மருத்துவம் :: மகளிர் நலம்
41. டிரண்டலன் பர்க் நிலை என்றால் என்ன?
மகளிர் நோய் இயல் அறுவை நோயாளி மேற்கொள்ளும் நிலை. இடுப்பு வளையத்தைக் காட்டிலும் தலை தாழ்ந்தும், இவ்வளையம் முழங்கால்களைக் காட்டிலும் தாழ்ந்தும் இருக்கும். அதாவது நோயாளி தலைமாடு தாழ்வாகவும் கால்மாடு உயர்வாகவும் இருக்குமாறு படுக்கையில் படுத்திருப்பார்.
42. கிம் நிலை என்றால் என்ன?
பெண்களின்புணர்வழி ஆய்வுக்குரிய அரைக்குப்புற நிலை.
43. இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
1000த்தை நிலை எண்ணாகக் கொண்டு பிறப்பு இறப்பு அடிப்படையில் கணக்கிடப்படுவது.
44. ஆண்டு இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பதிவு செய்யப்பட்ட இறப்புகள் x 1000 அந்த ஆண்டு நடுப்பகுதி மக்கள் தொகை
45. குழந்தை இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒராண்டில் குழந்தை இறப்புகள் X 1000 பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்
46. தாய் இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
கருவுற்று இறக்கும் பெண்கள் X1000 பதிவு செய்யப்பட்ட உயிருள்ள உயிரற்ற பிறப்புகள்.
47. பேற்றுத் துணை இயல் என்றால் என்ன?
பிள்ளைப்பேற்று நடவடிக்கைகளை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைக் கவனிப்பவர் பேற்றுத் துணைவி அல்லது மருத்துவச்சி.
48. செவிலியர் படிப்பு என்றால் என்ன?
நோயாளிகளையும் காயமுற்றோரையும் கவனிப்பதில் பயிற்சியளித்தல். பெண்களே இதற்குத் தேர்ந்தெடுக் கப்படுவார்கள். செவிலியர் இல்லாத மருத்துவமனை இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் நலம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிலை, இறப்பு, கணக்கிடப்படுகிறது, எவ்வாறு, வீதம், என்ன, என்றால், செய்யப்பட்ட, பதிவு