தமிழ் - தமிழ் அகரமுதலி - கான் முதல் - கிங்கிரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கானனுசாரி | நன்னாரிக்கொடி . |
| கானா | சுக்கானின் கைப்பிடி . |
| கானாங்கள்ளி | இலைக்கள்ளி . |
| கானாங்கெளிறு | நன்னீரில் வாழும் ஒருவகை மீன் . |
| கானாங்கோழி | கானங்கோழி , காட்டுக்கோழி ; வான்கோழி . |
| கானாங்கோழை | கானா வாழைவகை ; ஒரு பூண்டுவகை . |
| கானாங்கோனான் | குழப்பம் . |
| கானாத்தடி | காண்க : கானா . |
| கானான் | ஒருவகைச்செடி . |
| கானிலம் | கொடிவேலி . |
| கானீனன் | கன்னிபெற்ற பிள்ளை ; கன்னன் . |
| கானெறி | காண்க : காலதர் . |
| கானை | காலிற் காணும் மாட்டுநோய்வகை ; காளையார்கோயில் . |
| கி | ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+இ) . |
| கிக்கிரி | மீன்கொத்திப்பறவை . |
| கிகிணி | காக்கணங்கொடி ; வலியான்குருவி . |
| கிங்கரன் | ஏவலாளன் ; தூதன் . |
| கிங்கரி | விலைமகள் ; வேலைக்காரி . |
| கிங்கரை | விலைமகள் ; வேலைக்காரி . |
| கிங்கிணி | பாதசதங்கை ; அரைச்சதங்கை ; கிலுகிலுப்பை . |
| கிங்கிரம் | குதிரை ; குயில் ; வண்டு . |
| கான் | மணம் ; காடு ; பூ ; சலதாரை ; வாய்க்கால் ; மரக்கலத்தின் அறை ; எழுத்தின் சாரியை ; இசை ; செவி ; புகழ் . |
| கான்படுதிரவியம் | அரக்கு , இறால் ,தேன் , மயிற்பீலி ,நாவி முதலிய காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள் . |
| கான்மரம் | ஆலமரம் . |
| கான்மா | காட்டுப்பன்றி . |
| கான்மாறுதல் | கழிந்துபோதல் ; காலை மாற்றுதல் . |
| கான்மியம் | மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம் . |
| கான்முறிதல் | அடியோடு கெடுதல் . |
| கான்முளை | மகன் . |
| கான்மோதிரம் | கால்விரலணி . |
| கான்யாறு | முல்லை நிலத்திலுள்ள ஆறு , காட்டாறு . |
| கான்றல் | கக்குதல் ; இருமிக் கோழை துப்புதல் . |
| கான்றியம் | வெப்பம் . |
| கான்றை | ஒரு மரவகை . |
| கானக்கல் | காண்க : கானகக்கல் . |
| கானக்குதிரை | காட்டுமான்வகை ; காட்டுக்குதிரை ; மாமரம் . |
| கானக்குறத்தி முலைப்பால் | தேன் . |
| கானக்கூபரம் | நாகப்பச்சை . |
| கானக்கோழி | காட்டுக்கோழி . |
| கானங்கோழி | காட்டுக்கோழி . |
| கானகக்கல் | காட்டுக்கல் ; கரும்புள்ளிக் கல் . |
| கானகக்கூத்து | கூத்துவகை . |
| கானகச்சங்கம் | நாகரவண்டு . |
| கானகத்தும்பி | கருவண்டுவகை . |
| கானகநாடன் | முல்லைநிலத் தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் . |
| கானகம் | காடு ; கருஞ்சீரகம் ; காலின் நகம் . |
| கானங்கோழி | காட்டுக்கோழி ; வழுக்கைத் தலையையுடைய புள்வகை . |
| கானசரம் | நாணல் . |
| கானத்தேறு | மஞ்சள் . |
| கானநாடன் | காண்க : கானகநாடன் . |
| கானப்படம் | காடெழுதின கேடயம் ; யானை ,சிங்கம் முதலிய சித்திரமெழுதின பலகை ; பெரு வாரல்வலை . |
| கானப்பலா | காட்டுப்பலா . |
| கானப்பேர் | காட்டை அரணாகவுடைய காளையார்கோயில் . |
| கானம் | காடு ; தேர் ; நந்தவனம் ; மணம் ; தொகுதி ; பேதை ; வானம்பாடி ; இசைப்பாட்டு . |
| கானயூகம் | காட்டுக் குரங்கு . |
| கானரசம் | இசைச்சுவை . |
| கானல் | மணம் ; கடற்கரை ; கழி ; உப்பளம் ; உவர்நிலம் ; மலைசார்ந்த சோலை ; கடற்கரைச் சோலை ; வெப்பம் ; சூரியக்கதிர் ; பேய்த்தேர் ; பரல் நிரம்பிய நிலம் . |
| கானல்வரி | கழிக்கரைப் பாடல் . |
| கானல்வீசுதல் | வெக்கையடித்தல் |
| கானலடித்தல் | வெக்கையடித்தல் . |
| கானலோடுதல் | பேய்த்தேரோடுதல் . |
| கானவன் | குறிஞ்சி , முல்லை அல்லது பாலை நிலத்து மகன் ; குரங்கு . |
| கானவாழை | நீர்வாழை . |
| கானவிருக்கம் | பாதிரிமரம் . |
| கானனம் | காடு . |
| கானனீர் | கானலில் தோன்றும் நீர்த்தோற்றம் , பேய்த்தேர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 321 | 322 | 323 | 324 | 325 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கான் முதல் - கிங்கிரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காடு, காண்க, காட்டுக்கோழி, கானங்கோழி, கானா, மணம், கானகநாடன், தலைவன், குறிஞ்சி, சோலை, வெக்கையடித்தல், பேய்த்தேர், கானகக்கல், குரங்கு, முதலிய, விலைமகள், காளையார்கோயில், வேலைக்காரி, தேன், முல்லை, மகன், வெப்பம்

