கடலூர் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள் :
நெய்வேலி :
விழுப்புரத்திற்கும்-கடலூருக்கும் இடையில் உள்ளது. 1870-ஆம் ஆண்டிலேயே நெய்வேலியில் நிலக்கரி இருப்பது ஆங்கிலேயருக்குத் தெரியும். 1943-44 ஆண்டுகளில் இங்கு 100 சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ 250 கோடி டன்கள் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் இவ்விடம் பெரும்காடாகக் கிடந்தது. 1953-இல் 145 அடி தோண்டப்பட்டது.
நெய்வேலி |
உரம் :
ஆண்டுதோறும் 5 இலட்சம் டன் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உரத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
பி.அண்டு.சி. ஆலை :
Briquetting and Corbonisation Plant :
பழுப்பு நிலக்கரியைப் பதப்படுத்தி வீடுகளின் உபயோகத்திற்கான கரியாக அதை மாற்றியமைப்பதைத் தவிர இந்த ஆலையிலிருந்து பெறப்படும் வேறு பொருள்கள்: கரித்தூள், தார், நியூட்ரல் எண்ணெய், கார்பாலிக் அமிலம், பினால், ஆர்த்தோ கிரிசோல், மெட்டா மற்றும் பாராகிரிசோல், சைலினால்.
நெய்வேலி நகரியம் :
இந்நகர் 31 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 10கி.மீ நீளமும், 3கி.மீ அகலமும் கொண்ட இந்நகரில் 10,000 க்கு அதிகமான பணியாளர்கள் வாழ்கின்றனர்.
கடலூர் புதுநகர் :
சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.
பண்ணுருட்டி :
பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.
நெல்லிக்குப்பம் :
முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.
பரூர் :
விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.
சத்திய ஞான சபை |
கடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் உள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை, தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.
புகழ்பெற்ற பெருமக்கள் :
அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன், தி.கி.நாராயணசாமி நாயுடு முதலியோர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கடலூர், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, வடலூர், இங்கு, பெயர், வருகிறது, பண்ணுருட்டி, உள்ளது, நெய்வேலி, தமிழ்நாட்டுத், தகவல்கள், மில், | , பேப்பர், முதலியார், சிலையும், விருத்தாசலம், சத்திய, அதில், நெல்லிக்குப்பம், உற்பத்தி, நிலக்கரி, இருப்பது, information, districts, cuddalore, மைல், கொண்டு, நகருக்கு, அருகில், எண்ணெய், பழுப்பு, மின்விசை, கல்வி