விலங்கியல் :: மக்கள் நல்வாழ்வு
11. புண்கள் என்றால் என்ன?
தீ, வெப்பம், வேதிப்பொருள் முதலியவற்றால் தோல் திசுக்கள் தைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால், கட்டுப் போட வேண்டும்.
12. புண்களின் வகைகள் யாவை?
1. செம்புண்
2. கொப்புளப் புண்
3. தோல்நீங்குபுண்
4. தீப்புண்
13. நைவுப்புண் என்றால் என்ன?
நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.
14. கன்றிப்புகள் என்றால் என்ன?
ஊமைக் காயங்கள், தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் கருஞ்சிவப்பாதல்.
15. தும்மல் என்றால் என்ன?
இச்செயலில் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள் மூச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி முக்கு வழியாகவும் பாதி வாய் வழியாகவும் காற்று செல்லும். நெடி, நுண்கிருமிகள் முதலியவை இதற்குக் காரணிகள்.
16. குறட்டை விடுதல் என்றால் என்ன?
உள்நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் மூச்சுவிடுவதால் இது நடை பெறுகிறது.
17. சுளுக்கு என்றால் என்ன?
ஒர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். சுளுக்கு வழிக்கலாம். அல்லது வலி நீக்கியைத் தடவலாம்.
18. அடைகாலம் என்றால் என்ன?
ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம். இது சில நாட்களில் அமையும். எ-டு. நீர்க் கொள்ளல், காய்ச்சல், அம்மைவார்த்தல்.
19. காய்ச்சல் என்றால் என்ன?
வெப்பத்தால் உடல் இயல்பான வெப்பநிலைக்கு மேல் உயருதல். ஒரு நோயின் அறிகுறி. அம்மை வருவதற்கு முன் கடும் காய்ச்சல் உண்டாகும். காய்ச்சல் முறைக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் எனப் பல வகைப்படும்.
20. வயிற்றுக்கடுப்பு என்றால் என்ன?
வயிறு அளைந்து கொண்டு அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறும் நிலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, காய்ச்சல், ஏற்படும், முதலியவை, புண்