ளுதல் . |
| கில¦பம் | அலி . |
| கிலுக்கம் | பறவைவகை . |
| கிலுக்கு | ஒலிக்கை ; கிலுகிலுப்பை ; ஒரு விளையாட்டுக் கருவி . |
| கிலுக்குத்தடி | அஞ்சலெடுத்துச் செல்லுவோர் கையில் கொண்டு ஒலிசெய்யும் தடி . |
| கிலுக்குதல் | ஒலிக்கச்செய்தல் . |
| கிலுகிலி | பிள்ளைகள் ஆட்டு கிலுகிலுப்பை . |
| கிலுகிலுத்தல் | கிலுகிலுவென்று ஒலித்தல் ; ஆரவாரித்தல் . |
| கிலுகிலுப்பை | ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக்கருவி ; செடிவகை ; கொடிவகை . |
| கிலுகிலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிலுங்குதல் | ஒலித்தல் . |
| கிலுத்தம் | மணிக்கட்டு ; மக்கள் வடிவான பழமுடைய மரவகை . |
| கிலுபதம் | முறைமை , நியாயம் . |
| கிலுமொலெனல் | வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; அடர்ச்சிக் குறிப்பு . |
| கிலேசம் | துன்பம் . |
| கிலேசித்தல் | துன்பப்படுதல் . |
| கிழக்கத்தி | கீழ்த்திசைக்குரிய . |
| கிழக்கத்திய | கீழ்த்திசைக்குரிய . |
| கிழக்கதை | தொன்மம் , பழங்கதை . |
| கிழக்கு | கிழக்குத் திசை ; கீழிடம் ; இழிவு ; பள்ளம் . |
| கிழக்குக்கணவாய் | கிழக்குத்தொடர்ச்சி மலை . |
| கிழக்குவெளுத்தல் | பொழுதுவிடியத் தொடங்குதல் . |
| கிழங்கான் | கடல்மீன்வகை . |
| கிழங்கிருத்தல் | அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல் . |
| கிழங்கு | செடிகொடிகளின் மூலம் ; காரணம் . |
| கிழங்கெடுத்தல் | அடியோடு அழித்தல் . |
| கிழடு | முதுமை ; முதியது . |
| கிழடுகட்டை | அகவை முதிர்ந்து பயனற்றவர் . |
| கிழத்தனம் | முதுமை . |
| கிழத்தி | உரியவள் ; தலைவி . |
| கிழம் | முதுமை ; முதுமையடைந்தவர் . |
| கிழம்படுதல் | முதுமையடைதல் . |
| கிழமழை | பெய்து ஓயும் நிலையிலுள்ள மழை . |
| கிழமேல் | கிழக்கு மேற்காக . |
| கிருத்திவாசன் | சிவபெருமான் . |
| கிருதக்கினதை | செய்நன்றி கோறல் . |
| கிருதக்கினன் | நன்றி மறந்தவன் . |
| கிருதக்கு | வஞ்சகம் . |
| கிருதகிருத்தியன் | செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவன் . |
| கிருதஞ்ஞதை | செய்நன்றியறிகை . |
| கிருதஞ்ஞன் | செய்நன்றியறிபவன் . |
| கிருதம் | செய்யப்பட்டது ; கிருதயுகம் ; நெய் ; செம்முருங்கைமரம் . |
| கிருதயுகம் | நான்கு யுகங்களுள் முதல் யுகம் . |
| கிருதன் | செருக்குள்ளவன் . |
| கிருதா | கன்னமீசை . |
| கிருதார்த்தன் | பேறுபெற்றவன் . |
| கிருதி | இசைப்பாட்டு ; கீர்த்தனம் . |
| கிருது | செருக்கு ; ஒய்யாரம் . |
| கிருதுக்காரன் | காண்க : கிருதன் . |
| கிருபணத்துவம் | இவறல் தன்மை , உலோபம் . |
| கிருபணம் | இவறல் தன்மை , உலோபம் . |
| கிருபணன் | இவறல் தன்மையுடையவன் , உலோபி . |
| கிருபாகடாட்சம் | காண்க : கிருபைக்கண் . |
| கிருபாகரம் | திருவருள் . |
| கிருபாகரன் | அருளுக்கு இருப்பிடமானவன் . |
| கிருபாசமுத்திரம் | அருட்கடல் . |
| கிருபாமூர்த்தி | அருளுடையவன் . |
| கிருபாளு | அருளுடையவன் . |
| கிருபை | அருள் . |
| கிருபைக்கண் | அருட்பார்வை . |
| கிருமி | புழு . |
| கிருமிசத்துரு | பலாசு ; பலாசம் விதை . |
| கிருமிநாசம் | குரோசானியோமம் ; பலாசம் விதை ; பேய்ப்பீர்க்கு ; பங்கம்பாளைச்செடி . |
| கிருமிமலடு | கருப்பையில் புழுக்களால் உண்டாகும் மலட்டுத் தன்மை . |
| கிருமிவைத்தல் | புண்ணிற் புழுவுண்டாதல் . |
| கிரேதம் | காண்க : கிருதயுகம் . |
| கிரேதயுகம் | காண்க : கிருதயுகம் . |
| கிரேதை | காண்க : கிருதயுகம் . |
| கிரேந்தி | ஏலத்தோல் . |
| கிரேனிடல் | அஞ்சியொடுங்குதற் குறிப்பு . |
| கிரௌஞ்சம் | கோழிபறக்கும் அளவுள்ள தொலைவு ; ஒரு மலை ; கிரவுஞ்சத்தீவு ; அன்றில் பறவை . |
| கில் | ஆற்றலுணர்த்தும் இடைநிலை . |
| கில்கில்லெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கில்தல் | ஆற்றல் கொள்ளுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிருத்திவாசன் முதல் - கிழமேல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கிருதயுகம், காண்க, முதுமை, ஒலிக்குறிப்பு, கிலுகிலுப்பை, இவறல், சீர்கேடு, அலங்கோலம், தன்மை, அருளுடையவன், விதை, பலாசம், கிருபைக்கண், உலோபம், கிழக்கு, ஒலிசெய்யும், கொள்ளுதல், ஒலித்தல், குறிப்பு, ஆற்றல், கீழ்த்திசைக்குரிய, கிருதன்

