விலங்கியல் :: மக்கள் நல்வாழ்வு
31. தீயுறுகட்டி என்றால் என்ன?
சில புதுக்கணியங்கள் மிகுதியாகப் பெருகுதல். இவை தடுக்கப்படாவிடில் புற்று நோயாக மாறும்.
32. சர்க்கரை நோய் என்றால் என்ன?
மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குறைவால் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகிய இரண்டின் மூலம் கட்டுப்படுத் தலாம்.
33. நோய்களில் உடன் கொல்லக் கூடியது எது?
மாரடைப்பு நோய்.
34. நோய்களில் இன்னும் குணப்படுத்த இயலாத நோய் எது?
புற்றுநோய்.
35. தீராத நோய்களை எப்படிப் போக்க இயலும்?
ஆராய்ச்சி நிலையில் இருக்கும் மரபுப் பண்டுவம் செயல் நிலைக்கு வருமானால், இந்நோய்கள் பெனிசிலின் ஊசிபோட்டு நீக்குவது போலப் போக்கப்படும்.
36. பெனிசிலின் வந்த பின் அறவே ஒழிந்த நோய் எது?
பிளவை நோய்.
37. நைட்ரஜன் சமநிலை என்றால் என்ன?
ஒர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு. வளரும் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி +; நோயாளிகளிடத்து எதிர்க்குறி - .
38. வெண்ணியம் என்றால் என்ன?
ஒர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா.
39. ஆல்புமின் என்றால் என்ன?
இது கோளப்புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும். வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளா கும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது.
40. மலச்சிக்கல் என்றால் என்ன?
செரிக்கப்படாத உணவுப்பொருள்கள் கழிவுக் குடலில் இறுகிக் குறிப்பிட்ட காலத்தில் (48மணி நேரம்) கழிவாக வெளியேறாத நிலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோய், என்ன, என்றால்