தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
1918
முதல் உலகப் போர் முற்றுப் பெற்றது.
1920
தன்னாட்சி கட்சி (Home Rule League) தோற்றுவிக்கப்பட்டது. சுப்புராயுலு தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. வில்லிங்டன் சென்னை ஆளுநர்.
1921
தேவதாசியர் என்ற பெண்ணடிமை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது. பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர்.
1922-1988
அகிலன் பிறந்தது பெங்களூர், புதுக்கோட்டை மாவட்டம். 1938லிருந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். அவருடைய 'பெண்' என்ற நாவல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அதன் முதல் ஆண்டிலேயே முதற் பரிசை பெற்றது. அதைத் தொடர்ந்து அவருடைய நாவல் படைப்புகள் ஞானப்பீடப் பரிசு, சாகித்திய அகதமிப் பரிசு, நேரு பரிசு, போன்ற ஏராளமான பரிசுகளைப் பெற்றன. அவருடைய படைப்புகள் வார்த்தைகளால் கட்டப்பட்ட கலை வடிவங்கள்.
1923
தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.
1924
ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.
1925
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.
1926
தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.
1927-1981
கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.
1930
முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.
1930-1959
பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.
1931
காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தலைமையில், அவருடைய, பரிசு, நாவல், கட்சி, தன்னாட்சி, கண்ணதாசன், ", தங்க, கவிஞர், ஏற்படுத்தினார், பெற்றது, படைப்புகள், அமைச்சரவை, தொடர்ந்து