விலங்கியல் :: மக்கள் நல்வாழ்வு
41. இதைப்போக்கும் இயற்கை வழிகள் யாவை?
1. ஒரு நாளைக்கு ஒரு தடவை மலங்கழிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுதல்.
2.தாது உப்புக்கள், வைட்டமின்கள்,செல்லுலோஸ் ஆகியவை காய்கிறி, கீரைகளில் உள்ளதால், அவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
3. படுக்கப்போகும் முன் ஒரு குவளை நீர் தவறாது அருந்துதல்.
4. ஒன்று இரண்டு வாழைப்பழங்கள் இரவில் சாப்பிடுதல்.
42. தடுப்பாற்றல் உருவாக்கல் என்றால் என்ன?
நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு ஒர் உயிரினைச் செய்தல்.
43. தடுப்பாற்றல் என்றால் என்ன?
நோய், நச்சு முதலிய தீய விளைவுகளைத் தாக்குப் பிடிக்கும் ஓர் உயிரியின் திறன்.
44. தடுப்பாற்றல் எத்தனை வகைப்படும்?
1. இயற்கைத்தடுப்பாற்றல் - தெளி நீர், வெள்ளணுக்களால் ஏற்படுவது. வாழ்நாள் முழுவதும் இருப்பது.
2. செயற்கைத்தடுப்பாற்றல் - சில நோய்களைத் தடுக்க ஊசி போட்டுக்கொள்ளுதல். மாத்திரைகள் சாப்பிடுதல் - இது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும்.
45. நசிதல் என்றால் என்ன?
உடல் உறுப்பு செயல்திறன் இழத்தல்.
46. தன்தடுப்பாற்றல் என்றால் என்ன?
ஒர் உயிரியின் உடல் திசுக்களுக்கு எதிராகவே அவற்றில் எதிர்ப்புப் பொருள்கள் உண்டாதல்.
47. தன்நஞ்சாதல் என்றால் என்ன?
உடலுக்குள்ளேயே உண்டாகும் பொருள்களால் நஞ்சாதல் நடைபெறுதல்.
48. தொற்றுத் தடுப்பு என்றால் என்ன?
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவையில்லா உயிர்கள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை.
49. தொற்றுத் தடுப்புக்கொடி என்றால் என்ன?
தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி. புள்ளியுள்ள மஞ்சள் நிறங்கொண்டது. கப்பலில் எவருக்கேனும் தொற்றுநோய் இருக்குமானால் இக்கொடி பறக்க விடப்படும்.
50. தன்தொற்று என்றால் என்ன?
இது ஒரு நோய்த்தொற்று. எ-டு. பூஞ்சை தன் வாழ்க்கைக் சுற்றை ஒம்புயிரியில் முடித்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், தடுப்பாற்றல்