தமிழ் - தமிழ் அகரமுதலி - உரைகோளாளன் முதல் - உரோமரேகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உரோமண்டலி | நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று . |
| உரோமத்துவாரம் | மயிர்க்கால் ,மயிர்த்துளை . |
| உரோமப்பொடிப்பு | மயிர்ச்சிலிர்ப்பு . |
| உரோமபுளகம் | மயிர்ச் சிலிர்ப்பு . |
| உரோமபுளகிதம் | மயிர்ச் சிலிர்ப்பு . |
| உரோமம் | மயிர்ப்பரப்பு ; புறமயிர் . |
| உரோமரேகை | மயிரொழுக்கு . |
| உரைசெய்யல் | சொல்லுதல் ; விளக்கவுரை தரல் . |
| உரைஞ்சுதல் | காண்க : உரைசுதல் . |
| உரைத்தல் | ஒலித்தல் ; சொல்லுதல் ; தேய்த்தல் ; மாற்றறியத் தேய்த்தல் ; மெருகிடுதல் ; பூசுதல் . |
| உரைத்தாம் என்றல் | நூல் உத்திகள் முப்பத்து இரண்டனுள் ஒன்று , முன்னே கூறியுள்ள ஒரு செய்தி பின்னரும் வருமிடத்து முன்னர்ச் சொல்லியமை சுட்டல் . |
| உரைத்தீவார் | கூறுவார் . |
| உரைத்தும் என்றல் | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு செய்தியைப் பின்னர் ஏற்ற இடத்தில் விளக்குவோம் எனக் குறித்தல் . |
| உரைதல் | தேய்தல் ; வீணாதல் . |
| உரைநடை | பேச்சுநடை ; வசனநடை . |
| உரைநூல் | உரை எழுதப்பெற்ற நூல் ; உரையாகிய நூல் . |
| உரைப்பாட்டு | உரைச் செய்யுள் ; கட்டுரைநடை . |
| உரைப்பு | தேய்ப்பு ; மாற்றறிய உரைக்கை ; சொல்லுகை . |
| உரைப்பொருள் | விரித்துரைக்கும் மெய்யுரை . |
| உரைபாடம் | மூலமும் உரையும் . |
| உரைபெறுகட்டுரை | காப்பியங்களுள் உரைநடையில் அமைந்த தொடர் . |
| உரைமானம் | தேய்ப்பு . |
| உரைமுடிவு | முறைத் தீர்ப்பு ; நியாயத் தீர்ப்பு . |
| உரையசை | பெரும்பான்மை ஆற்றலிழந்த இடைச்சொல் . |
| உரையசைக்கிளவி | ஒருவனை எதிர்முகமாக்கும் சொல் . |
| உரையல் | உரைத்தல் ; தேய்தல் ; சொல்லுகை . |
| உரையளவை | நூற்சான்று . |
| உரையாசிரியர் | நூலுக்கு உரை செய்வோர் ; தொல்காப்பிய முதல் உரைகாரர் எனப்படும் இளம்பூரணர் . |
| உரையாடுதல் | பேசுதல் ,சொல்லுதல் ; ஒருவர்க்கொருவர் உரையாடல் ; ஒரு பொருள் பற்றிச் சிலர் கலந்து பேசுகை . |
| உரையாணி | மாற்றறியும் அணி . |
| உரையிடுதல் | நூலுக்கு உரை செய்தல் ; ஒருவர்க்கொருவர் தருக்கஞ் செய்தல் . |
| உரையிலக்கணம் | நூலுரைக்கு வேண்டும் இலக்கணம் : பாடம் , கருத்து , சொல்வகை , சொற்பொருள் , தொகுத்துரை , உதாரணம் , வினா , விடை , விசேடம் , விரிவு ,அதிகாரம் , துணிவு , பயன் , ஆசிரியவசனம் எனப் பதினான்கு வகைத்து . |
| உரையிற்கோடல் | மூலத்திற் சொல்லாதவற்றை உரையில் சொல்லும் ஓர் உத்தி . |
| உரையேடு | காண்க : உரைபாடம் . |
| உரைவன்மை | பேச்சுவல்லமை . |
| உரைவாணன் | உரை கூறவல்ல புலவன் . |
| உரைவு | தேய்வு . |
| உரொக்கம் | கையிருப்புப் பணம் . |
| உரோகதி | நாய் . |
| உரோகம் | நோய் ; தளிர் ; பூவரும்பு ; ஏறுகை ; உயர்தல் ; இறங்குகை ; ஒளியின்மை . |
| உரோகிணி | உரோகிணி நாள் , நான்காம் நட்சத்திரம் ; பலராமன் தாய் ; கடுகுரோகிணி ; பீதரோகிணி ; கடுக்காய் ; ஒன்பான் ஆண்டுப்பெண் ; பெருங்குமிழ் . |
| உரோகிணி புதல்வன் | பலராமன் . |
| உரோகிதம் | செந்நிறம் ; செம்மரம் ; மஞ்சள் ; குங்குமம் ; இந்திரவில் . |
| உரோங்கல் | உலக்கை . |
| உரோசம் | மானம் ; சினம் ; வெட்கம் ; முலை . |
| உரோசனகம் | எலுமிச்சை . |
| உரோசனம் | முள்ளிலவு ; கோரோசனம் . |
| உரோசனி | கடுகு ; செந்தாமரை . |
| உரோசனை | கோரோசனை ; செந்தாமரை ; கடுகு . |
| உரோஞ்சுதல் | காண்க : உரிஞ்சுதல் . |
| உரோடணம் | இதன் ; பாதரசம் ; உவர்நிலம் . |
| உரோடம் | சினம் . |
| உரோணி | உரோகிணி ; ஒருவகை நோய் . |
| உரோதம் | நீர்க்கரை ; தடை . |
| உரோதனம் | அழுதல் ; அழுகை . |
| உரோதனி | சிறுகாஞ்சொறி . |
| உரோதனை | தொந்தரவு ; அழுகை . |
| உரோதித்தல் | அழுதல் . |
| உரோபம் | அம்பு . |
| உரோமக்கட்டு | நிறைமயிர் , மயிரடர்த்தி . |
| உரோமக்கிழங்கு | வசம்பு . |
| உரோமகூபம் | மயிர்ச்சிலிர்ப்பு , உரோம புளகம் . |
| உரைகோளாளன் | உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன் . |
| உரைச்சூத்திரம் | உரையினிடையே உரைகாரர் ஒரு கூறாக இயற்றிய நூற்பா . |
| உரைச்செய்யுள் | கட்டுரை ; உரைப்பாட்டு . |
| உரைசல் | உரைசுதல் ; உராய்கை ; தேய்கை . |
| உரைசுதல் | உரிஞ்சுதல் ; தேய்தல் ; தேய்த்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 167 | 168 | 169 | 170 | 171 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உரைகோளாளன் முதல் - உரோமரேகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உரோகிணி, உரைசுதல், நூல், தேய்தல், காண்க, தேய்த்தல், ஒன்று, சொல்லுதல், பலராமன், நோய், ஒருவர்க்கொருவர், செய்தல், சினம், அழுகை, உரிஞ்சுதல், செந்தாமரை, உரைகாரர், கடுகு, அழுதல், சொல்லுகை, உரைத்தல், சிலிர்ப்பு, மயிர்ச், மயிர்ச்சிலிர்ப்பு, என்றல், உரைப்பாட்டு, தீர்ப்பு, உரைபாடம், சொல், தேய்ப்பு, நூலுக்கு

