முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » காப்புக்கட்டுதல் முதல் - காமதகனன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - காப்புக்கட்டுதல் முதல் - காமதகனன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காபாலம் | பிரமன் தலையோட்டைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங் கூத்து ; சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஆன்மா நித்திய மாய்ப் பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும் பச்சைக்கொடி பிடித்து மக்களின் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் முத்தராய்ச் சிவசமம் ஆவரென்றும் கூறும் சமயம் . |
| காபாலமதம் | சைவசமயத்தின் ஒரு பிரிவு . |
| காபாலன் | சிவன் ; காபால மதத்தான் . |
| காபாலி | சிவன் ; காபால மதத்தான் . |
| காபி | ஒரு பண்வகை ; காப்பி . |
| காபில் | திறமையாளன் . |
| காபிலம் | கபிலர் மதமான சாங்கியம் ; தலைதொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதலாகிய நீராட்டு வகை . |
| காபினி | நவச்சாரம் . |
| காபோதி | கண்ணிலி ; அறிவிலி . |
| காம்பி | நீர் இறைக்குங் கருவி . |
| காம்பிரம் | முருக்கு . |
| காம்பிலி | வடநாடுகளுள் ஒன்று . |
| காம்பிலியம் | வடநாடுகளுள் ஒன்று . |
| காம்பீரம் | பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் . |
| காம்பீரியம் | பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் . |
| காம்பு | பூ , இலை முதலியவற்றின் தாள் ; மலர்க்கொம்பு ; கருவிகளின் கைப்பிடி ; மூங்கில் ; ஆடைக்கரை ; ஒருவகைப் பட்டாடை ; பூசணி ; அம்புச்சிறகு . |
| காம்புக்கிண்ணம் | கைப்பிடியுள்ள ஏனம் . |
| காம்புச்சத்தகம் | ஓலை வாருஞ் சிறுகத்தி . |
| காம்புச்சல்லடை | சல்லடைவகை . |
| காம்புப்புகையிலை | காம்புடன் கூடிய புகையிலை . |
| காம்போகி | குன்றி . |
| காமக்கடப்பு | காமமிகுதி . |
| காமக்கடவுள் | வழிபடு தெய்வம் . |
| காமக்கண்ணி | காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் . |
| காமக்கலகம் | புணர்ச்சி ; ஊடல் . |
| காமக்கவலை | காமமிகுதியால் தோன்றும் துன்பம் . |
| காமக்காய்ச்சல் | காமதாபம் . |
| காமக்கிழத்தி | ஒருவருக்கே உரிமைபூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள் . |
| காமக்குறிப்பு | காதலிற்றோன்றும் மெய்ப்பாடு , காதலை வெளியிடுங் குறிப்பு . |
| காமக்கூட்டம் | தலைவனும் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம் . |
| காமக்கோட்டத்தி | காமக்கோட்டத்தில் உறையும் பார்வதி . |
| காமக்கோட்டம் | காஞ்சியில் உள்ள காமாட்சி கோயில் . |
| காமக்கோட்டி | பார்வதி ; காமக்கோட்டம் ; காமப்பைத்தியம் . |
| காமகாண்டம் | காமன் அம்பாகப் பயன்படுத்தும் ஒருவகைப் பூ . |
| காமகாரம் | காய்மகாரம் , பொறாமை . |
| காமசரம் | மாம்பூ ; காண்க : காமன்கணை . |
| காமசலம் | காண்க : காமநீர் . |
| காமசாலை | சிற்றின்பத்துக்குரிய இடம் . |
| காமத்தீ | காமாக்கினி , காமமாகிய நெருப்பு . |
| காமத்துப்பால் | காமத்தைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி ; திருவள்ளுவர் திருக்குறளில் அகப்பொருட்பாலாகிய ஒரு பகுதி . |
| காமத்துப்பாலோர் | பரத்தமை கொண்டொழுகுவோர் . |
| காமதகனன் | காமனை எரித்த சிவன் . |
| காபரா | குழப்பம் . |
| காப்புக்கட்டுதல் | கோயில் திருவிழாத் தொடங்குதல் ; ஊக்கத்துடன் செயலில் இறங்குதல் ; மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் ; நேர்த்திக்கடனுக்கு மஞ்சள் நூல் அணிதல் . |
| காப்புக்கடவுள் | திருமால் . |
| காப்புக்கரப்பறிதல் | பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல் . |
| காப்புக்காடு | காவற்கட்டுள்ள காடு . |
| காப்புச்செய்தல் | ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல் . |
| காப்புத்தடை | விழாக்காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை . |
| காப்புதாரி | தற்காப்புரிமை . |
| காப்புநாண் | இரட்சையாகக் கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு . |
| காப்புநீக்குதல் | ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல் . |
| காப்புப்பருவம் | பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம் . |
| காப்புமறம் | காவல்வீரர் . |
| காப்புமாலை | தெய்வங்காப்பதாக மூன்று , ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் . |
| காப்பொன் | நூறு பலம் நிறையுள்ள பொன் . |
| காபட்டியம் | கபடத்தன்மை . |
| காபணங்கட்டுதல் | தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பணத்தை மஞ்சள் துணியிற் கட்டிவைத்தல் . |
| காபணம் | ஒற்றடம் . |
| காபந்து | பாதுகாவல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 308 | 309 | 310 | 311 | 312 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காப்புக்கட்டுதல் முதல் - காமதகனன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூறும், சிவன், கோயில், காமக்கோட்டம், பார்வதி, காண்க, காப்புநாண், கட்டிவைத்தல், மஞ்சள், காஞ்சியில், பகுதி, ஆழம், வடநாடுகளுள், மதத்தான், காபால, ஒன்று, பெருமிதம், சமயம், கம்பீரம், ஒருவகைப்

