விலங்கியல் :: மக்கள் நல்வாழ்வு
21. இது ஏற்படக் காரணம் என்ன?
1. எண்டமீபா.
2. வேதி உறுத்துபொருள்கள்.
22. வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
மலம் நீர்மமாகச் செல்லுதல். இது வயிற்றுக் கோளாறு.
23. ஆக்டினோமைகோசிஸ் என்றால் என்ன?
ஆக்டினோமைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சிய உயிரியால் உண்டாகும் கால்நடை நோய்.
24. இந்நோயின் அறிகுறிகள் யாவை?
நுரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ்வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும்.
25. கொள்ளை நோய் (எபிடமிக்) என்றால் என்ன?
பெருமளவில் பரவி அழிவை உண்டாக்குவது. எ-டு. காலரா.
26. இடநோய் (எண்டமிக்) என்றால் என்ன?
எல்லாக் காலங்களில் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங் களில் உள்ளது. எ-டு. மலேரியா.
27. காலரா (கழிநோய்) என்றால் என்ன?
மிகக் கொடிய கொள்ளை நோய் விப்ரியோகோமா என்னும் நுண்ணுயிரியால் உண்டாவது. நீரினால் பரவுவது.
28. இதன் அறிகுறிகள் யாவை?
கஞ்சி போன்ற கழிவு வெளியேறும், குமட்டல், தசைப் பிடிப்பு காணப்படும்.
29. இதைப்போக்கும் வழிகள் யாவை?
உடன் உப்பு நீர் உட்கொள்ள வேண்டும்.தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும்.
30. பச்சைநோய் என்றால் என்ன?
இளம் பெண்களிடம் காணப்படும் ஒரு வகை குருதிச் சோகை,
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நோய், யாவை