கடலூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | கடலூர் |
பரப்பு : | 3,678 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,605,914 (2011) |
எழுத்தறிவு : | 1,815,281 (78.04 %) |
ஆண்கள் : | 1,311,697 |
பெண்கள் : | 1,294,217 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 704 |
பெயர்காரணம் :
கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
வரலாறு :
(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).
எல்லைகள் :
தெற்கே அரியலூர் மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
சட்டசபை தொகுதிகள் :
9. (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்குடி(தனி), சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர்(தனி).)
பாராளுமன்ற தொகுதிகள் :
2 கடலூர், சிதம்பரம்
நீர்வளம் :
இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.
வீராணம் ஏரி |
வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது. வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது.
கனிவளம் :
இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை. களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.
பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது. மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.
வேளாண்மை :
சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர். கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன. கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கடலூர், ஹெக்டேர், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, பரப்பு, மாவட்டமும், உள்ள, தகவல்கள், தமிழ்நாட்டுத், பயன், பாசனம், நிலத்திற்குப், அளிக்கிறது, பெறுகிறது, அதிகம், | , விளைகிறது, விளைகின்றன, கிடைக்கின்றன, களிமண், சிதம்பரம், மக்கள், பரவனாறு, information, districts, cuddalore, இடங்களில், விழுப்புரம், ஆறுகளும், கொள்ளிடம், இம்மாவட்டத்தில், பண்ருட்டி, தொகுதிகள், வீராணம்