சிலப்பதிகாரம் - இரண்டாம் நூற்றாண்டு
கண்ணகி தன் விலையுயர்ந்த கால் சிலம்பை மூலப்பொருளாகக் கொடுத்தாள். இருவரும் கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவி துணையுடன் மதுரை அடைந்தனர். கண்ணகி, ‘மாதரி’ என்னும் இடையர் குலத்துப் பெண் வீட்டில் அடைக்கலப்படுத்தப்பட்டாள். கோவலன் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றான். பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனாக, ஒரு பொற்கொல்லனால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, மன்னனால் கோவலன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த கண்ணகி, பாண்டியன் அவையில் வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்று மெய்ப்பித்தாள். தன் பிழை உணர்ந்த பாண்டியன் உயிர் துறந்தான். சினம் அடங்காக் கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கினாள். மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைந்தாள். அங்கே ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நின்றபோது, தேவர்கள் வந்து இறந்த கோவலனை அவளுக்குக் காட்டி, தம் ஊர்தியில் அவர்களை ஏற்றி விண்ணுலகிற்கு இட்டுச் சென்றனர்.
கண்ணகி |
இமயமலையில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி, தமிழர் வீரத்தைப் பழித்த கனகவிசயர் தலைமீது அதனை ஏற்றிவந்து, வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் நிறுவினான். அவ்விழாவிற்குத் தமிழரசர்களும் குடகுநாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கை மன்னன் கயவாகுவும் வந்தனர். அவர்கள் வேண்டுதலை ஏற்று அவர்களின் நாட்டிலும் எழுந்தருளுவதாகப் பத்தினித் தெய்வம் வரம் கொடுத்தது. கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனுக்கும் பிறருக்கும் காட்சியளித்ததோடு பாண்டியன் குற்றமற்றவன் என்றும், தான் அவனுடைய மகள் என்றும், வென்வேலான்குன்றத்தில் தான் எப்போதும் விளையாடப் போவதாகவும் கூறி மறைந்தாள். தேவந்தியின் மேல் தோன்றி வரலாற்றைக் கூறினாள்.
சிலப்பதிகாரத்தின் சிறப்புச் செய்திகள்
இளங்கோவடிகளின் கற்பனைத் திறன், பக்தி இலக்கிய முன்னோடியாக அமைந்தமை, பத்தினியின் பெருமை, முத்தமிழ்த் தன்மை, வரலாற்றுச் சிறப்பு ஆகிய சிறப்புச் செய்திகளைப் பற்றிப் பார்ப்போம்.
இளங்கோவடிகளின் கற்பனைத் திறன்
சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று. ஒரு பேரிலக்கியத்தில் எதிர்பார்க்கும் அனைத்துச் சுவைகளும் இதில் உண்டு. அடிகளின் கற்பனை வளத்திற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் காண்போம்.
அடிகளின் கற்பனைத் திறத்திற்கு நல்ல சான்றாக அமைவது அவருடைய வையை வருணனையாகும். வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி என்று புகழும் அடிகள், அக்கொடியின் பேரழகினை வருணிக்கும் அழகே அழகு!
இவ்வாறே மதுரைக் கோட்டையின் மீது பறக்கும் பாண்டியனின் வெற்றிக் கொடிகளைப் பாராட்டும் அடிகள்,
போருழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட (மதுரைக்காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை, வரிகள்: 189-190) |
என்றார். பாண்டியன் கோட்டை மீது நாட்டிய வெற்றிக் கொடிகள், கண்ணகிக்கும், கோவலனுக்கும் விரைவில் வரப் போகும் துயரத்தை மனம் கொண்டு அவர்களை நோக்கி “மதுரைக்கு வாராது நீங்குக” என்பது போல் மறித்து ஆடின என்கின்றார். இவ்வாறே வையை, தன் உடம்பைப் பூவாடையால் போர்த்துக் கொண்டும், தன் கண்ணீரை அடக்கிக் கொண்டும் சென்றாள் என்கிறார். அடிகளின் கற்பனை ஆற்றலை வரிப்பாடல்களால் தெளிவாக உணரலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Silappatikaram - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கண்ணகி, சிலப்பதிகாரம், இலக்கிய, பாண்டியன், நூற்றாண்டு, இரண்டாம், கற்பனைத், அடிகளின், தமிழ், என்னும், வையை, தகவல்கள், தமிழ்நாட்டுத், நூல்கள், கற்பனை, தான், சிறப்புச், இளங்கோவடிகளின், திறன், இவ்வாறே, கொண்டும், | , போல், வெற்றிக், என்றும், மீது, அடிகள், நோக்கி, information, சிலம்பை, tamilnadu, list, tamil, literatures, பெண், கோவலன், வந்து, அவர்களை, century, குற்றமற்றவன், கொண்டு, silappatikaram, தெய்வம்