விலங்கியல் :: மக்கள் நல்வாழ்வு
61. பாஸ்டர் முறை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
1856 இல் லூயி பாஸ்டர் என்பரால் உருவாக்கப்பட்டது.
62. நுண்ணமழித்தல் என்றால் என்ன?
வெப்பம், வேதிப்பொருள் முதலியவை கொண்டு நுண்ணுயிர்களை அழித்தல்.
63. முதலுதவி என்றால் என்ன?
ஏற்பட்ட புண் அல்லது கோளாறுக்கு உடன் வீட்டில் செய்யப்படும் உதவி, எ-டு காயத்திற்குப் புரைத்தடுப்பு மருந்து போடுதல்.
64. வீட்டில் முதலுதவி செய்வதற்கு இருக்க வேண்டியவை யாவை?
அயோடின் கரைசல், பஞ்சு, கட்டுந் துணி, புரைத்தடுப்புக் களிம்புகள். இவற்றை முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
65. முதலுதவிப் பெட்டி எங்கு வைக்கப்பட்டிருக்கும்?
பேருந்து, தொழிற்சாலை முதலிய இடங்களில் இப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். தொழிற்சாலைச் சட்டப்படி இது இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
66. எவ்வாழ்வு மக்கள் நல்வாழ்விற்கேற்றது.?
இயற்கையோடு இயைந்த வாழ்வு. சித்தர்கள் வற்புறுத்துவது இவ்வாழ்வையேதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -