முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உருவத்திருமேனி முதல் - உரைகோள் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உருவத்திருமேனி முதல் - உரைகோள் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
உருவெளிக்காட்சி | இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் . |
உருவெளித்தோற்றம் | இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் . |
உருவெளிப்பாடு | இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் . |
உருவேற்றுதல் | மந்திரத்தைப் பலமுறை உருவேற்றல் ; மனப்பாடம் செய்தல் ; ஆவேசமேற்றுதல் ; தீயவுரை செய்தல் . |
உருவேறுதல் | மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல் ; தெய்வ ஆவேசம் ஏறல் . |
உருவை | சூரைச்செடி ; முள்ளிப்பூண்டு . |
உருவொளி | கண்ணாடி முதலியவற்றிற் காணும் நிழல் . |
உருள் | தேருருளை ; வண்டி ; உரோகினி ; வட்டம் . |
உருள் | (வி) புரள் ; உருட்டு ; திரள் ; அழி . |
உருள்வண்டு | பீவண்டு . |
உருளரசி | கொத்துமல்லி . |
உருளாயம் | சூதாட்டம் ; கவற்றினால் பெற்ற வரவு ; சூதாட்டத்தால் வரும் இலாபம் . |
உருளி | உருளை ; வட்டம் ; எலும்பு மூட்டு ; வட்ட வடிவான வெண்கலப் .£ண்டம் ; உரோகிணி நாள் ; தேருருளை எந்திரத்தினது மேற்கல் . |
உருளிபுரளுதல் | எலும்புப் பொருத்து விலகுதல் . |
உருளிபெயர்தல் | எலும்புப் பொருத்து விலகுதல் . |
உருளுதல் | புரளுதல் ; உருண்டையாகத் திரளுதல் ; அழிதல் ; செல்லுதல் . |
உருளை | உருண்டை ; சக்கரம் ; உரோகிணி நாள் ; திரண்டு உருண்ட பொருள் ; முட்டை . |
உருளைக்காந்தம் | ஒருவகைக் காந்தக்கல் . |
உரூட்சம் | மொந்தன் வாழைக்கிழங்கு . |
உரூடி | இடுகுறி ; பெயர்பெற்றது ; காரியத்தைக் கொண்டு காரணத்தை தீர்மானித்தல் . |
உரூப்பியம் | அழகுள்ளது ; வெள்ளி ; வெள்ளி நாணயம் ; வெள்ளி வகை ; வெள்ளை |
உரூபகம் | உருவகம் ; உரூபகதாளம் ; சான்று . |
உரூபகாரப்படுத்துதல் | மெயப்பித்தல் . |
உரூபகாரம் | சான்று ; மேற்கோள் . |
உரூபம் | உருவம் ; வடிவம் ; அடையாளம் ; விக்கிரகம் ; நிறம் ; அழகு ; நிலை ; சாயை . |
உரூபா | காண்க : உருபா . |
உரூபாவதி | அழகுடையவள் . |
உரூபிகரம் | உருவமெடுக்கை . |
உரூபித்தல் | மெயப்பித்தல் . |
உரை | உரைக்கை ; சொல் ; பொருள் விளக்கம் ; ஒலி ; பேச்சு ; மொழி ; முழக்கம் ; ஆசிரியவசனம் ; ஆகமப்பிரமாணம் ; மாற்றுரை ; விடை ; பொன் ; புகழ் ; தேய்வு ; எழுத்தின் ஒலி ; புகழுரை ; விரிவுரை . |
உரை | (வி) தேய் ; ஒலி ; சொல் ; பேசு . |
உரைக்கிழத்தி | கலைமகள் . |
உரைக்கை | விரித்துச் சொல்லுகை . |
உரைக்கோள் | உரைகாரன் கருத்து . |
உரைகட்டுதல் | நூலுக்கு உரைசெய்தல் ; விளக்கங் கூறுதல் . |
உரைகல் | பொன்னின் மாற்று அறிதற்காக அதனை உரைக்கும் சிறு கல் . |
உரைகலங்குதல் | பேச்சுத் தடுமாறுதல் . |
உரைகாரன் | உரையாசிரியன் . |
உரைகோள் | நூலுக்குரிய உரையில் சொல்லப்படுவன ; சொற்பிரிப்பு ,சொற்பொருள் , தொடர்மொழியை விளக்குதல் , குறிப்புப் பொருள் ,வினா விடை முதலியன . |
உருவத்திருமேனி | வடிவுடையராகக் கருதப்படும் கடவுள் . |
உருவபாவனை | இறைவனை உருவமுடையவனாக வழிபடுகை . |
உருவம் | வடிவம் ; உடல் ; அழகு ; நிறம் ; வேடம் ; சிலை ; மந்திரவுரு ; கூறு ; தெய்வத் திருமேனி . |
உருவரை | செழிப்புள்ள நிலம் , நல்ல நிலம் . |
உருவல் | ஒருவகைக் காதணி . |
உருவழிதல் | உருக்கெடுதல் ; மேனி வேறாதல் , அழகு கெடுதல் ; முழுதும் சிதைதல் . |
உருவறை | உடலழகற்றவன் ; உருவழகற்றவன் . |
உருவாக்குதல் | உண்டுபண்ணுதல் ; உருவமுடையதாகச் செய்தல் ; சீர்ப்படுத்தல் . |
உருவாணி | அச்சாணி ; மெலிந்தவுடல் ; தேய்ந்துபோனது . |
உருவாணிபற்றுதல் | தேய்ந்துபோதல் ; மெலிவடைதல் . |
உருவாதல் | வடிவுறுதல் ; சீர்ப்படுதல் . |
உருவாரச்சம்மட்டி | வீழிச்செடி . |
உருவாரம் | பிரதிமை ; வெள்ளரி . |
உருவி | நாயுருவிச்செடி ; புல்லுருவி ; செம்முள்ளி ; உருவுடையது . |
உருவியழுதல் | விம்மியழுதல் . |
உருவிலாளன் | மன்மதன் , காமன் . |
உருவிலாளி | மன்மதன் , காமன் . |
உருவிலி | மன்மதன் , காமன் . |
உருவினகோலம் | கதியற்ற நிலைமை . |
உருவு | உருவம் ; வடிவு ; அழகு ; அச்சம் . |
உருவு | (வி) உருவு என்னும் ஏவல் ; ஊடுருவு . |
உருவுசுருக்கு | சுருக்கு முடிச்சு . |
உருவுதடம் | சுருக்கு முடிச்சு . |
உருவுதல் | உறை கழித்தல் ; கையால் பொருள் வரும்படி உருவுதல் ; ஊடுருவுதல் ; அழுத்தித் தடவுதல் ; துளைத்தல் ; தப்பித்துக் கொள்ளுதல் . |
உருவுள்ளு | கொள்ளுப்பூண்டு . |
உருவெழுத்து | வரிவடிவுள்ள எழுத்து . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 166 | 167 | 168 | 169 | 170 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருவத்திருமேனி முதல் - உரைகோள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், தோற்றம், அழகு, உருவம், செய்தல், உருவு, காமன், வெள்ளி, சொல், மன்மதன், மருட்சித், பொருளின், எதிரில், நினைப்பினால், இடைவிடா, காணப்படுவதுபோல், தோன்றும், மனத்திலுள்ள, போலித், உரைக்கை, விடை, உருவுதல், நிறம், முடிச்சு, சுருக்கு, நிலம், உரைகாரன், எலும்புப், உருளை, உரோகிணி, வட்டம், தேருருளை, உருள், நாள், பொருத்து, மெயப்பித்தல், சான்று, ஒருவகைக், விலகுதல், வடிவம்