தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
1932
சட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
1932
அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.
1934
போப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.
1937
1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.
எளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.
1925
ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.
1928
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
1921
பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1937
சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.
1938
ஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.
1938
தமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.
1939
தாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இந்தி, சட்டம், கொண்டு, அளித்தது, வரப்பட்டது, கல்வி, கொள்கை, உருவாகியது, கிடைக்க, அரசர், போப்பிலி, மறுப்பு, முதலமைச்சர், நாள், தலைமையில், ஆனார், குமரன், சட்ட