முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » காற்கோமாரி முதல் - காறையெலும்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - காற்கோமாரி முதல் - காறையெலும்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காற்றொழில் | சிறுவேலை . |
| காற்றோட்டி | கொடிவகை ; செடிவகை . |
| காறல் | தொண்டைக் கறகறப்பு ; காறும் பொருள் ; ஒரு மருந்துச்செடி . |
| காறற்கத்தரி | ஒருவகைக் கத்தரிச்செடி . |
| காறற்கொட்டி | ஒருமருந்துச்செடி . |
| காறாக்கருணை | சேனைக்கிழங்கு . |
| காறாப்பித்தல் | காறித் துப்புதல் . |
| காறியுமிழ்தல் | காறித் துப்புதல் . |
| காறு | காலவளவு ; சலாகை ; கொழு . |
| காறுதல் | காறற் சுவையாதல் ; கோழையை மிடற்றிலிருந்து கொணர முயலுதல் ; வயிரங் கொள்ளல் . |
| காறுபாறு | காண்க : கார்பார் . |
| காறுவடித்தல் | கொழுமுனை தீட்டுதல் . |
| காறை | மாதரும் குழந்தைகளும் அணியும் கழுத்தணி ; வண்டிக்குடத்தைச் சுற்றியிடும் இரும்பு வளையம் ; பூஞ்சணம் ; வைக்கோல் முதலியவற்றின் தாள் ; சுண்ணாம்பு . |
| காறையெலும்பு | கழுத்தெலும்பு . |
| காற்றொடுக்கம் | காற்று வீசாது ஒடுங்குகை . |
| காற்கோமாரி | கால்நடைகளுக்கு வரும் கால்நோய்வகை . |
| காற்சரி | ஒரு காலணி: பாதரசம் . |
| காற்சவடி | பாதசாலம் . |
| காற்சிராய் | காற்சட்டை . |
| காற்சிலம்பு | காலணிவகை . |
| காற்சீப்பு | இடுப்புச் சந்தெலும்பு . |
| காற்சுவடு | அடிவைப்பின் குறி . |
| காற்சுற்று | மகளிர் கால்விரலில் அணியும் அணிவகை . |
| காற்படம் | விரலை அடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம் ; புறவடி . |
| காற்படுதல் | அழிதல் . |
| காற்படை | காலாட்படை ; கோழி ; கட்டட அடிப்படையில் தரைக்கு மேலுள்ள பகுதி . |
| காற்பரடு | புறவடி . |
| காற்பனிகம் | கற்பிக்கப்பட்டது . |
| காற்பாசம் | பருத்தி . |
| காற்பாதை | ஒற்றையடிப்பாதை . |
| காற்பிடித்தல் | காண்க : காயடித்தல் . |
| காற்பிடிப்பு | வாதத்தினாற் காலிற் காணும் பிடிப்பு நோய் . |
| காற்புத்தி | தாளகம் . |
| காற்புரவு | ஆற்றுப்பாசன நிலம் . |
| காற்புள்ளி | ( , ) ஒரு தொடரைப் படிக்கும் பொழுது சிறிதளவு நிறுத்த வேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் குறி . |
| காற்பெட்டி | வண்டியின் பின்பெட்டி . |
| காற்பெய்தல் | ஓடுதல் . |
| காற்றடக்கி | துருத்தி ; நீர்க்குமிழி . |
| காற்றண்டை | ஒரு காலணிவகை . |
| காற்றருந்துதல் | காற்றை உண்ணல் ; சோம்பியிருத்தல் . |
| காற்றழும்பு | வலியோடுகூடிய கால்வீக்கம் . |
| காற்றன் | துரிசு . |
| காற்றாடவைத்தல் | காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல் . |
| காற்றாடி | சுழல் கறங்கு ; காற்றாடிப் பட்டம் ; கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் எந்திரம் ; நிலையில்லாதவன் ; சவுக்கு ; மரவகை ; விசிறி . |
| காற்றாடிப்பட்டம் | காற்றில் பறக்கவிடும் பட்டம் . |
| காற்றாய்ப்பறத்தல் | விரைந்தோடுதல் ; சுறுசுறுப்பாய்த் தொழில்செய்தல் . |
| காற்றிளவல் | இளங்காற்று . |
| காற்றின்சகாயன் | தீ . |
| காற்றினாள் | வாயுவைத் தேவதையாகக் கொண்ட சுவாதிநாள் . |
| காற்று | வாளி ; உயிர்ப்பு ; அபானவாயு ; பிசாசு ; காண்க : காற்றினாள் . |
| காற்றுக்கடுவல் | பெருங்காற்று . |
| காற்றுக்கரப்பு | பேய்க்கோளாறு . |
| காற்றுக்காலம் | ஆடி மாதத்தைப்போல் பெருங்காற்று வீசுங்காலம் . |
| காற்றுக்கொள்ளுதல் | வெளிப்பரவல் . |
| காற்றுச்சங்கை | காண்க : காற்றுக்கரப்பு . |
| காற்றுதல் | வெளிப்படுத்துதல் ; அழித்தல் . |
| காற்றுநாள் | காண்க : காற்றுமுந்துநாள் . |
| காற்றுநோவு | கால்நடைகளுக்கு வரும் வெக்கைநோய் . |
| காற்றுப்பு | காறியுமிழ்தல் . |
| காற்றுப்பெயர்தல் | காற்றுக்காலந் தொடங்குதல் . |
| காற்றுப்போதல் | அடைப்பினின்றும் காற்று வெளியேறுதல் ; அபான வாயுவை வெளியிடுதல் . |
| காற்றுமழை | காற்றோடு கூடிவரும் மழை . |
| காற்றுமுந்துநாள் | காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள் . |
| காற்றுவாக்கு | காற்றடிக்குந் திசை ; காற்று வீசும் பக்கம் ; தற்செயல் ; சோம்பல் . |
| காற்றுவாங்குதல் | காற்றை நுகர்தல் . |
| காற்றுவாரி | கதவில்லாத சிறு சாளரம் . |
| காற்றுவாரிப் பந்தல் | காற்று மிகுதியாக வருமாறு அமைக்கப்படும் பந்தல் . |
| காற்றுவாரிப் பலகை | காற்றை வரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளரப்பலகை . |
| காற்றேறு | காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக் குற்றம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 320 | 321 | 322 | 323 | 324 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்கோமாரி முதல் - காறையெலும்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காற்று, காற்றை, பெருங்காற்று, கொண்ட, தேவதையாகக், காற்றுக்கரப்பு, காற்றுமுந்துநாள், அமைக்கப்படும், காற்றுவாரிப், காற்றினாள், பந்தல், புறவடி, அணியும், காறியுமிழ்தல், துப்புதல், கால்நடைகளுக்கு, வரும், காறித், குறி, காலணிவகை, பட்டம்

