கடலூர் - தமிழக மாவட்டங்கள்
திருப்பாதிரிப் புலியூர் :
இறைவன் : தோன்றாத்துணைநாதர், அம்மை : தோகையம்பிகை. கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது. புலிக்கால் முனிவர் பூசித்ததால் இப்பெயர் பெற்ற தென்பர். அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, "சொற்றுணை வேதியன்" என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
திருவயிந்திரபுரம் கோயில் |
வைணவத் தலம். பெருமாள்: தேவ நாதர், தாயார்: வைகுந்த நாயகி. திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் " இராப்பத்து பகல்பத்து" உச்சவம், "சொர்க்க வாசல் திறப்பு விழா" சிறப்பாக நடைபெறும்.
திருமாணிக்குழி :
திருவயிந்திரபுரம் கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ளது-இவ்வூர்; இறைவன்-மாணிக்கவரதர்; இறைவி-மாணிக்கவல்லி; ஆண்டவன் முன்பு எப்போதும் திரை இடப்பட்டே இருக்கும். திரையில், பதினொரு உருத்திரர்களுள் ஒருவரான வீமர் என்பாரின் திரு உருவம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு எல்லாவித பூசையும் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகே திரை விலக்கப்பட்டு இறை வழிபாடு நடைபெறுகிறது. மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவம் கொண்டு மாவலியை அழித்தபின், இங்கு வந்து சிவனை வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. கோயிலில் இலிங்கம் இருக்கும் பகுதி, சிறிது பள்ளமாக இருக்கும். எப்போதும் அங்கே தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும், எனவே மாணி வழிபட்டக் குழி மாணிக்குழி ஆயிற்று.
திருத்தினை நகர் :
புதுச்சத்திரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது- இறைவன் பெயர்-சிவக் கொழுந்தீசர். இறைவி-இளம் கொம்பனாள். அதிசயிக்கத்தக்க வகையில் தினை விளைந்த காரணத்தால் 'திருத்தினை நகர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூரிலுள்ள தாமரைக் குளம்நோய் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
திருச்சோபுரம் :
கடலூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை தியாகவல்லி என்றும் அழைக்கின்றனர். முதல் குலோத்துங்க சோழ மன்னனின் பட்டத்தரசி தியாக வல்லி,திருப்பணி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவன்பெயர்: சோபுரநாதர் இறைவி: சோபுர நாயகி.
திரு அதிகை :
'அதியரைய மங்கை' என்ற பெயரே 'அதிகை' ஆகிவிட்டது. கெடிலம் ஆற்றின் வடகரையில் பண்ணுருட்டிப் புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கில் 1 1/2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மகேந்திரவர்மன் இங்கு 'குணதரவீச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டியுள்ளளான். இறைவன்-அதிகை வீரட்டநாதர், அம்மை-அதிகைநாயகி. இக்கோவிலின் அமைப்பும், சிற்பங்களும் காணத்தக்கவை.
திருநெல்வாயில் :
இறைவன் பெயர் : உச்சிநாதர், இறைவி : கனகாம்பிகை. சிவபுரி என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவில் உள்ளது-
திருக்கழிப்பாலை :
காரைமேடு எனவும் குறிப்பிடப்பெறும் இவ்வூர் சிவபுரிக்கு அருகில் உள்ளது. இறைவன்: பால் வண்ண நாதர், இறைவி : வேதநாயகி.
திருவேட்களம் :
இறைவன்-பாசுபசுதேசுரர், இறைவி-நல்லநாயகி. திருவேட்களம் என்ற ஊரே தற்போது அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு அம்பு கொடுக்கும் விழா, வைகாசித் திங்கள்-விசாக நாளில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருநாரையூர் :
சிதம்பரத்திற்கு தென் மேற்கே, காட்டு மன்னார்குடி செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. நாரை பூசித்தஊர் என்பது ஐதீகம். மூவர் தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பிறந்து ஊர். அவரால் பூசிக்கப்பட்ட பொல்லாப்பிள்ளையாரும் இங்கு உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தொலைவில், இறைவன், கடலூர், இறைவி, திருப்பாதிரிப், புகைவண்டி, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, என்னும், சிறப்பாக, பெயர், நடைபெறுகிறது, திருவயிந்திரபுரம், நகர், நிலையத்திற்கு, தலம், ", இருக்கும், புலியூர், மாணி, தமிழ்நாட்டுத், தகவல்கள், என்றும், இங்கு, அதிகை, திருத்தினை, திரு, என்பது, அருகில், திருவேட்களம், | , அழைக்கப்படுகிறது, தற்போது, உள்ள, ஏற்பட்டது, வைணவத், மேற்கில், கோவில், இப்பெயர், அம்மை, information, cuddalore, districts, கொண்டு, மாதத்தில், இவ்வூர், எப்போதும், நடைபெறும், அமைந்துள்ளது, நாதர், நாயகி, திரை