இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 3
21. வெப்பம் மாறா நிகழ்வு என்றால் என்ன?
இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக இருப்பதால், வெப்பம் சுற்றுப்புறங்களுக்குச் செல்லாமல் கலத்தினுள்ளேயே இருக்கும். எ-டு. உலர்பனிக்கட்டி.
22. குறைந்த வெப்பநிலையைப் பெறும் முறைகள் யாவை?
வளிகளை நீர்மமாக்கிக் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். காட்டாக, ஜூல்-கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம்.
23. குளிர்ப்பதனம் எந்நெறிமுறையில் அமைந்துள்ளது?
வெப்ப நிலையைக் குறைக்கும் நெறிமுறையில் அமைந்துள்ளது.
24. குளிரியல் என்றால் என்ன?
மிகக் குறைந்த வெப்பநிலைகளை உண்டாக்குவதைப் பற்றி ஆராயுந்துறை.
25. குறைந்த வெப்பநிலை என்பது என்ன?
- 150 செக்குக் கீழுள்ள வெப்பநிலை.
26. தனிவெப்பநிலை என்றால் என்ன?
தனிச்சுழியில் அளக்கப்படும் வெப்பநிலை. கெல்வின் அளவு 0 K.
27. தனிச்சுழி என்றால் என்ன?
துகள்கள் தம் இயக்க ஆற்றலை எல்லாம் இழக்கும் வெப்பநிலை. இது 273.15 செ. இக்கருத்தைக் கூறியவர் லார்டு கெல்வின், 1851.
28. வெப்பநிலை என்றால் என்ன?
ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது சூட்டின் அளவு. அலகு பாகை செல்சியஸ்.
29. வெப்பநிலைமானி என்றால் என்ன?
வெப்பநிலையை அளக்கப் பயன்படுங் கருவி.
30. வெப்பநிலைமானியின் வகைகள் யாவை?
செல்சியஸ் வெப்பநிலைமானி, பாரன்ஹைட் வெப்பநிலைமானி, மருத்துவ வெப்பநிலைமானி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வெப்பநிலை, வெப்பநிலைமானி, குறைந்த, கெல்வின்