முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கிராமாதிகாரி முதல் - கிருத்திரிமம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கிராமாதிகாரி முதல் - கிருத்திரிமம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கிருகப் பிரவேசம் | புதுமனையிற் புகும்போது செய்யும் சடங்கு ; மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யும் சடங்கு . |
| கிருகபதி | வீட்டுத் தலைவன் ; இல்லறத்தான் . |
| கிருகம் | வீடு . |
| கிருகரன் | பசி ; கோபம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வாயுக்களுள் ஒன்று . |
| கிருகி | இல்வாழ்வான் . |
| கிருகிணி | மனைவி . |
| கிருசம் | மெலிவு ; இளைப்பு . |
| கிருசாரான்னம் | அன்னத்துடன் எள்ளுப்பொடி கலந்த உணவு . |
| கிருட்டி | தலையீற்றுப் பசு ; பன்றி ; பிரண்டைக்கொடி . |
| கிருட்டிகன் | பயிரிடுவோன் ; வேளாளன் . |
| கிருட்டிணபக்கம் | தேய்பிறை , அபரபட்சம் . |
| கிருட்டிணபட்சம் | தேய்பிறை , அபரபட்சம் . |
| கிருட்டிணபாணம் | எட்டிமரம் . |
| கிருட்டிணம் | கறுப்பு ; இரும்பு ; மிளகு ; துரிசு ; காகம் ; குயில் ; மான்வகை . |
| கிருட்டிணமூலி | துளசி . |
| கிருட்டிணன் | கண்ணன் ; அருச்சுனன் . |
| கிருட்டிணை | திரௌபதி ; ஓர் யாறு ; கடுகு ; முந்திரிகை ; வால்மிளகு . |
| கிருட்டினாசினம் | மான்தோல் . |
| கிருத்தம் | செய்யப்பட்டது . |
| கிருத்தி | கார்த்திகை . |
| கிருத்திகை | கார்த்திகை . |
| கிருத்திமம் | தோல் ; செயற்கையானது ; பொய் ; பூதம் . |
| கிருத்தியம் | தொழில் ; பிதிர்கடன் ; ஐந்தொழில் . |
| கிருத்திரம் | கழுகு . |
| கிருத்திரிமம் | போலியானது ; வஞ்சனை ; குறும்புச் செயல் . |
| கிராமாதிகாரி | ஊர்த்தலைவன் . |
| கிராமாந்தரம் | நாட்டுப்புறம் . |
| கிராமியம் | நாட்டுப்புறமக்கள் பேசும் கொச்சைப் பேச்சு ; இழிவானது . |
| கிராமியன் | நாட்டுப்புறத்தவன் . |
| கிராய் | புற்காடு ; கருஞ்சேற்று நிலம் . |
| கிராய்தல் | சுவர் முதலியவற்றைத் தேய்த்துத் துலக்கல் . |
| கிராவணம் | கல்மலை . |
| கிராவம் | கல்மலை . |
| கிரி | பன்றி ; மலை ; பிணையாளி ; இலக்கினம் . |
| கிரிகரன் | ஒரு வாயு . |
| கிரிகன்னி | துர்க்கை ; வெள்ளைக் காக்கணங்கொடி . |
| கிரிகிரி | காட்டுப்பன்றி . |
| கிரிகை | செய்கை . |
| கிரிகோலம் | அலங்கோலம் . |
| கிரிச்சம் | வருத்தம் . |
| கிரிசம் | மென்மை . |
| கிரிசரம் | மலையிற் பிறந்த யானை . |
| கிரிசன் | சிவன் . |
| கிரிசு | குறுவாள் . |
| கிரிசுக் கத்தி | குறுவாள் . |
| கிரிசை | பார்வதி ; செய்கை . |
| கிரித சாக்கரி | ஒரு பண்வகை . |
| கிரிதுர்க்கம் | மலையரண் . |
| கிரிமல்லிகை | வெட்பாலைமரம் ; மலைமல்லிகை . |
| கிரிமிஞ்சி | ஒருவகைச் சிவப்புச் சாயம் . |
| கிரியாசத்தி | ஐந்து சத்தியுள் ஒன்று ; அது வினைத்துணையாக நின்று உலகங்களை யாக்குவது . |
| கிரயாத்து | மலைவேம்பு . |
| கிரயாபதம் | வினைமுற்றுச் சொல் . |
| கிரியாபூசை | கிரியாபாகத்தான் புரியும் பூசை . |
| கிரியா மார்க்கம் | முத்திக்குரிய கிரியையாகிய வழி . |
| கிரியாவான் | கிரியையினின்று ஒழுகுவோன் . |
| கிரியை | செய்கை ; சிவனை வழிபடுகை ; இறுதிக் கடன் ; தாளப் பிரமாணத்துள் ஒன்று ; வினை ; கிரியாசக்தி . |
| கிரியைக்கேடு | முறைகேடு . |
| கிரிராசன் | இமயமலை . |
| கிரிவாணம் | நீலாஞ்சனக் கல் . |
| கிரீச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிரீசன் | சிவன் . |
| கிரீட்டி | பிரண்டைக்கொடி . |
| கிரீட்டுமம் | முதுவேனிற்காலம் . |
| கிரீடதாரி | முடிதரித்தோன் . |
| கிரீடம் | மணிமுடி ; வேலிப்பருத்தி . |
| கிரீடாதிபதி | முடிமன்னன் . |
| கிரீடி | அரசன் ; அருச்சுனன் . |
| கிரீடித்தல் | விளையாடுதல் ; புணர்தல் . |
| கிரீடை | விளையாட்டு ; மகளிர் விளையாட்டு ; புணர்ச்சி . |
| கிரீதன் | பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட தத்துப்பிள்ளை . |
| கிரீவம் | கழுத்து . |
| கிருகச்சித்திரம் | குடும்பச் சச்சரவு . |
| கிருகசாரி | இல்லறத்தான் , இல்லற நிலையிலுள்ளவன் . |
| கிருகத்தன் | இல்லறத்தான் , இல்லற நிலையிலுள்ளவன் . |
| கிருகதேவதை | இல்லுறை தெய்வம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 326 | 327 | 328 | 329 | 330 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிராமாதிகாரி முதல் - கிருத்திரிமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்கை, இல்லறத்தான், ஒன்று, நிலையிலுள்ளவன், கல்மலை, சிவன், குறுவாள், கார்த்திகை, விளையாட்டு, இல்லற, அபரபட்சம், சடங்கு, செய்யும், பன்றி, பிரண்டைக்கொடி, சொல், தேய்பிறை, அருச்சுனன்

